ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (65)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2017
00:00

ஹாய்... குட்மார்னிங் எவ்ரிபடி...
எப்படி பேசணும், எப்படி பேசக்கூடாது... என்ற பகுதிக்கு மிக மிக வரவேற்பு கொடுத்திருந்தீர்கள்... இன்னும் சில சந்தேகங்களை ஆளாளுக்கு கேட்டிருந்தீர்கள்... அவற்றையும் சொல்லி தருகிறேன், கற்றுக் கொள்ளுங்கள்...
1. அவள் என் கசின் ஆவார்.
She is my cousin sister, cousin brother என்று சிலர் சொல்வர். இது தவறு.
She is my cousin என்பதே சரி.

2. நாம் எப்போதும் உண்மையை பேச வேண்டும் என்பதை சிலர்,
we must always say the truth என்பர்; இது தவறு.
We must always speak truth என்பதே சரி.

3. இரண்டு நாட்களாக ராணிக்கு உடம்பு சரியில்லை என்பதை,
Rani is ill for two days என்று சொல்லக் கூடாது.
Rani has been ill for two days என்று தான் சொல்ல வேண்டும்.

4. என் அம்மா என்னிடம் கோபமாக இருந்தார்.
My mom was angry at me என்பது தவறு.
இங்கே ஒரு நபரிடம் கோபப்படுவது என்று சொல்லும் போது
My mom was angry with me என்பதே சரி.

5. என் சோம்பேறித்தனத்தால் அம்மா என்னிடம் கோபமாக இருந்தாள்.
My mom was angry with my laziness என்று சொல்லக் கூடாது.
My mom was angry at my laziness என்று தான் சொல்ல வேண்டும்.
காரணம், ஒருவருடைய செயல் அல்லது தன்மையிடம் கோபப்படுவது angry at என்று சொல்ல வேண்டும்.

6. அந்த மனிதனுக்கு ஒரு கண் பார்வையில்லை.
That man is blind in one eye என்பது தவறு.
That man is blind of one eye என்பதே சரி.

7. அது உண்மையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
I wish it was true என்பது தவறு.
I wish it were true என்பதுதான் சரி.
ஆசையை வெளிப்படுத்தும்போது were உபயோகிக்கவும்.

8. அவன் குண்டாக இருந்தாலும், நிறைய வேலை செய்வான்.
Though he is fat, yet he works hard என்பது தவறு.
Though he is fat, he works hard என்பதே சரியானது.
Though, Yet ஆகிய இரண்டும் ஒரே வாக்கியத்தில் வராது.

9. நான், என் பர்ஸை தொலைத்து விட்டேன்.
I lost my money purse என்பது தவறு.
I lost my purse என்பதே சரி.

10. நான் காபி ஆர்டர் செய்தேன்.
I ordered for coffee என்பது தவறு.
I ordered coffee என்பதே சரி.

11. அவர்கள் பேருந்தில் வீட்டிற்கு சென்றனர்.
They went home in bus என்பது தவறு.
They went home by bus என்பதே சரி.

12. எனக்கு எழுதுவதற்கு பேனா இல்லை.
I have no pen for write என்பது தவறு.
I have no pen to write என்பதே சரி.

இவற்றை நன்றாக படித்து மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள்; மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
Untill then bye... bye...
Varshitha.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X