இந்த வார, ஸ்டுடண்ட்ஸ் க்ரவுன் பகுதியில் இடம் பெறுபவர், ஜோஷிதா; வயது 13. ஆந்திராவிலுள்ள, நகரி என்னும் ஊரில், லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கிறார்.
பல்வேறு பேச்சு போட்டி களிலும், ஓவிய போட்டி களிலும் பரிசுகள் பெற்றிருக்கிறார். இந்தியன் டேலன்ட் டெஸ்ட்டில், முதலாம் இடம் பெற்றுள்ளார்.
அபாகஸ், கீ - போர்டு, கராத்தே ஆகியவற்றிலும் பயிற்சி பெற்று வருகிறார். 'கலாபாரதி' உள்ளிட்ட இயக்கங்கள் நடத்திய கட்டுரை, கையெழுத்து மற்றும் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்று, பதக்கங்களை பெற்றிருக்கிறார்.
இளம்வயதிலேயே பன்முகத்திறன் பெற்றுள்ள ஜோஷிதா, மேலும் தன் வெற்றிகளை குவிக்க, சிறுவர்மலர் இதழ் சார்பாக, வாழ்த்துகிறோம்.
ஹாட்ஸ் ஆப் ஜோஷிதா!