நான், பல ஆண்டுகளாக, தினமலர் வாசகி! என் தந்தை தான், எனக்கு, 'சிறுவர்மலர்' இதழை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார். 46 வயதாகியும், இன்று வரை சிறுவர்மலர் இதழை தவறாமல் படித்து விடுவேன்.
தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். தினமலர் வாங்காத என் தோழியருக்கும், சிறுவர்மலரை கொடுத்து, அவர்கள் வீட்டு குழந்தைகள் பயன் பெற உதவுவேன். என் தந்தையும் சிறுவர்மலர் இதழ்களை, பல ஆண்டுகளாக, 'பைண்ட்' செய்து பாதுகாத்து வருகிறார்.
அதில் வரும் அறிவுப்பூர்வமான குட்டி செய்திகளும், கட்டுரைகளும் பொது அறிவை வளர்க்க உதவுகின்றன. தற்போது இணைந்துள்ள, 'ஹெல்த்தி கிச்சன், ஸ்கூல் கேம்பஸ், ஸ்போக்கன் இங்கிலீஷ், இளஸ்... மனஸ்...' போன்ற பகுதிகள், 'சூப்பர்!'
குழந்தைகள் மனதில் சிறுவயதிலிருந்தே நல்லவற்றை விதைக்க வேண்டும் என்பதில் சிறுவர்மலர் இதழின் பங்கு மகத்தானது.
உங்களின் சேவை என்றென்றும் தொடர, இனிதே வாழ்த்தி வணங்குகிறேன்.
- எல்.வரலட்சுமி, சென்னை.