தேன் மருத்துவம்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
தேன் மருத்துவம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2017
00:00

நம் நாட்டின், இயற்கை வைத்தியத்தில் சிறந்த இடத்தை பிடித்துள்ளது தேன். சித்த வைத்திய மருந்துகளை, தேனில் கலந்து மருந்தாக கொடுப்பது வழக்கம்.
மொந்தன் தேன், மலைத்தேன், குறிஞ்சி தேன், கொசுவந்தேன், திப்பிலித்தேன் என, தேனில் பலவகை உண்டு. மழை நன்கு பெய்தால், செடிகளிலும், மரங்களிலும், பூக்கள் அதிகம் பூக்கும். பூக்கள் அதிகமாக பூக்க, தேனீக்கள் வந்து அமர்ந்து, தேனை உறிஞ்சி செல்லும். மழை குறைந்த நாட்களில், தேன் உற்பத்தி குறைவாகவே இருக்கும்.
இரவில் நன்றாக தூக்கம் வரவில்லை என்றால், ஒரு தேக்கரண்டி தேனை, பாலில் கலந்து உட்கொண்டால், சோர்வு நீங்கி, நல்ல தூக்கம் வரும். குழந்தைகளுக்கு கொடுக்கும் பாலில், இரும்புச்சத்து போதுமான அளவு இருக்க, சிறிது தேன் கலந்து கொடுக்கலாம்.
உணவு சாப்பிடும் போது, இரண்டு ஸ்பூன் தேனை சாப்பிட்டு வந்தால், நாளடைவில் ஒற்றைத் தலைவலி அடியோடு நின்றுவிடும்.
குழந்தைகள், தூங்க போவதற்கு முன், நாள்தோறும், ஒரு ஸ்பூன் தேனை அருந்த கொடுத்து வந்தால், படுக்கையில் சிறுநீர் போகும் பழக்கம் நின்றுவிடும்.
சிறிது நேரம் தேனை வாயில் வைத்திருந்து பின் கொப்பளித்தால், வாய்ப்புண், வறட்சி, வெடிப்பு போன்ற தொல்லைகள் நீங்கும்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரையும், மேற்பார்வையும் இல்லாமல், தேனை அருந்த கூடாது.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X