டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம்.
கோதுமை முறுக்கு!
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்,
ஓமம் - ஒரு ஸ்பூன்,
ஆப்ப சோடா - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கோதுமை மாவை, நீராவியில் வேக வைக்கவும். மாவு, ஈரம் படாமல் இருக்க வேண்டும். மாவு சூடேறியவுடன், ஆற விட வேண்டும். பின், மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஓமம், ஆப்ப சோடா, உப்பு, சிறிதளவு எண்ணெய் ஆகியவற்றை கலந்து, தண்ணீர் ஊற்றி, முறுக்கு மாவு போல் பிசைய வேண்டும். பின், அடுப்பில் எண்ணெயை காய வைத்து, முறுக்கு போல் பிழிந்து வேகவிட்டு எடுக்க வேண்டும்.
கோதுமை முறுக்கு, சாப்பிட சுவையாக இருக்கும். சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது.
- வெ.அம்மு, சீலையம்பட்டி, தேனி.