இந்தியாவின் மிகப் பெரும் பணி வாய்ப்பு வழங்கும் நிறுவனமாகத் திகழும் ரயில்வே துறை நம் ஒவ்வொருவர் வாழ்வுடனும் தொடர்புடையது. பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்டு இன்று மெட்ரோ ரயில் வரை பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. இத்துறை பல்வேறு வகையில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் தெற்கு ரயில்வே முக்கியமானது. இங்கு ஐ.ஐ.டி., படிப்பில் பல்வேறு பிரிவுகளில் 678 அப்ரண்டீஸ் பயிற்சிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரிவுகள்: பிட்டர், கார்பென்டர், பெயின்டர், வெல்டர், மெக்கானிஸ்ட், எலக்ட்ரீசியன், ஒயர்மேன், டர்னர், டீசல் மெக்கானிக் உள்ளிட்ட பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு முடித்த பின், ஐ.டி.ஐ., படிப்பு முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரி விண்ணப்பபடிவத்தில் நிரப்பி அனுப்ப வேண்டும்.
கடைசி தேதி: 2017 ஜூலை 15.
விபரங்களுக்கு: https://drive.google.com/filed/0BzDh435CQG8xWUR2c0dGV21Sd00/view