இந்திய பாதுகாப்புப் படைகள் உபயோகத்திற்கான தளவாடங்களை இந்தியன் ஆர்டினன்ஸ் பேக்டரீஸ் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் தொழிற்சாலைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
காலியிட விபரம்: செமி ஸ்கில்டு இன்டஸ்ட்ரியல் எம்ப்ளாயீஸ் லேபர் குரூப் சி பிரிவில் மொத்தம் 4,110 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு, என்.சி.வி.டி.,சான்றிதழ் வழங்கும் என்.டி.சி., என்.ஏ.சி., படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: கம்ப்யூட்டர் வாயிலான எழுத்துத் தேர்வு, டிரேடு டெஸ்ட், பிராக்டிகல் டெஸ்ட் போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
தேர்வு மையம்: சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய மையங்களில் இந்தத் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாய்.
கடைசி நாள்: 2017 ஜூலை 10.
விபரங்களுக்கு: www.ofb.gov.in