ராணுவ தளவாட தொழிற்சாலைகளில் 4,110 பணியிடங்கள் | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements
ராணுவ தளவாட தொழிற்சாலைகளில் 4,110 பணியிடங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2017
00:00

இந்திய பாதுகாப்புப் படைகள் உபயோகத்திற்கான தளவாடங்களை இந்தியன் ஆர்டினன்ஸ் பேக்டரீஸ் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் தொழிற்சாலைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
காலியிட விபரம்: செமி ஸ்கில்டு இன்டஸ்ட்ரியல் எம்ப்ளாயீஸ் லேபர் குரூப் சி பிரிவில் மொத்தம் 4,110 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு, என்.சி.வி.டி.,சான்றிதழ் வழங்கும் என்.டி.சி., என்.ஏ.சி., படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: கம்ப்யூட்டர் வாயிலான எழுத்துத் தேர்வு, டிரேடு டெஸ்ட், பிராக்டிகல் டெஸ்ட் போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
தேர்வு மையம்: சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய மையங்களில் இந்தத் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாய்.
கடைசி நாள்: 2017 ஜூலை 10.
விபரங்களுக்கு: www.ofb.gov.in

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X