நவீன தொழில் நுட்பம் மற்றும் சிறந்த போர்த்திறன் கொண்ட இந்திய விமானப்படை சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றது. இந்தப் படையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பணி நியமனமாக குரூப் ஒய் டிரேடு பிரிவிலான காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளையாட்டு பிரிவுகள் : அதாலடிக்ஸ், பேஸ்கட் பால், குத்துசண்டை, கிரிக்கெட், சைக்ளிங், கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், ஹாக்கி, கபாடி, லான் டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், நீச்சல், கைப்பந்து , மல்யுத்தம், பளுதுாக்குதல், கோல்ப் போன்ற விளையாட்டுகளில் சிறப்புத் தகுதி தேவை.
வயது : விண்ணப்பதாரர்கள் 28.12.1996 முதல் 27.12.2000க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : பிளஸ் 2 படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இதர தகுதிகள் : பாதுகாப்புப் படை சார்ந்த பதவி என்பதால் இந்த இடங்களுக்கு சில குறைந்தபட்ச உடல் தகுதிகளும் தேவைப்படும். உயரம் குறைந்த பட்சம் 15.5 செ.மீ.,யும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். மார்பு விரிவது குறைந்தபட்சம் 5 செ.மீ., இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : உடல் தகுதி தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை : பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Secretary, Air Force Sports Control Board, C/O Air Force Station New Delhi, Race Course, New Delhi-110003
கடைசி நாள் : 2017 ஆக. 15.
விபரங்களுக்கு : www.indianairforce.nic.in