பிளஸ் 2 படிக்கும் நான் டிசைனிங் துறை படிக்க விரும்புகிறேன். இதற்குரிய வாய்ப்புகள் என்ன?
கீதா, விருதுநகர்
அடிப்படையில் நீங்கள் கிரியேட்டிவ் திறன் பெற்றவராக இருப்பது இத்துறை படிப்பை மேற்கொள்ள விரும்புவோருக்கான அடிப்படை திறனாகும்.
நன்றாக வரையத் தெரிந்தவராக இருந்தால் கூடுதல் திறனாக அமையும். நல்ல கற்பனை திறன் உடையவராக இருந்தால் சிறப்பாக செயல்பட முடியும். பொறுமையும் சிறப்பான தகவல் தொடர்புத் திறனுடையவராகவும் இருப்பதும் இதில் நீங்கள் அதிக வெற்றி பெற உதவும். இதில் பட்டப் படிப்பும் பட்ட மேற்படிப்பும் உள்ளன. சில நிறுவனங்களில் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளும் உள்ளன.
Apparel and Accessories Designing , Textile Designing , Product Designing போன்ற பிரிவுகளில் இதில் படிக்கலாம்.
ஆடை வடிவமைப்பு, பேஷன் டிசைனிங் தொழில் நிறுவனங்கள் போன்றவற்றில் சிறப்பான வேலை வாய்ப்புகள் உள்ளன.