'பந்தலிலே பாகற்காய் தொங்குதடி லோலாக்கு'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2017
00:00

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் குறைந்த நீர் செலவில் அதிக மகசூல் பெறும் வகையில் மத்திய அரசின் 'வேளாண் அறிவியல் மையம்' (கிருஷ்சி விகான் கேந்திரா - கே.வி.கே.) திட்டத்தின் கீழ் முன்னோடி விவசாயிகளுக்கு 4.5 லட்சம் ரூபாய் மானியம், பயனாளிகள் பங்களிப்பு 50 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் 'இத்தாலி தொழில்நுட்பம்' மூலம் வெயில் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் 'நிழல் வலை அமைப்பு' 500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைத்து சொட்டு நீர் பாசனத்தில் காய்கறிகள், பூக்கள் விளைவித்து மகசூல் பெருக்குவதே திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் கீழ் முதல் முறையாக திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலை மற்றும் மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில் பல்கலை துணை வேந்தர் நடராஜன் வழிகாட்டுதல், தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுனர் செந்தில்குமார் பரிந்துரைப்படி, 20 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் சொந்த நிலம் 500 சதுர மீட்டர் பரப்பளவில் நிழல் வலை அமைப்பு இரண்டு மாதத்திற்கு முன் அமைக்கப்பட்டது.

'சிம்ரன்' கத்தரி: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி விவசாயி சக்ரபாணி நிலத்தில் நிழல் வலை அமைப்பு அமைக்கப் பட்டது. அங்கு வீரிய ஒட்டு ரகமான 'சிம்ரன்' கத்தரிக்காய் விளைவிக்கப் படுகிறது. செடியை ஊன்றி 60வது நாளில் காய்ப்புக்கு வந்துள்ளது. வைலட் நிறத்தில் காய்கள் பளபளப்பாக மின்னுகிறது. சொட்டு நீர் பாசனம் மூலம் விளைவிப்பதால் நீர் செலவு குறைவு. பூச்சி தாக்குதல் இல்லை. தேவையான வெப்பம், இயற்கை உரம் பயன்படுத்துவதால் விளைச்சல் அமோகமாக உள்ளது.சக்ரபாணி கூறியதாவது: ஒட்டன்சத்திரம் காய்கறி விதைப்பண்ணையில் இருந்து சிம்ரன் நாற்று ஒன்று 50 காசுக்கு வாங்கி நிழல் வலை அமைப்பு மற்றும் வயல்களில் பயிரிட்டுள்ளேன். தற்போது காய்ப்புக்கு வந்துள்ளது. நிழல் வலை அமைப்பின் தரையில் பாலிதீன் விரிப்பு, அதற்கு கீழ் இயற்கை உரம், தென்னை நார் கழிவு பரப்பப்பட்டுள்ளது. பாலிதீன் விரிப்புக்கு இடையே துளையிட்டு அதில் செடிகள் முளைக்கின்றன. இதனால் செடியின் பக்கவாட்டில் களை வளராமல் தடுக்க முடியும். நாள் ஒன்றுக்கு சராசரியாக 50 முதல் 100 கிலோ வரை காய்ப்பு இருக்கும். ஒரு கிலோ 45 ரூபாய் விலை போகிறது என்றார்.திண்டுக்கல் மாவட்டம் கோட்டைபட்டி விவசாயி சரவணன்: நிழல் வலை அமைப்பில் வீரிய ஒட்டு ரகமான 'அபிஷேக்' பாகற்காய்க்கொடி பயிரிட்டுள்ளேன். 85வது நாளில் இருந்து பலன் கொடுக்கிறது. பச்சை நிறத்தில் காய் அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் உள்ளது. காய்கறி கடைக்கு நாள் ஒன்றுக்கு 10 கிலோ வீதம் கிலோ 45 ரூபாய்க்கு விற்கிறேன். இயற்கை உரம், பூச்சி தாக்குதல் மிகக்குறைவு. எனினும் அவ்வப்போது வேப்ப எண்ணெய், கைத்தெளிப்பான் மூலம் இயற்கை சத்து மருந்துகள் கொடுப்பதால் காய்கள் செழிப்பாக வளர்கிறது. முறையாக பராமரித்தால் பலன் கொடுத்து கொண்டே இருக்கும் என்றார்.

Advertisement

 

மேலும் விவசாய மலர் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
07-ஜூலை-201704:59:23 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே என்னது இத்தாலி தொழில்நுட்பம் முறையா? அதாவது கொள்ளை அடித்து இத்தாலியில் சேர்ப்பது தான் இந்தியாவில் முன்னர் நடந்து கொண்டிருந்தது? இப்போ அதுவே எல்லாரும் பயன்படுத்தும் விதத்தில் கருணாவோ , திருநாவோ ஸ்கீம் கொண்டு வந்துட்டாங்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X