இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2017
00:00

மனித நேயம் பெருகட்டும்!
என் நெருங்கிய உறவினர் ஒருவர், பல ஆண்டுகளுக்கு முன், சொந்தமாக வீடு வாங்கி, குடியேறினார். அவரது வீட்டில் நடக்கும் பல விசேஷங்களுக்கு சென்றுள்ளேன். அப்போதெல்லாம், அறிமுகமில்லாத குடும்பம் ஒன்று கலந்து கொள்வதை கவனித்துள்ளேன். இதுபற்றி ஒருமுறை, உறவினரிடம் விசாரிக்க, அவர், 'இப்போது, நாங்கள் குடியிருக்கும் இந்த வீடு, இவரிடமிருந்து வாங்கியது தான்; ஏதோ கஷ்டத்தில் விற்ற இவர், இன்று வரை வாடகை வீட்டில், கஷ்ட ஜீவனம் நடத்துகிறார்.
'இப்போது, இந்த வீட்டின் மதிப்பு, பல மடங்கு உயர்ந்து விட்டது. இந்த விலையுயர்ந்த சொத்து, கைமாறிப் போன ஏக்கம் தோன்றாதபடி, நல்ல நாட்கள் மற்றும் வீட்டு விசேஷங்களின் போது, அவர் குடும்பத்தையும் அழைத்து, சாப்பாடு போட்டு, மகிழ்ச்சியோடு அனுப்புகிறேன்...' என்றார்.
மேலும், அவரது வீட்டில், யாருக்கேனும் பிறந்தநாள், திருமண நாள் வந்தால், மனைவியுடன் அவர் வீட்டிற்கு சென்று, புது துணி மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்து, சந்தோஷப்படுத்தி வருவதாகவும் கூறினார்.
சமீபத்தில், அவரது பையனின், தொழிற்கல்வி படிப்புக்கு உதவி செய்துள்ள உறவினர், 'இந்த சிறு உதவியினால், எனக்கு பெரிய நஷ்டம் வந்து விட போவதில்லை...' என்று பெருந்தன்மையுடன் கூறினார்.
தான் மட்டும் சுகமாக வாழ வேண்டும் என்று சுயநலம் பிடித்தவர்கள் பெருகி வரும் இக்காலத்தில், பிறர் வாழ, கை கொடுப்பவர்கள், சிறந்த மனிதாபிமானிகள் தானே!
என்.சந்திரா, ராமநாதபுரம்.

மகத்தான சேவை!
எங்கள் பக்கத்து வீட்டு பெண்மணி, எதிர் வீட்டிலிருந்த இளம் விதவை பெண்ணை, தெருவுக்கு அழைத்துச் சென்று, 'என் ராசாத்தி... நீ எதிர்ல வந்தாலே அந்த காரியம் நல்லபடியா முடியுது; உம் முகத்துல முழிச்சாலே, அன்னைக்கு அதிர்ஷ்ட நாள் தான்...' என்றெல்லாம் புகழ்ந்து, கொண்டாடினார். அவ்வளவு தான் அன்றிலிருந்து அந்த இளம் பெண்ணை அனைவரும் மரியாதையுடன் பார்க்க ஆரம்பித்தனர்.
இதுபற்றி பக்கத்து வீட்டு பெண்மணியிடம் கேட்ட போது, 'விதவை என்றாலே நம் சமூகம் கேவலமாக பார்க்கிறது; அதனால் தான் இப்படியொரு நாடகம் ஆடினேன். இப்போது அந்த விதவைப் பெண்ணை யாரும் அமங்கலமாக பார்க்க மாட்டார்கள்...' என்றார்.
மகத்தான சேவை செய்த அந்த பெண்மணியை, கையெடுத்து கும்பிட்டேன்!
ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.

சூப்பர் தான்!
சமீபத்தில், ஒரு கோவிலில் லட்சார்ச்சனை நடைபெற்றது. சன்னிதியை ஒட்டி நின்ற பக்தர்களில் சிலர், தங்கள் மொபைலை பார்த்தபடி மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தனர். அதுபற்றி அருகில் இருந்தோரிடம் கேட்டதற்கு, 'மந்திரம் தெரிந்தவர்கள், சன்னிதியில் நின்று, மந்திரம் சொல்கிற போது, தெரியாதவர்கள், மனதை அலைய விடாமல், மொபைல் போனில், 'வாட்ஸ் - ஆப்'பில் பதிவு செய்துள்ள மந்திரத்தைப் பார்த்து, உச்சரிக்கிறோம்..' என்றார். இந்த ஐடியாவை மற்றவர்களும் கடைப்பிடிக்கலாமே!
ஏ.நாகராஜன், சென்னை.

இளைஞர்களே... யோசியுங்கள்!
சில ஆண்டுகளுக்கு முன், விடுதியில் தங்கி பணி புரிந்த போது, என்னுடன் தங்கியிருந்த அறைத் தோழி ஒருத்தி, சமீபத்தில் எனக்கு போன் செய்து, தனக்கு திருமணம் நிச்சயம் ஆகியிருக்கும் விஷயத்தை கூறினாள். நானும் சந்தோஷத்துடன், 'உங்கள் காதல் வெற்றியடைந்ததற்கு வாழ்த்துகள்...' என்றேன்.
'இல்ல; எனக்கு வேற இடத்துல நிச்சயம் ஆகியிருக்கு; மாப்பிள்ளை பெங்களூருல வேலை பாக்கிறார்...' என்றாள். 'என்னாச்சுடி... அவ்வளவு சின்சியரா காதலிச்சீங்களே...' என்ற போது, 'அதவிடு; அது ஒரு பிச்சக்கார குடும்பம்; அவங்க அம்மா, அப்பா கூலி வேலை செய்றாங்க; கூரை வீடு. அவன எப்படி கல்யாணம் செய்துக்கிறது... அதான் கழட்டி விட்டுட்டேன்...' என்றாள் கூலாக!
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம், இருவருமே கஷ்டப்படும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். ஆனால், அவன் தன் வீட்டுக்கு கூட பணம் அனுப்பாமல், இவள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுப்பான். ஹாஸ்டல் பீஸ் முதல், தலைக்கு தேய்க்கும் எண்ணெய் வரை எல்லாவற்றிற்கும் அவன் தான் பணம் தருவான்.
சிலசமயம், இவள் அறையில் இருந்து கொண்டு, தனக்கு வேண்டியதை வாங்கி வரச் சொல்லி, மொபைல் போனில் அவனிடம் ஆர்டர் போடுவாள். அவன் மெனக்கெட்டு வாங்கி வந்து, ஹாஸ்டல் வாசலில் காத்திருந்து கொடுத்து விட்டு செல்வான். இவளோ, தன் சம்பளத்தில் ஐந்து பைசா தொடாமல், அப்படியே வீட்டுக்கு அனுப்பி விடுவாள்.
இருவரும் சுத்தாத இடமில்லை. பேசும் போது கூட, 'புருஷா... பொண்டாட்டி...' என்று தான் பேசுவர். இன்று, அதையெல்லாம் மறந்து, அவன் குடும்பத்தை பிச்சைக்கார குடும்பம் என்கிறாள். காதலிக்கும் போதும், அவனிடம் யாசகம் பெற்று அனுபவிக்கும் போதும், அவன் குடும்பத்தை அறியவில்லையா இவள்!
தன் குடும்ப சூழல் மற்றும் பெற்றோரின் கஷ்டம் புரியாமல், தன் உணர்ச்சிகளுக்கு மட்டும் மதிப்பு கொடுத்து, சுயநலத்துடன் செயல்பட்ட அந்த இளைஞனுக்கு இது சரியான பாடம் தான்!
இளைஞர்களே... நீங்கள் காதலிக்கும் பெண், உங்களை உண்மையிலேயே காதலித்தால், அவளுக்கு உங்கள் அன்பைத் தவிர வேறு எதுவும் தேவையிருக்காது; உங்கள் பர்சை காதலிப்பவர்களுக்கு, தேவைகள் தீரவே தீராது என்பதை புரிந்து, சுதாரித்து, வாழக் கற்றுக் கொள்ளுங்கள்!
— எம்.திலகவதி, தேனி.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murli - kampala,உகான்டா
15-ஜூலை-201713:24:59 IST Report Abuse
murli திருமணமாகாத பெண்கள் என்பது பெர்ஸன்ட் இருபது பெர்ஸன்ட் காதலித்தவர்களை கை பிடிப்பதில்லை பிடிக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
JäíšhañkAř Iyer - Bhilai,இந்தியா
11-ஜூலை-201713:57:49 IST Report Abuse
JäíšhañkAř Iyer கடிதம் 3. இந்தமாதிரி பெண்கள் பிச்சைக்காரர்களை விட கேவலமான ஜந்துக்கள்.......
Rate this:
Share this comment
15-ஜூலை-201708:39:59 IST Report Abuse
சாமியப்பாகவிதைகள் அனுப்ப வேண்டும் தங்களின் முகவரி வேண்டுகிறேன். ....
Rate this:
Share this comment
Cancel
JäíšhañkAř Iyer - Bhilai,இந்தியா
11-ஜூலை-201713:53:29 IST Report Abuse
JäíšhañkAř Iyer கைபேசியில் சுலோகம் பார்த்து படிக்கையில் அதை flight mode இல் வைக்கலாமே .. அச்சமயம் வரும் தேவையில்லாத அழைப்புகளை தவிர்க்கலாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X