அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2017
00:00

'ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்ற முதுமொழியை கேள்விப்பட்டு இருப்பீர்கள். நம்மிடம் ஒற்றுமை இல்லாததால், ஆங்கிலேயர் நம்மை மொட்டை அடித்தனர். இதோ, கட்டப்பொம்மன், ஊமைத்துரை பற்றி சரித்திர புத்தகம் ஒன்றில் படித்ததை தருகிறேன்...
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்; அவர் தம்பி ஊமைத்துரை, சிறைக்காவலில் இருந்து தப்பித்து, தனியனாக ஆங்கிலேயரை எதிர்த்து, போர் புரிந்தார். அச்சமயம் அவர், தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன், சரபோஜிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில்...
'என் சகோதரர் கட்டபொம்மனை, ஆங்கிலேயரிடம் பிடித்துக் கொடுத்து விட்டார், புதுக்கோட்டை அரசர் தொண்டைமான். கட்டபொம்முவை எங்கே சிறை வைத்திருந்தாலும், அவரை நாங்கள் போராடி மீட்டிருப்போம்; அவரை தூக்கிலிட்டு, எங்களை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். திட்டமிட்டு தப்பினோம்.
'பாஞ்சாலங் குறிச்சியில் ஆங்கிலேயர்களுடன் போர் நடத்தி வருகிறேன். என் அண்ணனை கொலை செய்ததற்கு பழிவாங்கும் விதமாக, நான்கு ஆங்கில தளபதிகளை உயிருடன் பிடித்து, தூக்கில் போட்டேன்.
'இப்பொழுது கிடைத்த தகவல்படி, தங்களின் படைகள் தயார் நிலையில் இருப்பதாக அறிகிறேன். நான், இங்கு என் செல்வாக்கை நிலை நிறுத்த முடியாவிட்டால், என் தகப்பனாரை போன்ற மகாராஜாவாகிய தங்களிடம் அடைக்கலம் பெறலாமென்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
'ஆனால், தாங்களோ, எனக்கு எதிராக படை அனுப்புவதாக கூறுகின்றனர், ஆங்கிலேயர். மகாராஜாவே அவர்களுக்கு படை அனுப்பி உதவி செய்தால், வேறு யாரிடம் நாங்கள் எதை எதிர்பார்க்க முடியும்.
'மகாராஜா எனக்கு உற்சாக மூட்டினால், நான், ஆங்கிலேயர்களை அடிபணியச் செய்வேன். ஆனால், உங்கள் படையும் என்னை எதிர்த்து வந்தால், நான் ஏதும் செய்ய இயலாதவனாகி விடுவேன்.
'உங்களுடைய படையை எனக்குத் தந்து, பாதுகாப்பு அளிப்பதாக உறுதி கூறினால், எங்கள் மூதாதையர் காலம் தொட்டு தகப்பன் போல் விளங்கும் தங்களிடம் நானே வருகிறேன். உங்களுடைய விருப்பம் போல் என்னை பயன்படுத்திக் கொள்ளலாம்...'
ஆனால், இந்தக் கடிதம் சரபோஜியிடம் நற்பலனை விளைவிக்கவில்லை; ஆங்கிலேயருக்கே படை உதவி செய்தார். அத்துடன், கடிதம் கொண்டு வந்தவனையும் கைது செய்து சிறையில் அடைத்தான், சரபோஜியின் அமைச்சர், தாதாஜியப்பா.
— ஒற்றுமை இல்லாமல் போனதால், கடைசியில் எல்லாரும் ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டினர்!

நேரம் இரவு, 9:00 மணி இருக்கும்; சரியான மழை... அலைகள் பொங்கி எழுந்து, தம் லிமிட்டை தாண்டிக் கொண்டிருந்தன. நண்பர்கள் பட்டாளம் ஒரு மாருதி வேனில் ஒடுங்கி இருந்தது. அது, காதர்பாயின் வேன். வேனின் டிக்கி கதவை திறந்து, அதனடியில் சிலர் நின்றனர்.
அந்த நேரம் பார்த்து, போலீஸ் ஜீப் ஒன்று படுவேகத்துடன் வந்து நின்றது. ஜீப்பில் இருந்து இறங்கியவர், என்ஜினியர் நண்பர் சுப்புராஜின் தோழரான, காவல் துறை அதிகாரியான, ஏ.சி.,
சந்தன கலர் சபாரி அணிந்து, அட்டகாசமான சிரிப்புடன் வந்தார். குடை போல் விரிந்திருந்த வேன் டிக்கி கதவின் அடியில் நண்பர்களுடன் இணைந்து நின்றவர், அதே வேகத்தில், சபாரியின் கீழ் பையில் இருந்து உறை போட்ட கண்ணாடி க்ளாசை எடுத்து, வேனின் உள்ளே நீட்டி, 'அந்த, 'அலை' வரை, பி.எல்., போடுங்க...' என்றார்.
'அலை' என, அவர் குறிப்பிட்டது, கண்ணாடி கோப்பையின் அடி பக்கத்தில், பச்சை நிறத்தில் அலை போல் வரையப்பட்டிருந்த கோடு. அந்தக் கோடு வரை உ.ப., ஊற்றினால், ஒரு லார்ஜ் கணக்காம்! பி.எல்., என்றால் பிளாக் லேபிள் - ஜானிவாக்கர் - ஸ்காட்ச் விஸ்கி. சரக்கை வாங்கி அப்படியே வாயில் கவிழ்த்தவர், வீரப்பா சிரிப்பு சிரித்து, 'பாரின்... பாரின்தாம்பா...' என, மெச்சிக் கொண்டார்.
சபை களை கட்டியது; ஏ.சி., பழைய காலத்து மனிதராதலால் தமக்குத் தெரிந்த, ராஜாஜி காலத்து போலீஸ் கதை ஒன்றை கூறினார்...
'ராஜாஜி முதலமைச்சரா இருந்த சமயம்ப்பா... படித்த தலித் இளைஞர்களுக்கு அரசாங்க வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க பெருமுயற்சி எடுத்துக்குவார், ராஜாஜி. வகுப்பு வாரியாக வேலை தர வேண்டும் என்று அரசு விதி இருக்கிறது இல்லையா...
'ஆனா... அந்தக் காலத்துல படிச்ச தலித் இளைஞர்கள் போதுமான அளவு இல்ல. அதனால, அந்த உத்யோகத்துக்கு தகுந்த தலித், 'அபேட்சகர்' இல்லன்னு காரணம் காட்டி, மேல் ஜாதிக்காரர்களுக்கு அந்த உத்யோகத்தை கொடுத்துடறது வழக்கம்.
'ஒரு சமயம், எங்க டிபார்ட்மென்ட்ல டெப்டி சூப்ரண்டன்ட் வேலைக்கு தலித் வகுப்பின் உரிமை வந்தது. வழக்கம் போல் படித்த தலித் இளைஞர் ஒருவரும் இல்லை என்று, மேல் ஜாதி இந்துவுக்கு வேலை கிடைக்க சிபாரிசு வந்தது.
'விடுவாரா ராஜாஜி... கில்லாடி மனுஷராச்சே... மேல் ஜாதிக்காரருக்காக வந்த சிபாரிசை ஒத்துக்காம, அப்போ சபாநாயகரா இருந்த சிவஷண்முகம்பிள்ளை மற்றும் சில தலித் தலைவர்களை கூப்பிட்டனுப்பி, அவர்களிடம் விஷயத்தை சொல்லி, தகுதியான ஆளை கூட்டி வரும்படி பணித்தார்.
'அவர்களும், பி.ஏ., பாஸ் செய்த ஒரு தலித் இளைஞனை தேடி கண்டுபிடித்தனர். அந்த இளைஞனை தம் அலுவலகத்திற்கு கூட்டி வரச் சொன்னார், ராஜாஜி. பின்னர், அங்கேயே அவ்விளைஞனை பரீட்சை எழுதும்படி சொன்னார். சிவஷண்முகம் பிள்ளையையும் தன் அருகிலேயே இருக்கும்படி செய்தார், ராஜாஜி.
'பரீட்சை முடிந்தவுடன், போலீஸ் மேலதிகாரி, ராஜாஜியிடம், 'மற்ற தகுதியெல்லாம் இருக்கு; ஆனால், ஆள் ரொம்பவும் ஒல்லியா இருக்கிறார்... போலீஸ் உத்யோகத்திற்கு ஆஜானுபாகுவாக இருக்க வேண்டுமே...' என்றார்.
'உடனே ராஜாஜி, 'இவர் ஏழை இளைஞர்; இதுவரை சரியான சாப்பாடே அவருக்கு கிடைத்திருக்காது. ஆகையால், இப்படி மெலிந்திருக்கிறார்... உத்தியோகம் கொடுத்தால், சந்தோஷத்தினாலேயே சீக்கிரம் பருத்து விடுவார்...' என்று சொல்லி, அந்த இளைஞனுக்கு வேலை கொடுத்தார்.
'ராஜாஜி சொன்னது போலவே, உத்தியோகம் கிடைத்த ஆறு மாதத்திற்குள், கட்டிப்பிடிக்க முடியாதபடி பருத்து விட்டார், அவ்விளைஞர். மிகத் திறமையான போலீஸ் அதிகாரியாக பணியாற்றி, பின்னாளில் சென்னை நகர போலீஸ் கமிஷனராகவும் ஆன அவ்விளைஞன் வேறு யாருமல்ல, சிங்காரவேலு தான்...' என்று முடித்தார்.
விஷயத்தைக் கேட்டதும் புல்லரித்தது!

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஜூலை-201708:11:01 IST Report Abuse
சேகர் ராஜாஜிக்கு உயர் ஜாதியினரைத் தவிர மற்றவர்களைப் பிடிக்காது என்பது போல திராவிட இயக்கத்தவர்கள் செய்த சூழ்ச்சி பொய் என்பது இப்போது தெரிகிறதா? அதிகாரிகள் சொன்னதை அப்படியே ஏற்காமல் ஆராய்ந்து முடிவெடுத்து தலித் இளைஞனை பதவியில் அமர்த்திய செயல் அவரது நேர்மைக்கும், நிர்வாகத் திறமைக்கும் உதாரணம்.
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
09-ஜூலை-201706:54:01 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே ராஜாஜி உங்களை பொறுத்தவரை பார்ப்பனர் தான் இல்லையா தவளைகளே?
Rate this:
Share this comment
Cancel
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
09-ஜூலை-201703:57:32 IST Report Abuse
.Dr.A.Joseph முதலில் தினமலருக்கு நன்றி.இட ஒதுக்கீடு இல்லையெனில் உண்மையான ஒரு திறமை வாய்ந்த சிங்கார வேலரை தமிழகம் இழந்திருக்கும்.இட ஒதுக்கீடு இப்படித்தான் பறிபோயிருக்கும் என்பதனையும் கட்டுரை உணர்த்துகிறது.ராஜாஜி போன்ற பழைய தலைவர்கள் மீது சில குற்ற சாட்டுகளை வைத்தாலும் எப்போதும் அவர்கள் போற்றுதலுக்கு உரியவர்களே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X