அந்துமணி பதில்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2017
00:00

* ரா.ராமச்சந்திரன், திண்டிவனம்: பணம் ஒன்றையே அடிப்படையாக வைத்து, கல்யாணம் செய்து கொள்ளலாமா?
பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன; அதை விட்டு, ஏன் தன்னைத் தானே ஒருவன் விற்றுக்கொள்ள வேண்டும்?

அ.ராஜேந்திரன், திண்டுக்கல்: இந்தியாவில், பிராந்தி விற்பனை தான் அதிகம் என்கிறேன் நான்... என் நண்பனோ, விஸ்கி தான் அதிகம் விற்கிறது என்கிறான். யார் சொல்வது சரி? உமக்கு இவ்விஷயங்கள் தெரியாது என்பது, எனக்குத் தெரியும். இருப்பினும், உம் நண்பர் லென்ஸ் மாமா இவ்விஷயங்களில் கில்லாடி என்பதால், அவரிடம் கேட்டு சொல்வீர் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்...
உம் நண்பர் சொல்வது தான் சரி; இந்தியாவில் விற்கும் உ.பா.,களில் நாட்டு சரக்குகளான சாராயம், கள் தவிர்த்து, அதிகபடியாக விற்பனையாவது விஸ்கி தான். மொத்த விற்பனையில், 60 சதவீதம் விஸ்கி, 30 சதவீதம் பிராந்தி; மீதமுள்ள, 10 சதவீதத்தில் தான் ரம், ஒயின், கழுதை, குதிரை எல்லாம்!
சரக்கு சாப்பிடுவதில் தான் அனுபவம் கிடையாதே தவிர, 'சரக்குகளை' மண்டைக்குள் ஏற்றிக் கொள்வதில் தயக்கமே காட்டுவதில்லை நான்!

ஏ.ஹசினா, கடலூர்: சினிமா நாயகிகளுக்கு வாழ்வில் நிம்மதியே கிடையாதா?
உண்டே... இனி, தனக்கு கதாநாயகி, 'சான்ஸ்' இல்லவே இல்லை என்று உணர்ந்து கொள்பவர்கள், நிம்மதியாக இருக்கின்றனர்!

வி.ஜெயச்சந்திரன், மதுரை: பட்டப்படிப்பு படித்து, 'லாட்ஜ்' ஒன்றில், 'ரூம் பாய்' ஆக வேலை செய்கிறேன். என் நண்பர்கள், என்னை கேலி செய்கின்றனர். இதை விட்டால், உடனடியாக வேறு வேலை கிடைப்பது அரிது. என்ன செய்வது?
அவர்கள் கேலியை கண்டு கொள்ளாதீர்கள்! வேலையை விட்டால், இவர்களா கை செலவுக்கு காசு தரப் போகின்றனர்... தண்டச்சோறு என, பெயர் வாங்குவதைவிட, நேர்மையாக செய்யும் எந்த வேலையும் கவுரவ குறைவானது அல்ல!

எஸ்.குமார், தேனி: இரவில் எனக்கு தூக்கமே வருவதில்லையே...
துக்கம் தான் காரணம்... துக்கத்துக்கு காரணம் கடன்; கடன், எக்கச்சக்கம் இருந்தால், கண்டிப்பாக தூக்கம் வராது.

வீ.பாலகிருஷ்ணன், சின்னாளபட்டி: வாழ்வை சிறப்பித்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?
ஆடம்பரத்தை மூட்டை கட்டி, சிக்கனத்தை பழகிக் கொள்ள வேண்டும்!

* டி.பூவரசி, பழனி: இன்று மக்களிடையே சேமிப்பு பழக்கம் வளர்ந்துள்ளதா?
வளர்ந்திருக்கிறது; கஷ்டப்பட்டு சம்பாதித்து, மிச்சம் பிடித்த பணத்தை முதலீடு செய்வது எப்படி என்ற கலை தான் வளரவில்லை. 30 முதல் 47 சதவீதம் வட்டி தருகிறோம் என, விளம்பரம் செய்யும் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து, படித்தவர்கள் கூட ஏமாந்து போகின்றனர்!

கே.மணி, சென்னை: 'மூன்று பெண்களை பார்க்க வேண்டும்; இரண்டு பெண்களுடன் பழக வேண்டும். ஒருத்தியை மட்டும் காதலிக்க வேண்டும். ஆனால், வேற ஒருத்தியை திருமணம் செய்ய வேண்டும்...' என்கிறானே என் நண்பன்...
மொத்தத்தில், ஏழெட்டு துடைப்பக்கட்டை சாத்துக்கு தயாராக்குகிறார் உங்களை... ஜாக்கிரதை!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X