திண்ணை!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2017
00:00

மு.வேங்கடசாமி எழுதிய, 'மகாகவி பாரதியார்' நூலிலிருந்து: எட்டையபுரம் அரண்மனை புலவர் குழுவில், தம் கருத்துகளை தயக்கமின்றி எடுத்துரைப்பார், பாரதியார்.
ஒருநாள், அவையில், அண்ணாமலை ரெட்டியார் இயற்றிய, 'காவடி சிந்து' பற்றிய பேச்சு வந்தது. ஒரு புலவர், 'ரெட்டியாரை போல் இனிமேல் யாருமே சிந்து பாட முடியாது...' என்றதும், நகைத்தார், பாரதியார். உடனே, அனைவரும், 'ரெட்டியாரை போல் பாடல் இயற்ற வேண்டுமேயன்றி, வீணாக சிரிப்பதில் பயனில்லை...' என்று கூறி, ஏளனம் செய்தனர். உடனே, இன்றே ஒரு சிந்து பாடி முடிப்பதாக கூறி, இல்லத்திற்கு திரும்பினார், பாரதியார்.
அன்று மாலையில், தாம் சொன்னவாறே, பாடலை இயற்றி, அரண்மனைக்கு சென்றார்.
முருகன் மீது பாடப்பட்ட அச்சிந்து, முழுமையும் கிடைக்கவில்லை. கீழ்கண்ட சில வரிகளே, இப்போது கிடைத்துள்ளன. அவை:
பச்சைத் திருமயில் வீரன்
அலங்காரன், கவுமாரன் - ஒளிர்
பன்னிரு திண்புயப் பாரன் - அடி
பணி சுப்பிர மணியர்க் கருள்
அணிமிக் குயர் தமிழைத் தரு
பக்தர்க் கெளியசிங் காரன் - எழில்
பண்ணு மணாசலத் தூரன்!

'பாரதிதாசன் வாழ்விலே' என்ற நூலிலிருந்து: தன் மகள் சரஸ்வதியின் திருமண பத்திரிகையை, உறவினர், நண்பர்களுக்கெல்லாம் அனுப்பிய பாரதிதாசன், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு மட்டும், பத்திரிகையுடன் ஒரு வேண்டுகோளையும் எழுதி அனுப்பினார். அது...
'என் மூத்த மகள் திருமண பத்திரிகையை அனுப்பியுள்ளேன்; தங்களுக்கு ஓய்வு இருக்கிறது என்று, கல்யாணத்திற்கு வந்து விடாதீர்கள். திருமணம் சிறிய கிராமத்தில் நடக்கிறது. நீங்கள் வந்தால், சுற்று வட்டார மக்கள் நிறைய பேர் கூடி விடுவர்; கூட்டத்தை சமாளிப்பது, திருமண நேரத்தில் சிரமமாகி விடும். எனவே, தங்களது வாழ்த்தை மட்டும் அனுப்பினால் போதும்...' என்று எழுதியிருந்தார், பாரதிதாசன்.

'அண்ணாவின் உவமைகள்' நூலிலிருந்து: பொதுக்கூட்டம் ஒன்றில், அண்ணாதுரை நின்று, கை வைத்து பேசும்படியான,'போடியம்' ஒன்றை அமைத்திருந்தனர். பேசுவதற்காக அதன் அருகே சென்று நின்றார், அண்ணாதுரை. சராசரி உயரத்துக்கும் குறைவான அண்ணாதுரையை, 'போடியம்' மறைத்ததால், அதை அகற்றுமாறு, கூச்சல் எழுப்பினர், பார்வையாளர்கள்.
அப்போது, அன்பர் ஒருவர் ஓடிப் போய், ஒரு பெட்டியை கொண்டு வந்து போட்டு, அதன் மீது ஏறி நின்று பேசுமாறு, அண்ணாதுரையை வேண்டினார்.
அதில் ஏறி நின்ற அண்ணாதுரை, 'தொண்டர்களால் உயர்ந்தவன் நான் என்பது, இப்போது புரிந்திருக்கும்...' என, பேச்சை ஆரம்பிக்க, கரகோஷம் அடங்க, வெகு நேரமாயிற்று!

சுகிசிவம் ஒரு சொற்பொழிவில் பேசியது: ஒருமுறை, திருவண்ணாமலையில், சிலப்பதிகார வழக்காடு மன்றம் நடந்தது. நானும், கி.வா.ஜ.,வும் கீழே அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தோம். பேச்சாளர்கள் பிழையாக பேசினர்; நான் எரிச்சல் அடைந்தேன். நிகழ்ச்சி முடிந்து, பேச்சாளர்கள் கீழே இறங்கி வந்து, கி.வா.ஜ.,வை வணங்கினர். அவர்களது தவறுகளை சுட்டிக்காட்டவில்லை,
கி.வா.ஜா.,
நான் கோபத்துடன், 'அவர்கள் தவறுகளை நீங்கள் சுட்டிக் காட்டியிருக்கலாமே...' என்றேன். 'அவர்கள் நம்மிடம், 'நாங்கள் ஏதாவது தவறுதலாகப் பேசினோமா...' என்று கேட்டனரா... கேட்டால் தான் கருத்து சொல்ல வேண்டும்; அவ்வாறு இல்லாத போது, நாம் ஏன் அவர்களை காயப்படுத்த வேண்டும்...' என்றார், கி.வா.ஜ.,

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X