இதப்படிங்க முதல்ல.... | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
இதப்படிங்க முதல்ல....
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2017
00:00

ரிஸ்க் எடுக்கும் விஜயசேதுபதி!
நவராத்திரி படத்தில், ஒன்பது வேடங்களில் நடித்தார், சிவாஜி கணேசன். அதையடுத்து, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய, தசாவதாரம் படத்தில், பத்து வேடங்களில் நடித்தார், கமல். இந்நிலையில், தற்போது, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன் என்ற படத்தில், எட்டு வேடங்களில் நடிக்கிறார், விஜயசேதுபதி. இந்த வேடங்கள், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, உடல் எடையை கூட்டி குறைத்து, முதன்முறையாக, அதிக, 'ரிஸ்க்' எடுத்து நடிக்கிறார்.
சினிமா பொன்னையா

சர்ச்சையை உருவாக்கிய ரீமா கல்லிங்கல்!
தமிழில், பரத் நடித்த, யுவன் - யுவதி படத்தில், கதாநாயகியாக நடித்தவர், ரீமா கல்லிங்கல். பிரபல மலையாள நடிகையான இவர், சினிமாவில், 60 வயது கதாநாயகர்களுக்கு ஜோடியாக, 20 வயது நடிகைகள் கதாநாயகியாக நடிப்பதும், அதன்பின், கொஞ்சம் வயதாகி விட்டால், அந்நடிகைகளையே, அதே கதாநாயகர்களுக்கு, அம்மாவாக நடிக்க வைப்பதற்கும், கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, பேட்டி கொடுத்துள்ளார். அத்துடன், 'சில நடிகர்கள், தங்களது மகளை விட, குறைவான வயதுள்ள நடிகைகளுடன், 'டூயட்' பாடுகின்றனர்; இது, எவ்வகையில் நியாயம்...' என்று கூறியுள்ளார். இப்பேட்டி, மலையாள திரையுலகில், பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அதிகிரமமான ஊரில் கொதிக்கிற மீன் சிரிக்கிறதாம்!
எலீசா

உயிரோட்டமான காதல் கதையில் த்ரிஷா!
விஜயசேதுபதி மற்றும் சிவகார்த்தி கேயன் போன்ற நடிகர்களுடன், நயன்தாரா நடித்து வருவதை தொடர்ந்து, த்ரிஷாவும், இளவட்ட நடிகர்களுடன் நடிப்பதில், ஆர்வம் காட்டுகிறார். அவ்வகையில், விஜயசேதுபதியுடன், 96 என்ற படத்தில் நடிக்கிறார். 1996ல் நடக்கும் காதல் கதையில் உருவாகும் இப்படத்திற்காக, அக்காலத்து கெட்டப்பில் நடிக்கிறார். அதோடு, விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பின், உயிரோட்டமான காதல் கதை, தனக்கு கிடைத்திருப்பதாக சொல்கிறார். அடித்தது ஆட்டம்; பிடித்தது பெண்டு!
— எலீசா

ஜல்லிக்கட்டு வீரரான விஜய்!
தெறி படத்தை தொடர்ந்து, அட்லி இயக்கத்தில், விஜய் நடித்துள்ள, மெர்சல் படம், ஜல்லிக்கட்டு சம்பந்தமான கதையில் உருவாகியிருக்கிறது. இப்படத்தில், ஜல்லிக்கட்டு வீரராக நடிக்கிறார், விஜய். இதற்காக, மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சம்பந்தப்பட்ட சில காட்சிகளும், சென்னை, மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை தழுவிய காட்சிகளும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!
பரோட்டா காமெடியனின் அலம்பல், அதிகமாக இருந்ததால், மேல்தட்டு கதாநாயகர்கள் கழட்டி விட்டு வருகின்றனர்; இதனால், தற்போது, மூன்றாம் தட்டு நடிகர்களுடன் மட்டுமே நடித்து வரும் அவர், அடுத்தபடியாக, சில, வளர்ந்து வரும் நடிகர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறார். அத்துடன், இதுவரை நாள் சம்பளம் பேசி வந்த நடிகர், தற்போது, 'உங்களால் என்ன முடியுமோ, அதை கொடுங்கள்; நடிக்கிறேன்...' என்று, தயாரிப்பாளர்களிடம் இறங்கிச் சென்று, வாய்ப்பு கேட்டு வருகிறார்.

மேல் தட்டு கதாநாயகர்களால் ஓரங்கட்டப்பட்டுள்ள, மூனுஷா நடிகைக்கு, கதையின் கதாநாயகியாக தன்னை நிலை நிறுத்த வேண்டும் என்பது பெரிய ஆசை. அதனால், ஹீரோயிசமுள்ள கதைகளை தவிர்த்து, தனக்கு முக்கியத்துவமுள்ள கதை சொல்பவர்களை, அரவணைத்து வருகிறார். அவ்வகையில், நடிகையின் கூடாரத்தில், அறிமுக இயக்குனர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

சினி துளிகள்!
* 'சமீபத்திய நடிகர்களில், ஜி.வி.பிரகாஷ் எனக்கு ரொம்ப பிடித்தமான நடிகர்...' என்கிறார், தமாசு நடிகர், சூரி.
* விஜய் மற்றும் அஜித்தின் படங்களை தொடர்ந்து, ராகவா லாரன்ஸ் நடிக்கும் சரித்திர படத்தில், கதாநாயகியாக நடிக்கிறார், காஜல் அகர்வால்.
* ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ்பாபு நடித்துள்ள, ஸ்பைடர் படத்தில், வில்லனாக நடித்திருக்கிறார், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா.

அவ்ளோதான்!

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X