கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2017
00:00

எல்லா பிரச்னைக்கும் தீர்வு, இறைவனிடமே உள்ளது. அவரை, நாம் தெரிந்து வழிபட்டாலும், தெரியாமல் வழிபட்டாலும் அருள் மழை பொழிய, அவர் தவறுவது இல்லை.
பழனவேலி எனும் ஊரில், பட்டினசாமி என்ற வியாபாரி இருந்தார்; பணக்காரரான இவர், முற்பிறவியின் தீவினையால், செல்வங்கள் எல்லாம் இழந்து, வறியவர் ஆனார். சொந்த பந்தங்களும் அவரை விட்டு விலகினர்.
இதனால், தன் மனைவியுடன், காட்டை அடைந்து, அங்கு கிடைக்கும் காய் - கனி மற்றும் கிழங்குகளை உணவாக உண்டு, வாழ்ந்து வந்தார். சிறிது காலத்திற்கு பின், அங்கிருந்து வெளியேறி, திருவாரூருக்கு வந்தனர், பட்டினசாமியும், அவர் மனைவியும்!
அங்கே, குளங்களில் மலர்ந்து இருக்கும் தாமரை மலர்களை பறித்து, அவற்றை விற்று, அதன் மூலம் கிடைக்கும் வருவாயில், வாழ்க்கை நடத்தி வந்தனர்.
ஒருநாள், வீதி வீதியாக திரிந்தும், ஒரு மலர் கூட விற்பனையாகவில்லை. அவரும், அவர் மனைவியும் உணவின்றி, பசியால் வாடினர். அதனால், அம்மலர்களை எடுத்து, திருவாரூர் தியாகராஜ பெருமான் திருக்கோவிலுக்கு சென்றனர்.
அப்போது, அங்கு கூடியிருந்தவர்கள், சிவபெருமானின் பெருமையை கூறி, 'வைகாசி, விசாக புண்ணிய நாளான இன்று, தாமரை மலர்களால், சிவபெருமானை வழிபட்டு நோன்பிருந்தால், அளவில்லாத ஐஸ்வர்யம் கிடைப்பதுடன், முக்தியும் கிடைக்கும்...' என்று பேசிக் கொண்டிருந்தனர். பின், அவர்கள், பட்டினசாமியிடம், 'உன்னிடம் இருக்கும் தாமரை மலர்களுக்கு, என்ன விலை சொல்கிறாய்...' என, கேட்டனர்.
சிவ மகிமை மற்றும் தாமரை மலர்களால் வழிபாடு ஆகியவற்றை கேட்ட பட்டினசாமியும், அவர் மனைவியும் தங்களை மறந்தனர்; அவர்கள் மனம் முழுவதும், பரமேஸ்வரனே நிறைந்திருந்தார்.
அதனால், விற்பனை செய்யாமல், தியாகேசப் பெருமானுக்கு அத்தாமரை மலர்களை சாற்றி, மனமுருகி வழிபாடு செய்தனர்.
அதன் பயனாக, மறுபிறவியில், சூரிய குலத்தில், இஷ்வாகு மன்னர் பரம்பரையில், பத்திரசேனன் எனும் பெயரில் அரசனாக பிறந்தார், பட்டினசாமி; அவர் மனைவியும், அரச குலத்தில் பிறந்து, பத்திரசேனனை மணந்தாள்.
அகம் குழைந்து, ஆரூரானை வழிபட்ட அடியார்களுக்கு, தியாகராஜப் பெருமான் அருள் புரிந்த வரலாறு இது!

- பி.என்.பரசுராமன்

தெரிந்ததும் தெரியாததும்!
விளக்கேற்றிய பின், தலை வாரக் கூடாது ஏன்?
வழிபாட்டுக்குரிய நேரம், மாலைவேளை; விளக்கேற்றும் நேரத்தில், திருமகள் இல்லத்தில் உறைந்திருப்பதாக ஐதீகம். அச்சமயத்தில், பெண்கள், கூந்தலை விரித்தபடி நிற்பது நல்லதல்ல. எனவே, விளக்கு வைப்பதற்கு முன், மாலை, 5:30 மணிக்குள், பெண்கள் தலைவாரி, பூ முடித்து, நெற்றியில் திலகமிட்டு கொள்வது, சிறப்பை தரும்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X