அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2017
00:00

அன்புள்ள அம்மா —
என் வயது, 23; ஆசிரியையாக பணியாற்றுகிறேன். நடுத்தர குடும்பம். என் பெற்றோர், சிறு சிறு விஷயங்களுக்கு கூட சண்டையிட்டு, ஊர்க்கூட்டம் வரை செல்வது வழக்கம்; இது, எனக்குள் மிகப் பெரிய மனப் பாதிப்பை ஏற்படுத்தியது. இவர்களால், என் தம்பியும், ரவுடியாகி விட்டான். அவன் திருடி வந்தால் கண்டிக்க மாட்டார்கள். இதனால், பள்ளிப்பருவத்திலேயே, பல்வேறு தீய பழக்கங்களை கற்று விட்டான்.
இந்நிலையில், நான்கு ஆண்டுகளாக வேறு ஜாதியை சேர்ந்தவரை காதலித்து வருகிறேன். என்னவரும் கஷ்டப்பட்டு படித்தவர்; அம்மாவின் வளர்ப்பில் வளர்ந்தவர். எவ்வித கெட்ட பழக்கங்கள் இன்றி, பொறுப்பாக இருந்தது, என்னை மிகவும் ஈர்த்தது. தற்போது, அரசு வேலைக்கு முயற்சித்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், என் காதல் விஷயத்தை தந்தையிடம் தெரிவித்தேன்.
மிகவும் உடைந்து விட்டார், என் தந்தை. 'உன் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன்; ஏமாற்றி விட்டாயே...' என்று அழுதார். பின், 'அவனை கொலை செய்ய போகிறேன். நீ செத்தாலும் பரவாயில்லை; அவனை திருமணம் செய்ய விட மாட்டேன்...' என்கிறார்.
என் காதலை, தந்தையிடம் தைரியமாக சொன்னதற்கு காரணமே, அவரும் ஒரு பெண்ணை காதலித்து, திருமணம் செய்து, குழந்தையுடன் கை விட்டு, என் அம்மாவை திருமணம் செய்து, கஷ்டத்தை அனுபவிப்பவர் என்பதால் தான்.
ஆனால், அவர் என் காதலை எதிர்ப்பதற்கு காரணம், என் காதலர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதாலேயே!
என் தந்தையை மன வருத்தம் அடையச் செய்யும் காதல் வேண்டாம் என்று நினைக்கும் போதெல்லாம், என் பெற்றோரின் சண்டையும், அவர்களின் போலியான வாழ்க்கையும் பார்த்துப் பார்த்தே, என் காதலில் உறுதியாகி விட்டேன். இவர்களை போல் இல்லாமல், சந்தோஷமாக, உண்மையான அன்புடன் வாழ வேண்டும் என்று நினைக்கிறேன்.
என்னவர் வீட்டில் சம்மதித்து விட்டனர். நானும், அவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். எங்களால் வாழ முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், என் பெற்றோரை அவமானப்படுத்தி, ஓடிப்போய் திருமணம் செய்வதில் விருப்பம் இல்லை.
என் தந்தையோ, 'திருமணம் செய்து கொடுத்தால், கூட்டி கொடுத்து விட்டேன் என, ஊர் பேசும். நீ தற்கொலை செய்தால் கூட, வயித்துல வந்துருச்சு; அதான் செத்துப் போயிட்டா என்பர்...' என, ஊரை பற்றியே கவலைப்படுகிறார். என் அம்மா சில நேரம் திட்டுகிறார்; சில சமயம், 'உன் கூட சேர்ந்தவ எல்லாம் குழந்தையோட இருக்கா; நீ இப்படி உட்கார்ந்திருக்க...' என்பார்.
இந்த நான்கு ஆண்டுகளாக, நாங்கள் கண்ணியமாகத்தான் பழகி வருகிறோம். எனக்கு கர்ப்பப் பை பிரச்னை உள்ளது. இது என்னவருக்கு தெரியும். 'பரவாயில்லை; டிரீட்மென்ட் எடுப்போம்...' என்கிறார்.
என் அப்பா மாறவே மாட்டார்; பெற்றோருக்காக காதலை விடுவதா, காதலுக்காக, பெற்றோரை விடுவதா என்று தெரியாமல் தவிக்கிறேன். என் தந்தையோ, 'சாகப் போகிறேன்; அதற்கு முன் அவனை கொல்லப் போகிறேன்...' என்கிறார். என்னவரோ, 'நம்ப வைச்சு ஏமாத்த பார்க்கிறாயா...' என்கிறார்.
என் உணர்வுகளை யாருமே புரிந்து கொள்ள மறுக்கின்றனர். எனக்கு நல்லதொரு ஆலோசனை சொல்லுங்கள்.
இப்படிக்கு,
அன்பு மகள்.


அன்பு மகளுக்கு —
நம் நாட்டில் வெற்றி பெறாத காதல் கதைகள் ஏராளம்; பெற்றோருக்காக, பெரும்பாலான இந்தியப் பெண்கள், தங்கள் காதலை தியாகம் செய்கின்றனர். காதல், எல்லா பெற்றோருக்குமே கெட்ட வார்த்தை; ஒவ்வாமையை ஏற்படுத்த கூடிய விஷயம் தான். இதில், உன் தந்தை, வேறு ஜாதி ஆணை காதலிக்கும் உனக்கு எதிராய் இருப்பதில் பெரிய ஆச்சரியமில்லை.
உடனடியாக உனக்கு வரன் பார்த்து, கட்டாய திருமணம் செய்யும் எண்ணத்தில், உன் பெற்றோர் இல்லை. அதனால், உன் தந்தையோ, தாயோ வாய் விட்டு, மனம் விட்டு புலம்பட்டும் விடு. நீயும், உன் காதலனும் நைச்சியமாக திட்டமிடுங்கள். உன் காதலன் வேலைக்கு போகட்டும்; இடைப்பட்ட காலத்தில், நீ மகப்பேறு மருத்துவரை அணுகி, கர்ப்பப் பை பிரச்னையை குணமாக்கு. காதலனுடனான தகவல் தொடர்பை சீராக வை. உன் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோரின் குணங்களை வெறுப்பதற்கு பதில், அவர்களை நல்வழிப்படுத்து.
ஆணவக் கொலை நடக்கக் கூடும் என நினைத்தால், மிக ஜாக்கிரதையாக, அதை மோப்பம் பிடித்து, தவிர். பொதுவாக காதல் திருமணம் செய்வோர், சில, பல விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கணவனுக்கு தெரியாமல், பெற்றோருடன் மொபைல் போனில் பேசக் கூடாது; ஆசை வார்த்தை கூறி, தனியாக அழைத்தால், பெற்றோர் வீட்டுக்கு போய் விடக் கூடாது.
பிறர் கண்களை உறுத்தும் வண்ணம், தாக்குதலுக்கு வழி வகுக்கும் வகையில், பொது இடங்களில் சுற்றக்கூடாது. தனிக்குடித்தனம் போகும் காதலர்கள், அற்ப விஷயங்களுக்கு சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. ஒரு குழந்தை பிறந்தால், இரு தரப்பும் ராசி ஆகி விடுவர் என, தப்புக்கணக்கு போடக்கூடாது.
திருமணமான முதல் ஐந்து ஆண்டு காலம் மிக ஆபத்தானது. அதை, சாதுர்யமாக ஓட்டி விட்டால் போதும்; அதன்பின், ஆணவக் கொலைகள் நடப்பதற்கான சாத்தியம் குறைந்து விடும்.
எனவே, நீ, உன் பெற்றோருக்காக காதலை கை கழுவ தேவையில்லை. காதலுக்காக, பெற்றோரை தற்காலிகமாக பிரி. ஓடிப்போவது என்கிற பதப்பிரயோகம் தேவையில்லை. 'திருமண வயதை தாண்டிய ஒரு ஆணும், பெண்ணும் கண்ணியமான வாழ்க்கை வாழ, பதிவு திருமணம் செய்ய போகிறோம்...' என, சொல்.
காதலில் ஜெயிப்பது முக்கியமல்ல; திருமண வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும். அதுதான், காதலுக்கு நீயும், உன் காதலனும் செய்யும் மரியாதை!
உன் திருமணத்துக்கு என் நல்வாழ்த்துகள்!
என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்!

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
HoustonRaja - Houston,யூ.எஸ்.ஏ
11-ஜூலை-201721:59:35 IST Report Abuse
HoustonRaja வழி போக்கன் - நீங்கள் எதிர் விமர்சர்சங்களை பாராமல் தொடர்ந்து எழுதுவதற்கு முதலில், எனது நன்றி. இந்த வாரம், உங்களின் "கவனிப்பு" தெளிவாக இருந்ததால், உங்களின் "கணிப்பு" சரியாக இருக்கிறது. இப்பெண்ணின் பிரச்சினைக்கு, அவரின் ஒரு வரியிலே மறைந்திருந்த "வில்லங்கத்தை" வெளிக்கொணர்ந்து - அருமையான தேர்வு சொல்லியுள்ளீர்கள். ஸ்ரீராம் சொல்வதைப்போல, உங்களைப்போன்ற ஒருவரே இங்கே "அதிகாரப்பூர்வ" பதில் எழுத சிறந்தவர். தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.
Rate this:
Share this comment
Cancel
ARUL - chennai,இந்தியா
11-ஜூலை-201717:06:45 IST Report Abuse
ARUL என் உணர்வுகளை யாருமே புரிந்து கொள்ள மறுக்கின்றனர்அடுத்தவர் மீது பழியைப் போடும் இந்தப் புத்தியை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்டவர்கள் காதலில் மட்டுமல்ல , வாழ்க்கையிலும் வெற்றி காண்பது கடினம். என் உணர்வுகளை மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியவில்லை என்று நினைக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால் அது கூடுதல் முயற்சிகளுக்கு ஒருவரை உந்தும் . யாருடைய உதவியும் இன்றி அவராகவே நல்ல தீர்வு கண்டு பிடித்து விடுவார்.
Rate this:
Share this comment
Cancel
manivannan - chennai,ஆஸ்திரேலியா
10-ஜூலை-201710:22:03 IST Report Abuse
manivannan ஏமாத்த பார்க்கிறாயா என்று சொல்கிற உன்னவனும் சரி, தற்கொலை பண்ணி கொள்வேன் என்று சொல்லுகிற (பயமுறுத்துகிற) உன் தகப்பனும் சரி நம்ப முடியாதவர்கள்.உன் நிலைமை கவலையை தருகிறது. முதலில் உன்னை காப்பாற்றி க்கொள்ள வழியை தேடு. .மகளிர் முண்ணேற்றங்களு க்காக உள்ள நிறு வனங்களை அணுகி இரண்டு பேரிடமிருந்துமே தப்பித்து வேலையில் கவனம் செலுத்து...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X