குருபார்வை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2017
00:00

தற்போதைய சூழலில் டாப் திறன்கள் என்ன இருந்தால் சாப்ட்வேர், ஐ.டி. மற்றும் பிற சிறப்பான துறைகளில் நல்ல வேலைவாய்ப்பை பெறலாம்?
- ரவீந்திரன், திருப்பூர்:

யூ.ஐ. : User Interface Design பிரிவில் நீங்கள் சிறப்புத் திறன் பெற்றிருந்தால் ஆண்டுக்கு 5 முதல் 10 வரை சம்பளம் பெறலாம். மொபைல் டெவலப்மென்ட் : இந்த திறனானது ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ்., டெவலப்பர்ஸ், டெக்னிகல் ஆர்க்கிடெக்ட் , லீட் சாப்ட்வேர் இன்ஜினியர், புராஜக்ட் மேனேஜர் போன்ற உட்பிரிவுத் திறன்களை கொண்டது. இவற்றில் நீங்கள் பெற்றிருக்கும் திறனைப் பொறுத்து வேலை பெறலாம். ஆண்டுக்கு 5 லட்சம் முதல் 9 லட்சம் வரை சம்பளம் பெறக்கூடிய வேலைகள் இவை. வெப் ஆர்கிடெக்ச்சர் அண்ட் டெவலப்மென்ட் பிரேம்ஒர்க் : வெப் டெவலப்பர், சாப்ட்வேர் இன்ஜினியர், புராகிராமர் மற்றும் புராஜக்ட் மேனேஜர் போன்ற பணிப் பிரிவுகள் இந்தத் துறையில் உள்ளன. அனுபவம் மற்றும் திறனைப் பொறுத்து 3 முதல் 10 லட்சம் வரை சம்பளம் தாரக கூடிய பிரிவு இது.

கிளவுட் கம்ப்யூட்டிங் :
இந்த பிரிவில் ஐ.டி. ஆர்க்கிடெக்ட், கிளவுட் சாப்ட்வேர் இன்ஜினியர், சாப்ட்வேர் ஆர்க்கிடெக்ட், டெக்கனிகள் கன்சல்டன்ட் போன்ற பணிகள் உள்ளன. பொதுவாக 5 முதல் 20 லட்சம் வரை ஆண்டுக்கு சம்பளம் தரக்கூடிய பிரிவு இது.

ஸ்டோரேஜ் சிஸ்டம்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் :
இதில் ஐ.டி. கன்சல்டன்ட், பிரின்சிபல் சாப்ட்வேர் இன்ஜினியர், டெஸ்ட் இன்ஜினியர், சிஸ்டம் இன்ஜினியர், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் போன்ற பணிகள் இந்தப் பிரிவில் உள்ளன. ஆண்டுக்கு 4.5 முதல் 10 வரை சம்பளம் பெறலாம்.

நெட்வொர்க் மற்றும் தகவல் பாதுகாப்பு :
நெட்வொர்க் செக்யூரிட்டி இன்ஜினியர், நெட்வொர்க் செக்யூரிட்டி அனலிஸ்ட், இன்பார்மேஷன் செக்யூரிட்டி அனலிஸ்ட் மற்றும் செக்யூரிட்டி ஆபிசர் போன்ற பணிகள் உள்ளன. ஆண்டுக்கு 4 முதல் 10 வரை சம்பளம் பெறலாம்.

அல்காரிதம் டிசைன் மற்றும் கோடிங் : சாப்ட்வேர் டெவெலப்மென்ட் இன்ஜினியர், லீட் சாப்ட்வேர் இன்ஜினியர், சாப்ட்வேர் டெவலப்பர் போன்ற பணிகளில் இந்தப் பிரிவில் சிறப்புத் திறன் பெற்றிருப்பவருக்குக் கிடைக்கின்றன. சம்பளம் ஆண்டுக்கு 6 முதல் 10 லட்சம் வரை பெறலாம்.

புள்ளியியல் மற்றும் மைனிங்:
டேட்டா சயின்டிஸ்ட், சீனியர் பிசினஸ் அனலிஸ்ட், டேட்டா அனலிஸ்ட், ஸ்டாடிஸ்டிசியன் டேட்டா அனலிஸ்ட் போன்ற பணிகள் இந்தப் பிரிவில் உள்ளன. திறனையும் அனுபவத்தையும் பொறுத்து இதிலும் ஆண்டுக்கு 3 முதல் 10 லட்சம் வரை சம்பளம் பெறலாம்.

டிஜிட்டல், எஸ்.இ.ஓ., எஸ்.இ.எம்., மார்க்கெட்டிங் :
இந்த பிரிவானது டிஜிட்டல் மார்க்கெட்டிங் மேனேஜர், எஸ்.இ.ஓ., மார்க்கெட்டிங் ஸ்ட்ராட்டஜிஸ்ட், எஸ்.இ.ஓ., மேனேஜர், எஸ்.இ.ஓ., அனலிஸ்ட் போன்ற பணிகள் உள்ளன. 3 முதல் 6 லட்சம் வரை திறனுக்கேற்ப சம்பளம் பெறலாம்.

வங்கி, நிதி சேவை, இன்சூரன்ஸ், வரி :
பைனான்சியல் பிளானர்ஸ், அட்வைசர்ஸ், மியூச்சுவல் பண்ட் அட்வைசர்ஸ், இன்ஸ்யூரன்ஸ் ஏஜெண்ட்ஸ், டாக்ஸ் கன்சல்டன்ட்ஸ் போன்ற பணிகளை உள்ளடக்கியது இந்தத் துறையில் ஆண்டுக்கு 4 முதல் 12 லட்சம் வரை ஊதியம் பெறலாம்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X