அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2017
00:00

கே.கமலக்கண்ணன், கோவை: கஷ்டப்பட்ட காலத்தில் கண்டு கொள்ளாமல், ஓரளவு கால் ஊன்றிய பிறகு, காலைப் பிடிப்பவர்களைப் பற்றி...
காலைப் பிடித்தால் பரவாயில்லை; காலை வாரி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அத்துடன், முடிந்தால், மனிதாபிமான அடிப்படையில், ரொட்டி துண்டுகள் ஏதும் போட முடிந்தால், அதையும் போடுங்கள்!

ப.ராமதாஸ், நெய்வேலி: 'ஸ்டிரைக்' செய்பவர்களின் நிலைமையை கருத்தில் கொள்ளாமல், 'ஸ்டிரைக்' என்ற வார்த்தையை கேட்டாலே, ஏதோ ஈயத்தை காய்ச்சி, காதில் ஊற்றுவதை போல ரொம்பவும் அலுத்து கொள்கின்றனரே நம் மக்கள்...
அவர்களின் அலுப்பில் நியாயம் இல்லை என்றா சொல்கிறீர்கள்... அன்றாட வாழ்க்கையை பறிக்கும் ஊர்வலம், கடை அடைப்பு, வேலை நிறுத்தம், சாலை மறியல் எல்லாவற்றையும் சகித்து, இப்போது வெறுப்படைந்து விட்டனர். போராட்ட முறை இன்னும் பல ஆண்டுகள் இதே போல் தொடர்ந்தால், 'ஸ்டிரைக்' செய்பவர்களை, பொதுமக்கள், 'கவனிக்கும்' நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம்!

பொ.வெங்கடேசன், மதுரை: அரசியலில் இருக்கும் பெரும் புள்ளிகள் பலருக்கு, 'பொது அறிவு' கொஞ்சம் கூட இல்லையே...
அதனால், அவர்களுக்கு என்ன இழப்பு... அவர்களிடம், காசு பண்ணும், 'அறிவு' இருக்கிறதே! இவர்களிடம் சிக்கி இழந்து கொண்டிருப்பதெல்லாம் நாம் தான்!

* சி.மோகன்ராஜன், கம்பம்: வாழ்க்கையில் உயர என்ன வழி?
புத்திசாலித்தனத்துடன் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இன்று உள்ள பொருளாதார நெருக்கடியில், உழைப்பவர்களைத் தவிர, மற்றவரால் உயர முடியாது. செய்ய வேண்டிய வேலையை தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பவர்கள், படுபாதாளத்தில் விழுபவர்கள்!

கே.சி.பாலசுப்பிரமணியன், கள்ளக்குறிச்சி: 'நீங்கள் என்ன ஜாதி' எனக் கேட்பவர்களுக்கு, 'நச்' என பதில் சொல்ல ஒரு, 'ஐடியா' கொடுங்களேன்...
இந்தக் காலத்திலும் இப்படிப்பட்ட கேள்விகள் கேட்கின்றனரா என்ன... போகட்டும்... நாகரிகம் இல்லாமல், ஜாதி பற்றி கேட்பவர்களுக்கு, மையமாக ஒரு புன்சிரிப்பை பதிலாக அளியுங்கள். மனம் நோகும்படி, 'நச்' கொடுக்க வேண்டாம்!

* ஆர்.சுஜாதா, சிவகாசி: சம்பாதிக்கும் ஆண்கள் திறமைசாலிகளா, சேமிக்கும் பெண்கள் திறமைசாலிகளா?
ஆணோ, - பெண்ணோ சேமிக்கும் திறன் உள்ளவரே கெட்டிக்காரர்; - திறமைசாலி. சம்பாதிப்பது எவராலும் முடியும்; அதைக் கட்டிக் காப்பாற்ற, அனைவருக்கும் கை வருவதில்லை!

என்.பிரேம் குமார், வத்தலக்குண்டு: நான், பிளஸ் 2 வகுப்புக்கு செல்ல இருக்கிறேன்; நல்லவனாக இருக்க விரும்புகிறேன் என்ன செய்ய வேண்டும்?
படிக்கும் மாணவரான நீங்கள், ஆசிரியருக்கு நல்லவனாக இருக்க வேண்டுமல்லவா... அப்படியானால், அலட்சியமாக இருக்காதீர்கள். பெற்றோருக்கு நல்லவனாக இருக்க, அரசியல் கட்சியின் வாசனையே உங்கள் மீது படாதிருக்க முயலுங்கள். நண்பர்களுக்கு, நல்லவனாக இருக்க, அவர்களிடம் காசு கடன் கேட்காதீர்கள்; நீங்களும், அவர்களுக்கு கடன் கொடுக்காதீர்கள்!

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
27-ஜூலை-201700:29:20 IST Report Abuse
Manian ஒங்களுக்கும் பொறாத காலமா? ஜாதகத்திலே சனி தோஷம் இருக்கு, எதுவுமே பலிதமாகாதுன்னு ஜோஜியர் சோமயாஜி சொன்னது சரியாய் போச்சு. எழுதின ஜாதகத்தை எப்படி மாத்த முடியும். இது பற்றி மனைவி, மகனுடன் முன்பே பேசவேண்டியது அவசியம். போன காசு திரும்ப வராது. தெரிஞ்சவரும் ஒரு தடவை ஏமாந்தேன், கோர்ட்டுக்கு போனேன். வாங்கினவன் வாங்கவே இல்லை ஏற்றான், வக்கீலிடம் சொன்னேன்- அவனுக்கு ஒரே மகன். அவன் தலையில் கை வைத்து சத்தியம் சொல்ல கோர்டில் ஜட்ஜிடம் சொல்லுங்க. என் பணம் கைக்கு வந்தது.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
25-ஜூலை-201707:43:18 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> என் தொலியிட உள்ளது இந்தப்பழக்கம் இன்ன என்ன சாதி என்று கேக்கும் குணம் ,ஒருமுறை என் தோழி நித்திய என்று பேரு நாகப்பட்டினம் லெந்துவந்தாங்க மீனவப்பெண் அவர் படிச்சுருந்தாங்க ரொம்பவே இனிமையாக பழகுவார் எதிர் எதிர் பிளாட் ஸ் லே இருந்தோம் அந்த பெண் என்னுடன் ஆண்டி என்று ரொம்பவே இஷ்டமா பழகும் குணம் உள்ளவர் , அவளை பார்த்த என் தோழி என்னுடன் அவளை பார்த்தால் கீழ் சாதி போல இருக்காளே என்று கேட்க நேக்கு செம கோவம் வந்தது சாரி கமலா அவாளும் நம்மள போல மனித சாதி தான் என்று வெடுக்குன்னு சொல்லிட்டேன் , நான் வடநாட்டுலேயே பிறந்துவளந்ததால் நேக்கு மெய்யாலுமே சாதி பேதம் தெரியாது அநேகமா நானும் நித்யாவும் ஒண்ணாகவே சாப்பிடுவோம் மதிய உணவு அவா டிஷ் பண்ணா சொல்லிடுவா ஆன்டி நீங்கள் தனியா சாப்பிடுங்க என்று அன்றுதான் தனியே சாப்பிடுவோம் அதிலும் அவபிள்ளைக்கு எங்கள் வீட்டு ரசம் கட்டாயம் வேண்டும் என்று ஆடம் செய்வான் அது மட்டும் ஷர் பண்ணுவேன் . இப்போது தான் அவ எங்கே இருக்கிறாள் என்று தெரியலே , அவ பொண்ணுக்கும் திருமணம் ஆயிருக்கும் மகனுக்கும் கூட நான் ஒரு இடம் போயிட்டேன் அவ வேறு இடம் என்று பிரிஞ்சுட்டோம் . கடைசியா அவளை பார்த்தபோது அவள் விருகம்பாக்கம் லே இருந்தால்
Rate this:
Share this comment
Cancel
23-ஜூலை-201706:58:55 IST Report Abuse
சுவாமி சுப்ரஜனாந்தா //காலைப் பிடித்தால் பரவாயில்லை காலை வாரி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அத்துடன், முடிந்தால், மனிதாபிமான அடிப்படையில், ரொட்டி துண்டுகள் ஏதும் போட முடிந்தால், அதையும் போடுங்கள் //நல்ல பதில்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X