இணைந்த கிரகங்கள்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2017
00:00

ஜூலை 27 - ராகு கேது பெயர்ச்சி!

நவக்கிரக மண்டபத்தில், ராகுவும், கேதுவும் தனித்தனியாக இருப்பதே மரபு. ஆனால், இரண்டும் இணைந்து, ஒரே சன்னிதியில் காட்சி தருவதை, திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் (பாம்புரநாதர்) கோவிலில், காணலாம். ஜூலை 27ல், ராகு, சிம்மத்திலிருந்து, கடகத்திற்கும், கேது, கும்பத்திலிருந்து, மகரத்திற்கும் மாறுகின்றனர். இந்த பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசியினர், ஒருங்கிணைந்த ராகு - கேதுவை தரிசித்து வரலாம்.
விநாயகர், கைலாயத்தில் தன் தந்தை சிவபெருமானை வணங்கிய போது, அவரது கழுத்தில் இருந்த பாம்பு, தன்னையும் விநாயகர் வழிபட்டதாக நினைத்து கர்வம் கொண்டது. இதனால், கோபம் கொண்ட சிவன், நாக இனம் முழுவதும், தன் சக்தியை இழக்க சாபமிட்டார். தங்கள் இனத்தில் ஒருவர் செய்த தவறுக்காக, மற்றவர்களை தண்டிக்கலாகாது; தவறு செய்த பாம்பை மன்னிக்கும்படி சிவனை வேண்டின, பாம்புகளும், ராகு மற்றும் கேதுவும்!
பூலோகத்தில், தவமிருந்து சாப விமோசனம் பெறலாம் என அருளினார், சிவபெருமான். அதன்படி, பாம்புகள் எல்லாம் ஓரிடத்தில் கூடி தவம் செய்தன. பாம்புகள் கூடிய ஊர் என்பதால், 'திருப்பாம்புரம்' ஆயிற்று.
சிவனின் சாபத்தால் விஷத்தை இழந்த ஆதிசேஷன், இத்தலத்தில் வழிபட்டு மீண்டும் விஷத்தன்மை பெற்றதால், இங்கு வந்து வழிபடுவோர், தாங்கள் இழந்ததை மீண்டும் பெறுவர்.
கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம், நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர், கீழப்பெரும்பள்ளம், திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி மற்றும் கும்பகோணம் நாகநாதர் கோவில் ஆகிய ஐந்து தலங்களின் பெருமையை ஒருங்கே அமையப்பெற்ற தலம் இது. எனவே, இங்கு சர்ப்பதோஷம் மட்டுமின்றி, சர்வ தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம். ஆதிசேஷனுக்கு இங்கு உற்சவர் விக்ரகம் உள்ளது.
மற்ற கோவில்களில் ராகு, கேது தனியாக இருக்கும்; இங்கு ஒரே சரீரமாக, பின்னிப்பிணைந்து இருப்பதைக் காணலாம். ஜாதகத்தில் காள சர்ப்ப தோஷம், 18 ஆண்டு ராகு தசை, ஏழு ஆண்டு கேது தசை, களத்திரதோஷம் எனப்படும் வாழ்க்கை துணை தோஷம், புத்திர தோஷம் நீங்கவும், கனவில் பாம்பு வருதல், பாம்பை கொன்றிருந்தால் மற்றும் கடன் தொல்லைகள் இருந்தால், இத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்வர்.
கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் வழியில், 20 கி.மீ., தூரத்திலுள்ள, கற்கத்தி கிராமத்தில் இருந்து பிரியும் சாலையில், 3 கி.மீ., தூரம் சென்றால், திருப்பாம்புரத்தை அடையலாம்.

தி. செல்லப்பா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X