பறக்காத பறவை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2017
00:00

கிவி
ஆங்கிலப் பெயர்: 'கிவி' (Kiwi)
உயிரியல் பெயர்: 'அப்டெரிக்ஸ் ஆஸ்ட்ராலிஸ்' (Apteryx Australis)


'கிவி' கோழி இனத்தைச் சேர்ந்த பறவை. 'அப்டெரிகிடே' (Apterygidae) குடும்பத்தைச் சேர்ந்தது. கோழியின் அளவுதான் இருக்கும். இதன் இறக்கைகள், சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். இறக்கைகள் வெளியே தெரியாத அளவுக்கு, மிகச் சிறியதாக இருக்கும். இறக்கைகள் இருந்தாலும் இவற்றால் பறக்க முடியாது. ஆனால், இவை மணிக்கு 19 கி.மீ. வேகத்தில் ஓடும். அலகு நீளமாகவும், வளைந்தும் இருக்கும். கூர்மையான அலகின் உதவியோடு, இவை இரையைப் பிடித்து உண்கின்றன. கால்களின் நான்கு விரல்களிலும் தடித்த தசை காணப்படும். இவை மிகுந்த கூச்ச சுபாவமுடையவை. பகல் முழுவதும் பொந்துகளில் உறங்கும். இரவு நேரங்களில் நடமாடும். புழுக்கள், பூச்சிகள், பழங்களை உண்ணும்.
கிவி பறவை முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். முட்டைகள் அளவில் பெரியதாக இருக்கும். ஒரு முறைக்கு இரண்டு முட்டைகள் வரை இடும். முட்டைகளை ஆண், பெண் இரு பறவைகளும் அடைகாக்கின்றன. மரப்பொந்துகள், புதர்ப்பகுதிகளில் உள்ள பொந்துகளை வசிப்பிடமாகத் தேர்ந்தெடுக்கின்றன. காட்டுப்பன்றி, காட்டுப் பூனை போன்ற விலங்குகளால் வேட்டையாடப்படுகின்றன. நியூசிலாந்திலும் அதைச் சுற்றி உள்ள சிறிய நாடுகளின் காடுகளிலும் இவை வாழ்கின்றன. கிவி, காடுகளில் வாழும் பறவை என்பதால், காடுகளை அழித்தல் போன்ற இயற்கைக்கு எதிரான செயல்கள் இவற்றின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்றன. நியூசிலாந்தின் தேசியப் பறவை கிவி.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X