கேள்வி-பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2011
00:00

கேள்வி: ஒரு பைலுக்கான ஐகானை மாற்றி அமைப்பது விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் மிக எளிதாக இருந்தது. ஆனால் விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இது ரெஜிஸ்ட்ரி வரை சென்று மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது. ரெஜிஸ்ட்ரியைத் தொடாமல் ஐகானை மாற்ற வேறு வழி உள்ளதா?-டி. கார்த்திக் ராஜ், சென்னை.
பதில்: நீங்கள் சொல்வது சரிதான். பைல் வகை ஒன்றிற்கான ஐகானை மாற்ற, விண்டோஸ் 7 சிஸ்டத்தில், அதன் ரெஜிஸ்ட்ரி வரை செல்ல வேண்டியுள்ளது. ரெஜிஸ்ட்ரி தொடாமல் மாற்ற, தேர்ட் பார்ட்டி சாப்ட்வேர் தொகுப்பு ஒன்றின் உதவியைப் பெற வேண்டியதிருக்கும். இதற்கு நிர்சாப்ட் (Nirsoft) நிறுவனம் வழங்கும் file types manager என்ற புரோகிராம் உதவும். இதனை http://www.nirsoft.net/utils/file _types_manager. html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். நான் இதனை ஒரு முறை பயன்படுத்தி, எம்பி3 பைல்களுக்கான ஐகான் முழுவதையும், சில நொடிகளில் மாற்றி அமைத்தேன்.
மேற்சொன்ன புரோகிராமினை இன்ஸ்டால் செய்து இயக்கவும். பின்னர் கண்ட்ரோல் + எப் கொடுத்து, சர்ச் டயலாக் பாக்ஸ் பெறவும். அடுத்து, ஐகான் மாற்ற விரும்பும் பைல் எக்ஸ்டன்ஷன் பெயரைக் கொடுக்கவும். எம்பி3 பைல் என்றால், .mp3 எனக் கொடுத்து என்டர் தட்டவும். அனைத்து mp3 பைல்களும் பட்டியலிடப் படும். இந்த இடத்தில், மாற்ற வேண்டிய பைல் வகையினைத் தேர்ந்தெடுத்து, Edit Selected File Type என்பதனைக் கிளிக் செய்திடலாம். அல்லது எப்2 கீயை அழுத்தலாம். இப்போது Edit File Type என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். ஏற்கனவே உள்ள ஐகானின் வலது பக்கம் உள்ள பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும். இப்போது Change Icon காலரி அல்லது பிரவுஸ் பட்டனைத் தட்டவும். இதிலிருந்து ஒரு ஐகானைத் தேர்ந்தெடுக்கவும். ஓகே கொடுக்க, ஏற்கனவே இருந்த ஐகானுக்குப் பதிலாக இந்த ஐகான் அமைக்கப்படும்.

கேள்வி: என் மெயில் பாக்ஸில் சில நம்பிக்கைக்குரிய நண்பர்களிடமிருந்து வரும் பைல்களில், இதுவரை பார்த்திராத எக்ஸ்டன்ஷன் பெயர்கள் உள்ளன. இவை என்ன வகை என்றும், இவற்றை எந்த புரோகிராம் திறக்கும் என்றும் தெரியவில்லை. அனுப்பியவர்களிடம் கேட்க சற்று வெட்கமாக உள்ளது. எந்த புரோகிராம் திறக்கும் என்று எப்படி அறிவது?-சி. ஊர்காவலன், சிட்டம்பட்டி.
பதில்: இதில் என்ன வெட்கம். தகவல் ஒன்றைத் தெரிந்து கொள்ள வயது, ஸ்டேட்டஸ் என்றெல்லாம் பார்க்காமல், யாரிடம் கேட்டால் தெளிவு கிடைக்குமோ, அவரிடம் கேட்பதுதான் கற்றலின் முதல் படி.
சரி, உங்கள் கேள்விக்கு வருவோம். அதிர்ஷ்ட வசமாக உங்களுக்கு உதவ ஓர் இணைய தளம் உள்ளது. அதன் முகவரி http://filext.com/ . இங்கு சென்றால், அனைத்து எக்ஸ்டன்ஷன் உள்ள பைல் குறித்தும் தகவல் கிடைக்கும். அதனை எந்த புரோகிராம்களில் எல்லாம் திறந்து படிக்கலாம் என்பதுவும் காட்டப்படும். குறிப்பிட்ட பைலுக்கான புரோகிராம் உங்களிடம் இல்லை எனில், இணையத்தில் கிடைக்கிறதா எனப் பார்த்து டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று பைல்களைக் கையாள்கிறேன். சில வேளைகளில் ஆடியோ மற்றும் பட பைல்கள் வெவ்வெறு பார்மட்களில் இருந்தாலும், ஒரே பெயரில் சேவ் செய்து வைக்கப்படுகின்றன. இவற்றின் பைல் பெயர்களைக் காண்கையில், பைல் எக்ஸ்டன்ஸன் பெயர் காட்டப்படாததால், விரும்பும் பார்மட் உள்ள பைல்கள் திறக்கப்படாமல், வேறு பார்மட் பைல் திறக்கப்படுகிறது. பைல் எக்ஸ்டன்ஷன் பெயருடன் காட்டப்பட என்ன செய்திட வேண்டும்? -என்.நாகேஸ்வரன், திருவொற்றியூர்.
பதில்: பைல் பெயர் ஒன்றில், அதன் புள்ளியை அடுத்து வலது பக்கம் உள்ள பெயர், அந்த பைல் என்ன வகையை, பார்மட்டைச் சேர்ந்தது என்று காட்டும். பொதுவாக, இந்த பெயர் காட்டப்பட மாட்டாது. இதனையும் சேர்த்து ஒரு பைல் பெயர் காட்டப்பட வேண்டும் எனில், My Computer>Tools>Folder Options எனச் சென்று கிடைக்கும் விண்டோவில் View தேர்ந்தெடுக்கவும். இதில் Hide extensions for known file types என்று இருக்கும் வரியின் முன்னால் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இனி பைல் பெயர்கள் முழுமையாக அதன் எக்ஸ்டன்ஷன் பெயருடன் காட்டப்படும்.

கேள்வி: நான் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் பயன்படுத்தி வருகிறேன். இதில் நான் பயன்படுத்தும் இணைய முகவரிகள் மற்றும் படிவத்தில் நிரப்பும் தகவல்கள், தானாகவே முதல் சில எழுத்துக்களை டைப் செய்தவுடன் வருகின்றன. இதனால், மற்றவர்கள் பயன்படுத்துகையில், அவர்களுக்கு என் முழு தகவல்களும் தெரிய வருகின்றன. இதனை எப்படி தடுப்பது அல்லது மறைப்பது? -இரா. திருவள்ளுவன், காஞ்சிபுரம்.
பதில்: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என்ற வசதியை உங்களுக்குத் தருவதற்காக, நீங்கள் டைப் செய்திடும் இணைய முகவரிகள், படிவங்களில் தரப்படும் தகவல்கள் அனைத்தையும் உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து வைத்துப் பயன்படுத்துகிறது. இது உங்களின் வேலையையும் நேரத்தினையும் மிச்சப்படுத்தத்தான். இதனை நீங்கள் விரும்பவில்லை என்றால், Tools>Internet Options>Content>Autocomplete என்றபடி சென்று, அங்கு நீங்கள் விரும்பும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

கேள்வி: எல்.சி.டி. மானிட்டர் ஒன்று புதியதாக வாங்கி உள்ளேன். வீட்டில் உள்ளவர்கள் அதன் திரை தவிர மற்ற பகுதிகளை ஒரு பிளாஸ்டிக் ஷீட் கொண்டு மூடி வைத்தவாறு பயன்படுத்தச் சொல்கின்றனர். இதுசரியா?-மா. உதய அரசன், திருப்போரூர்
பதில்: புதுசு என்றவுடன் அதனைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்க வீட்டில் உள்ளவர்கள் எண்ணலாம். ஆனால் இந்த பிரச்னையில் அவர்கள் சொல்வது தவறான ஒரு செயல். மானிட்டரைப் பயன்படுத்து கையில் ஏற்படும் வெப்பம் வெளியேறிச் செல்ல வழி வேண்டும். இது எந்த டிஜிட்டல் சாதனத்திற்கும் பொருந்தும். எனவே வெப்பம் வெளியேறும் வழிகளைத் தடுக்கும் பிளாஸ்டிக் கவர்களை இந்த சாதனங்களைப் பயன்படுத்துகையில் எடுத்துவிட வேண் டும். மேலும், இவற்றின் இயக்கத்தை நிறுத்திய பின்னர் (ஆப் செய்த பின்னர்) குறைந்தது 10 நிமிடத்திற்குப் பின்னரே இந்த கவர்களினால் மூட வேண்டும்.

கேள்வி: என் மெயில் இன்பாக்ஸில் மெயில்களைப் படித்து முழுமையாக அழித்த பின்னரும், எனக்கு ஒதுக்கிய இடத்தில் ஓரளவு இடமே காலியாக உள்ளதாகக் கோடிட்டுக் காட்டப்படுகிறது. இது எதனால்? -ஏ. தேவ ஸ்டாலின், ஆவடி.
பதில்: உங்கள் சர்வீஸ் புரவைடர் யார் என்று கூறவில்லையே. நமக்கு அளித்துள்ள மெயில் இட கொள்ளளவு என்பது இன் பாக்ஸ், அவுட் பாக்ஸ், ட்ராப்ட், ஸ்கேம் மெயில், ட்ரேஷ் ஆகிய எல்லாம் சேர்த்துத் தான். எனவே இன்பாக்ஸைக் காலி செய்தாலும், மற்ற பாக்ஸ்களில் உள்ள மெயில்களின் இடமும் கணக்கில் எடுக்கப்பட்டு, உங்களுக்கு ஒதுக்கியதில் எவ்வளவு மீதம் என்று காட்டப்படும். எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் ட்ராஷ் பாக்ஸைத் திறந்து அதில் உள்ள தேவைப்படாத இமெயில்களை (அநேகமாக அனைத்துமாக இருக்கலாம்) அழிக்கவும். இவற்றை நீக்குகையில் நிரந்தரமாக அழித்துவிடவா என்ற எச்சரிக்கையினைக் கொடுத்து நீங்கள் யெஸ் எனக் கொடுத்த பின்னரே நீக்கப்படும். பின்னர் இவை கிடைக்காது.

கேள்வி: மூன்று சிம் கொண்ட போன்கள் விற்பனைக்கு வந்துள்ளதா? அதில் அனைத்து வசதிகளும், அனைத்து சிம்களிலும் கிடைக்குமா? -என். சுலோச்சனா, தாம்பரம்.
பதில்: இந்த மலரில் மொபைல் பக்கம் பாருங்கள். உங்கள் கேள்விக்கு பதில் உள்ளது.

கேள்வி: ஆவணம் ஒன்றை உருவாக்குகையில், குறிப்பாக மருந்து பெயர்களில், பல வேளைகளில் ஹைபனுடன் டைப் செய்திடும் சொற்களில் முதல் ஒன்று இரண்டு எழுத்துக்களுடன் ஹைபன் இணைந்து ஒரு வரியிலும், ஹைபனுக்கு அடுத்து வரும் சொற்கள் இன்னொரு வரியிலும் அமைகின்றன. இது படிப்பதற்கு சரியாக இல்லை. இவை ஒன்றாக ஒரே வரியில் கிடைக்கும்படி அமைய என்ன செய்திடலாம்? -ஆ. காந்திராஜ், கொண்டாமுத்தூர்.
பதில்: வேர்ட் டாகுமெண்ட்டில் சொற்களைப் பல வழிகளில் கையாளலாம். நீங்கள் கேட்பது போல சொற்களை, வரிகளுக்கிடையே, அப்படியே பிரிக்கப் படாமல் அமைக்கலாம். சொற்களை அமைக்கும் முன் கண்ட்ரோல்+ஷிப்ட் +ஸ்பேஸ் பார் அடித்துச் சொற்களை அமைத்தால் அவை பிரியாமல் அடுத்த வரிக்கு முழுமையாக எடுத்துச் செல்லப்படும். இந்த தகவல், இதற்கு முன் ஒரு முறை இதே பகுதியில் விளக்கப்பட்டது. உங்களுடைய பிரச்னை ஹைபன் உள்ள சொல். எடுத்துக் காட்டாக email. இதனை டைப் செய்திடுகையில், இது வரிகளில் பிரிந்து e என ஒரு வரியிலும் mail என இன்னொரு வரியிலும் இருந்தால் சரியான பொருளைத் தராது. இதற்கு இன்னொரு வழியும் உள்ளது. அது கண்ட்ரோல் + ஷிப்ட்+ ஹைபன் அடித்து அமைப்பதுதான். இப்படி டைப் செய்து பாருங்கள். இந்த சொல் தொடர் பிரியாமல் சேர்ந்தே இருக்கும்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில், ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்து, சிஸ்டம், ஆபீஸ் 2003 ஆகியவற்றை மீண்டும் பதித்தேன். வேர்ட் பைல் திறக்கும் மெனு மற்றும் பிற மெனுக்களைக் கிளிக் செய்தால், முழு பிரிவுகளும் காட்டப்படவில்லை. இறுதியாக உள்ள டபுள் ஆரோ குறியில் கிளிக் செய்தால் மட்டுமே கிடைக்கிறது. இதனை எப்படி மாற்றுவது? -ஆர். சகாயராஜ், புதுச்சேரி.
பதில்: ஆபீஸ் 2003 தொகுப்பில் எந்த அப்ளிகேஷனாயிருந்தாலும் (வேர்ட், எக்ஸெல், அவுட்லுக், பவர்பாயிண்ட், பப்ளிஷர்) “Tools” பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் “Customize” என்பதைக் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் பல டேப் அடங்கிய விண்டோவில் “Options” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் “Always show full menus” என்ற பிரிவில் கிளிக் செய்து பின் “Close” கிளிக் செய்து வெளியேறவும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கூல் கோடை - kodaikanal,இந்தியா
05-பிப்-201110:25:19 IST Report Abuse
கூல் கோடை நன்றாக உள்ளது. ஆனால் தகவல் அதிகமாக தேவை
Rate this:
Share this comment
Cancel
jeyakumar - chennai,இந்தியா
03-பிப்-201123:48:58 IST Report Abuse
jeyakumar என் லேப்டாப்பில் பி டி ப் பைல் ஓபன் ஆக வில்லை. ப்ளீஸ் பதில் தரவும்
Rate this:
Share this comment
Cancel
T.L. SUBRAMANIAM - SHARJAH,ஐக்கிய அரபு நாடுகள்
31-ஜன-201120:46:53 IST Report Abuse
T.L. SUBRAMANIAM Recently I have installed Office 2007 instead of Office 2003. After this, whatever I want to copy from internet in tamil and other regional language, it is not copying. When I was using 2003 I was enjoying copying of tamil articles and saving from my future use. Please send your reply by mail and also publish in Computer Malar for the use of mass. Thanks, T.L. SUBRAMANIAM, SHARJAH
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X