தேதி சொல்லும் சேதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2017
00:00

ஆகஸ்ட் 15, 1947 - இந்திய சுதந்திர நாள்
இருநூறு ஆண்டுகளாக, நமது நாட்டிலேயே அந்நிய தேசத்தவரிடம் நாம் அடிமைகளாக இருந்தோம். அதை எதிர்த்துப் போராடி, ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து இந்தியா தனி சுதந்திர நாடானது. சுதந்திரத்தையும், அதற்காக இன்னுயிர் தந்த தியாகிகளையும் நினைவுகூர இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

ஆகஸ்ட் 19, 1871 - ஆர்வில் ரைட் பிறந்தநாள்
அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர். விமானத்தைக் கண்டறிந்த ரைட் சகோதரர்களில் மூத்தவர். முதன்முதலாக விமானத்தை இயக்கி 12 வினாடிகள் வானில் பறந்தார். அவர்கள் வடிவமைத்த அந்த விமானம், வாஷிங்டன் தேசிய வான்வெளி அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 19, 1918 - சங்கர்தயாள் சர்மா பிறந்தநாள்
இந்தியாவின் 9வது குடியரசுத் தலைவர். 1992ல் இருந்து 1997 வரை பதவியில் இருந்தார். 8வது துணைக் குடியரசுத் தலைவராகவும், 1952ல் இருந்து 1956 வரை முந்தைய போபால் மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்தார்.

ஆகஸ்ட் 19, 1839 - உலகப் புகைப்பட நாள்
லூயிஸ் டாகுரே என்பவர், டாகுரியோடைப் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை அறிமுகப்படுத்தினார். இந்த முறைக்கு பிரான்ஸ் அகாடமி ஆஃப் சயின்ஸ் ஒப்புதல் அளித்து, 'ஃப்ரீ டூ தி வேர்ல்ட்' என உலகம் முழுவதும் அறிவித்தது. புகைப்படக்கலையின் பெருமையை உணர இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

ஆகஸ்ட் 19, 2008 - உலக மனிதநேய நாள்
போர், இயற்கைப் பேரழிவு, நோய், ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்களை, சில நல்ல மனிதர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து காப்பாற்றுவார்கள். அவர்களின் மனிதாபிமானம் மிக்க சேவையை நினைவுகூர, ஐ.நா. சபையால் இந்த நாள் உருவாக்கப்பட்டு கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 20, 1944 - ராஜீவ் காந்தி பிறந்த நாள்
இந்தியாவின் ஆறாவது பிரதமர். புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்து இளம் வயதில் (40 வயது) பிரதமரானார். இவரது பிறந்த நாளை இந்தியாவில் சமய நல்லிணக்க நாளாக அனைத்து அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் உறுதிமொழி எடுத்துக் கொண்டாடப்படுகிறது.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lokesh - pondicherry,இந்தியா
15-ஆக-201712:35:05 IST Report Abuse
Lokesh ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி,பெரியபாபு சமுத்திரம் விழுப்புரம் மாவட்டம் நீங்களும் நாங்களும் பக்கத்தில் இடம்பெற்ற "முடியாது என்பதே கிடையாது" என்ற தாரக மந்திரத்தை வாழ்வின் அசைக்க முடியாத நம்பிக்கையாகக் கொண்டு வாழ்ந்த மாவீரன் நெப்போலியன் வழக்கை குறிப்பு இப்போதைய இளம் மாணவச் செல்வங்களுக்கு ஊக்கமூட்டும் பகுதியாக அமைந்தது. பட்டம் இதழுக்கு பாராட்டுக்கள் திருமதி.வே.உமா(தலைமை ஆசிரியர்)..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X