ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரி வாய்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2017
00:00

இன்சூரன்ஸ் எனப்படும் காப்பீடு பொதுவாக ஆயுள் காப்பீடு மற்றும் பொதுக்காப்பீடு என்ற இரண்டு பிரிவுகளாக உள்ளது. இவற்றில் உயிர் தொடர்பில்லாத தீ, திருட்டு, மரைன் உள்ளிட்ட காப்பீடுகளை செய்யும் நிறுவனங்களை பொதுக்காப்பீட்டு நிறுவனம் என்று கூறுகிறோம். இந்தியாவிலுள்ள பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் பொதுத்துறை சார்ந்த ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் முக்கியமானது. இந்த நிறுவனத்திற்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில் தற்சமயம் நிர்வாக அதிகாரிகள் பிரிவில் காலியாக உள்ள 300 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம் : ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் பதவி ஸ்பெஷலிஸ்ட் மற்றும் ஜெனரலிஸ்ட் என்ற இரண்டு பிரிவுகளாக உள்ளது. இவற்றில் ஜெனரலிஸ்ட் பிரிவில் 223 இடங்களும், ஸ்பெஷலிஸ்ட் பிரிவில் எஞ்சிய இடங்களும் உள்ளன. ஸ்பெஷலிஸ்ட் பிரிவில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் 20ம், ஆக்சுவரிஸ் பிரிவில் 2ம், ஆட்டோமொபைல் இன்ஜினியர் பிரிவில் 15ம், மெடிக்கல் ஆபிசரில் 10ம் உள்ளன.

வயது : ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 31.07.2017 அடிப்படையில் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : ஜெனரலிஸ்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஸ்பெஷலிஸ்ட் பதவிக்கு விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது. அக்கவுண்ட்ஸ் பிரிவுக்கு எம்.காம்., சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., எம்.பி.ஏ., பைனான்ஸ் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆக்சுவரிஸ் பதவிக்கு ஆக்சுவரியல் படிப்பில் 4 தாள்களை முடித்தவர்களும், 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படிப்பில் பி.இ., அல்லது பி.டெக்., முடித்தவர்கள் இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மெடிக்கல் ஆபிசர் பதவிக்கு எம்.பி.பி.எஸ்., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ச்சி முறை : ஜெனரலிஸ்ட் மற்றும் ஸ்பெஷலிஸ்ட் என்ற இரண்டு பதவிகளுக்குமே எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும். எழுத்துத் தேர்வு பிரிலிமினரி மற்றும் மெயின் என்ற இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.600/-ஐ இந்தப் பதவிக்கான விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு மையங்கள் : தமிழ் நாட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய மூன்று மையங்களில் நடத்தப்படும்.

விண்ணப்பிக்க : ஓரியண்டல் இன்சூரன்சின் மேற்கண்ட பதவிகளுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 20017 செப்., 15
விபரங்களுக்கு : www.orientalinsurance.org.in

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X