ஹரிணியின் சலங்கை பூஜை | கலை மலர் | Kalaimalar | tamil weekly supplements
ஹரிணியின் சலங்கை பூஜை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 பிப்
2011
00:00

சென்னை மேடவாக்கத்தில் உள்ள நிருத்யோபாசனா நடனப் பள்ளியின் 4வது ஆண்டு நிறைவு விழாவும், அதன் மாணவி ஹரிணியின் சலங்கை பூஜை நிகழ்ச்சியும் மிக விமரிசையாக நடந்தன. ஆறு முதல், ஏழு வயதிற்குள்ளான மாணவியரையும், சுத்தமான முத்திரைகள், நேர்த்தியான பாவனை மற்றும் அழகான அசைவுகளுடன் ஆட வைக்க முடியும் என, இப்பள்ளியின் இயக்குனர் நாட்டிய சிரோன்மணி ஸ்ரீமதி வைஷ்ணவி சுப்பிரமணியன் சாதித்து காட்டியிருந்தார். நிகழ்ச்சியை தலைமை தாங்க வந்திருந்த, "நாட்டிய இளவரசி' ஸ்ரீமதி ரத்தினமாலா சரவணனும், கும்பகோணம் கோபிநாத்தும், மாணவியரையும், அவர்களை தயார் செய்த குருவையும் வெகுவாக பாராட்டினார்.
ஸ்ரீமதி வைஷ்ணவியும், அவரது குரு திருமதி ரத்தினமாலாவும் இணைந்து நட்டுவாங்கம் செய்ய, அவர்களுடன் இணைந்து, மயிலை பிரியா (பாட்டு), டாக்டர்.கே.பி.சரவணன் (மிருதங்கம்), கணேஷ் (வயலின்) மற்றும் கடப்பா ராகவனின் (புல்லாங்குழல்) இசை, நடன நிகழ்ச்சிக்கு கூடுதல் மெருகூட்டியது. சுபாவின் ஒப்பனை பாராட்டுக்குரியது. - மாளவிகா

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X