கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2010
00:00

கேள்வி: சில டாகுமெண்ட்களில் முக்கியமான சொற்களை மட்டும் தேர்ந்தெடுத்து வேறு வண்ணத்தில் வைத்திட முயற்சிக்கிறேன். இவை இடம் விட்டு இருப்பதால், ஒவ்வொரு முறையும் தனித்தனியே வண்ணம் மாற்ற வேண்டி உள்ளது. வேறு வழி இதற்கு உண்டா?
–நீ. மலர்விழி, மதுரை
பதில்: மிக மிக எளிய, உங்களுக்குத் தெரிந்த வழி உள்ளது. விண்டோஸ் எக்ஸ்புளோரரில் அடுத்தடுத்து இல்லாத பைல்களை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்? தொடர்ந்து எனில், ஷிப்ட் அழுத்தி தேர்ந்தெடுக்கிறீர்கள். இடம் விட்டு என்றால், கண்ட்ரோல் கீ அழுத்தி பைல் மீது கிளிக் செய்து தேர்ந்தெடுக்கிறீர்கள் அல்லவா? அதே போல கண்ட்ரோல் கீ அழுத்தி, சொற்களைத் தேர்ந்தெடுக்கவும். பின் மொத்தமாக ஒரே வேலையாக இவற்றின் நிறத்தை மாற்றலாம்.


கேள்வி: ஓப்பன் சோர்ஸ் சிஸ்டம் குறித்த தகவல்கள் நிறைய தருகிறீர்கள். விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் முக்கிய, பயனுள்ள ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்களின் பட்டியல் தருமாறு வேண்டிக் கொள்கிறேன்.
–ஆ. நல்லதம்பி, சின்னமனூர்
பதில்: விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் நல்ல, பயனுள்ள ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்கள் கேட்டுள்ளீர்கள். இதோ அவற்றின் பெயர்களைத் தருகிறேன். நீங்களே இன்டர்நெட்டில் தேடி எடுத்து, டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்து பயன்படுத்துங்கள். பிடிக்கவில்லை என்றால் நீக்கிவிடுங்கள். File Zilla  (பைல்களைக் கையாள, குறிப்பாக மொத்தமாக மாற்ற), Virtual Box (32 விர்ச்சுவல் சிபியுக்களைக் கையாளும்),  Open Office.org (அனைவரும் அறிந்த ஆபீஸ் தொகுப்பிற்கு இணையானது), Firefox  (நாடறிந்த பிரவுசர்), Paint.Net (அவ்வளவாகப் பிரபலமாகாதது என்றாலும், ஒரு ஆர்ட்டி ஸ்ட்டுக்குத் தேவையானதை வழங்கும்), Media Player Classic (இதன் தோற்றத்தை வைத்து குறைவாக மதிப்பிட வேண்டாம். பலவகை மியூசிக் பார்மட்டுகளை, மிக எளிதாகக் கையாளும்), PDF Creator (பிடிஎப் பைல்களை உருவாக்க உதவும்),  7Zip  (மிக அருமையான ஒரு ஸிப் புரோகிராம். ஒரு மெகா பைட் பைலை வெறும் 64 கேபி அளவிற்கு மாற்றும் திறன் கொண்டது),  Clamwin  (சிஸ்டத்தை ட்யூன் செய்திட உதவும்)


கேள்வி: நான் ஒரு இங்க்ஜெட் பிரிண்டர் வாங்கினேன். அதில் இங்க் தீர்ந்துவிட்டது. இதில் நிறுவன இங்க் ஜெட் ரீபில் வாங்கலாமா? இதன் விலை அதிகமாக உள்ளது. இதற்குப் பதிலாக கடைகளில் மிகவும் விலை குறைவாக விற்பனை செய்யப்படும் பட்ஜெட் இங்க்கினை வாங்கிப் பயன்படுத்தலாமா?
–ஆர்.கே. ஸ்ரீனிவாசன், திருப்பூர்
பதில்: வாசகர்களிடம் இருந்து இந்த பிரச்னை குறித்து அடிக்கடி கடிதங்கள் வருகின்றன. பட்ஜெட் இங்க் வாங்கி, காசை மிச்சப்படுத்த என்னிடம் ஆலோசனை கேட்டு இவை அனுப்பப்படுகின்றன. பொதுவாக, ரீபில் இங்க் வாங்கிப் பயன்படுத்துவதனை நான் ஏற்றுக் கொள்வதில்லை. இங்க் கேட்ரிட்ஜுக்குள், மை வெளியேறும் நாஸில் எனப்படும் சிறிய துளை இல்லாமல் இருந்தால் (கேனன் பிரிண்டர் போல) இங்க் ரீபில் பயன்படுத்துவது குறித்து யோசிக்கலாம். அப்படியும் கூட அது அவ்வளவு பாதுகாப்பானது என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் கடைகளில் கிடைக்கும் சாதாரண இங்க், நிறுவனம் வழங்கிய மையின் தரத்தில் நிச்சயம் இருக்காது.
நீங்கள் எச்.பி. பிரிண்டர் பயன்படுத்துவதாக இருந்தால், மை வெளியேறும் துளை, இங்க் கேட்ரிட்ஜுக்குள்ளேயே அமைக்கப்பட்டிருப் பதனைக் காணலாம். எனவே எச்.பி. நிறுவனம் தரும் இங்க் கேட்ரிட்ஜைத் தான் பயன்படுத்த வேண்டும். அப்போது அந்த துளையும் புதியதாகவே அமையும். இதனால் பிரச்னை எதுவும் ஏற்படாது. மாறாக இங்க் ரீபில் செய்து பயன்படுத்தினால், துளை பழையதாக இருந்து பிரச்னைகளைக் கொண்டு வரும். போட்டோக்களை பிரிண்ட் செய்திடுகையில் இந்த வித்தியாசம் தெரியவரும். அச்சு நன்றாக இருப்பதற்குத் தானே சொந்தமாக பிரிண்டர் வாங்குகிறீர்கள். பின் ஏன் சிறிது காசை மிச்சம் செய்வதற்காக, ரீபில் இங்க் பக்கம் செல்கிறீர்கள்.


கேள்வி: என் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரை, இயக்கத் தெரிந்த அனைவரும் பயன்படுத்துகிறோம். ஒவ்வொருவரும் அவர்களுக்குப் பிடித்த வால்பேப்பரை அமைக்கின்றனர். இதனால் பிரச்னை வருகிறது. மொத்தமாக நான்கு வால்பேப்பர்களைத் தேர்வு செய்து, மாறி மாறி வரும்படி செய்திட முடியுமா?
–ஆ. தேவசேனா, புதுச்சேரி
பதில்: இதென்ன, பாகப்பிரிவினைக்கு பஞ்சாயத்துக்கு அழைப்பது போல் இருக்கிறது. இருப்பினும் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் புரோகிராம் ஒன்று குறித்த தகவல்களைத் தருகிறேன். அந்த புரோகிராமின் பெயர் Wallpaper Master. இதன் மூலம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வால் பேப்பர்கள் அனைத்தையும், குறிப்பிட்ட கால இடை வெளியில் கம்ப்யூட்டரில் ஒரு சுற்றில் காட்டிக் கொண்டே இருக்கும். இந்த கால இடைவெளியை நீங்களே நிர்ணயம் செய்திடலாம். இந்த புரோகிராமின் மேம்படுத்தப்பட்ட பதிப்பினைப் பெற 20 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். இருப்பினும் இலவச பதிப்பு ஒன்றும் கிடைக்கிறது. இதன் தள முகவரி http://jamesgart.com/wallpaperchanger/.   இந்த தளத்தில் கீழாக freeware  என்று இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கு உள்ள டவுண்லோட் பட்டனில் கிளிக் செய்து, இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து கொள்ளவும். இன்ஸ்டால் செய்த பின், கம்ப்யூட்டரை இயக்குகையில் வால் பேப்பர் மாஸ்டர் இயங்கத் தொடங்கும். இதற்கான ஐ கானை டூல்பாரில் பார்க்கலாம். டூல்பாரில் ரைட் கிளிக் செய்து, வால் பேப்பர் மாஸ்டரை இயக்கவும். இதில் உள்ள Add Files என்பதில் கிளிக் செய்து, உங்கள் வீட்டில் உள்ளவர்கள் விரும்பும் வால்பேப்பர் இமேஜ்களைத் தேர்ந்தெடுக்கவும். கண்ட்ரோல் கீ அழுத்தி, இந்த பைல்களைத் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு வால்பேப்பருக்கும், அதற்கான பொசிஷனையும் அமைக்கலாம். இதில் உள்ள கலர் டேப்பினைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு இமேஜுக்கும், அதன் பின்னணி நிறத்தையும் செட் செய்திடலாம்.
உடன் வால் பேப்பர் மாஸ்டர் இயங்கத் தொடங்கி, வால் பேப்பர் படங்களைக் காட்டும். உங்களுக்குப் பொறுமை இன்றி அடுத்த படத்தைக் காண வேண்டும் எனில், வால் பேப்பர் மாஸ்டர் ஐகானில், லெப்ட் கிளிக் செய்தால் அடுத்த வால் பேப்பருக்கு மாறும்.


கேள்வி: என் மகனுக்கு ஒரு டிஜிட்டல் கேமரா வாங்கிக் கொடுத்துள்ளேன். அவன் கம்ப்யூட்டரையும் சிறப்பாகப் பயன் படுத்துவான். போட்டோகிராபி குறித்துக் கற்றுக் கொள்ள, இன்டர்நெட்டில் ஏதேனும் தளம் உள்ளதா?
–சா. மகேந்திரன், தாம்பரம்
பதில்: உங்கள் மகனை அனைத்து துறைகளிலும், அவனாகவே உழைத்து முன்னுக்கு வர உறுதுணையாய் இருக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள். இன்டர்நெட்டில் இது குறித்த தளங்கள் நிறைய உள்ளன. இருப்பினும் நீங்கள் தெரிவித்துள்ள தகவல்களின் அடிப்படையில், நான் தர விரும்பும் தளம் http://www.photonhead.com/beginners/ என்ற முகவரியில் உள்ளது. இதில் நம் மூதாதையர் காலத்து கேமராவிலிருந்து, இன்றைய காலத்து டிஜிட்டல் கேமரா வரையிலான அனைத்து தகவல்களும் உள்ளன. அடுத்து கேமரா மோட் என்ற பிரிவில் அனைத்து வகைகள் குறித்து விளக்கங்களைப் பெறலாம். போட்டோ எடுப்பது மட்டுமின்றி, அவற்றை எடிட் செய்வது குறித்தும் இதில் தகவல்களைப் பெறலாம்.


கேள்வி: மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்சியல்ஸ் என்பது உண்மையிலேயே இலவசம் தானா? இதனை எங்கு பெறலாம்? இது என்ன வேலைகளை மேற்கொள்ளும்?
– ஆ. சிவத்தம்பி, திருத்தணி
பதில்: இது குறித்து ஒரு கட்டுரை எழுத எண்ணியிருந்தேன். ஆனால் உங்கள் கேள்வியில் இருந்த அவசரத்தை முன்னிட்டு தகவல்களைத் தருகிறேன். இதனைப் பெற http://www.microsoft.com/ Security_Essentials/ என்ற முகவரிக்குச் செல்லவும். வைரஸ், மால்வேர் மற்றும் ஸ்பைவேர் ஆகிய அனைத்தையும் தடுத்து பாதுகாப்பு தரும் இந்த புரோகிராம், மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து இலவசமாகக் கிடைக்கிறது என்ற செய்தி நிச்சயமாக ஆச்சரியமான உண்மைதான். மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனை மிகச் சிறந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் என்று கூறுகிறது. அடிப்படையில் நல்ல பாதுகாப்பினை வழங்குகிறது. ஆனால் திடீர் திடீரென எழும் வைரஸ் பிரச்னைகளை இது தீர்க்குமா என்பது ஐயமே. உங்களுடைய கம்ப்யூட்டரில் வேறு ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இல்லாமல், அதற்கென எதுவும் பணம் செலவழிக்கத் தயாராக இல்லை என்றால், இதனை அல்லது இது போன்ற பிற இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைப் பயன்படுத்தலாம்.


Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சிவசங்கர் - chennai,இந்தியா
26-நவ-201013:40:18 IST Report Abuse
சிவசங்கர் hello sir my internet connection speed is 3mbps but my current speed shows only 100kbps how to achieve full speed of internet please help me sir
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X