தென்னைக்கு ஊட்டச்சத்து டானிக்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 அக்
2017
00:00

தென்னையில் 'குரும்பைக் கொட்டுதல்' பாரம்பரிய குணம். தென்னையில் ஒரு குலையில் 40 முதல் 50 வரை குரும்பைகள் தோன்றினாலும் குறைந்த அளவே தேங்காய்களாக மாறுகின்றன. மற்றவை உதிர்ந்து விடுகின்றன. அதிக குரும்பைகள் கொட்டுவதற்கு வறட்சி, மோசமான தட்பவெப்பநிலை, ஊட்டச்சத்து குறைவு, ஹார்மோன்கள் எனப்படும் வளர்ச்சி ஊக்கிகள், மண்ணின் களர் உவர் தன்மைகள், மகரந்தச் சேர்க்கைக்குறை, பூச்சிநோய் தாக்குதல் ஆகியவை முக்கிய காரணங்களாகும். இவைகளில் நுண்ணுாட்டச் சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகளின் பற்றாக்குறைகளை வேர் மூலம் தென்னை ஊட்டச்சத்து டானிக் செலுத்துவதால் நிவர்த்தி செய்து விடலாம்.

ஊட்டசத்து டானிக் அவசியம்:




தென்னை ஊட்டச்சத்து என்பது தென்னைக்கு வேர் மூலம் ஊட்டுவதற்கு உகந்ததாகும். இந்த தென்னை ஊட்ட மருந்தில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, போரான் மற்றும் மாலிப்டினம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இத்துடன் மரத்துக்கு தேவையான ஆக்ஸின், சாலிசிலிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன்ற வளர்ச்சி ஊக்கிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மரத்தின் கார அமில நிலைக்கேற்ப டானிக்கின் கார அமில நிலையும் அமையுமாறு டானிக் தயார் செய்யப்படுகிறது. இதனால் டானிக் மரத்திற்குள் சென்று மரத்தின் உயிர் வேதியியல் செயல்பாடுகளில் சேதம் விளைவிக்காமல், மரத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும், வளர்ச்சி ஊக்கிகளையும் சேதாரம் இன்றி தருகிறது. எனவே மரத்திற்கு தேவையான நுண்ணுாட்டச் சத்துக்களை சரியான விகிதத்தில் நேரடியாக மரத்திற்குள் செலுத்த முடிகிறது. மேலும் மரத்தில் நோய், பூச்சி தாக்குதல் மற்றும் வறட்சி ஆகியவற்றிற்கு இயற்கையான எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.


வேர் மூலம் ஊட்டச்சத்து




மரத்திலிருந்து இரண்டு முதல் மூன்று அடி தள்ளி சுமார் நான்கு அங்குல ஆழத்திற்கு கீழ் உறிஞ்சும் வேர்கள் அமைந்திருக்கும். இந்த பகுதியில் பென்சில் கணமுள்ள மஞ்சள் நிற வேர் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். பின் வேரின் நுனியை மட்டும் கத்தி அல்லது பிளேடு உபயோகித்து சாய்வாக சீவி விடவும். பின் டானிக் உள்ள பையின் அடிவரை வேரை நுழைத்து, வேரையும் பையின் மேல் பாகத்தையும் நுாலால் கட்டி விடவும். மண்ணில் ஈரத்தன்மை குறைவாக இருந்தால் ஒரு மணி நேரத்தில் டானிக்கை வேர் உறிஞ்சிவிடும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை செலுத்த வேண்டும். ஒரு மரத்திற்கு 200 மில்லி டானிக் தேவைப்படும். ஊட்டச்சத்து டானிக் அளிப்பதன் மூலம் முக்கியமான சத்துக்கள் சரியான விகிதத்தில் கிடைக்கின்றன.

இலைகளில் பச்சையம் அதிகரித்து, ஒளிச்சேர்க்கை மேம்படுவதால் மரத்தின் வளர்ச்சி அதிகரிக்கிறது. உயிர் வேதியியல் பணிகளுக்கு தேவைப்படும் மூலப்பொருட்களான ஊட்டச்சத்துக்கள் தடையின்றி கிடைப்பதால் மரத்தின் வீரியம் அதிகரிக்கின்றது. போரான் மற்றும் துத்தநாகம் போன்ற நுண்ணுாட்டச் சத்துக்களும், ஆக்ஸின் போன்ற வளர்ச்சி ஊக்கியும் டானிக்கில் உள்ளதால் குரும்பைகள் உதிர்வதும், ஒல்லிக்காய்கள் உற்பத்தியாவதும் வெகுவாக குறைகின்றது. பூச்சி, நோய், வறட்சி, தட்பவெப்ப நிலைகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இயற்கையான எதிர்ப்புச்சக்தி மரத்தில் உருவாகிறது.

தென்னை ஊட்டச்சத்து தேவை மற்றும் விவரங்களுக்கு 'பேராசிரியர் மற்றும் தலைவர், விதை அறிவியல் மற்றும் நுட்பவியல் துறை, வேளாண்மை கல்லுாரி, மதுரை அல்லது விதை அறிவியல் மற்றும் நுட்பவியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை, கோவை' என்ற முகவரியில் அணுகலாம்.

- ந.ஜெயராஜ்,
முன்னாள் துணை இயக்குனர்,
நீர் மேலாண்மை பயிற்சி நிலையம்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X