ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2017
00:00

நான், 1955ல், கேரளாவிலுள்ள, ஒரு கிராமத்து பள்ளியில், 10ம் வகுப்பு, தேர்ச்சி பெற்றேன். பல காரணங்களால், மேற்படிப்பு படிக்க முடியவில்லை. பெற்றோர், எவ்வளவு முயன்றும், நல்ல வரனும் கிடைக்கவில்லை. வீட்டில், அம்மாவுக்கு உதவியாக முடங்கி கிடந்தேன்.
என் நிலையை பார்த்த தாய்மாமா, வெளியூரில் படிப்பதற்காக, அவருடன் அழைத்தார்; அப்போது என் வயது 21.
அவர், சிறந்த காந்தியவாதி; சுதந்திரப்போராட்டத்தில், சிறை சென்றவர். அம்மா, என்னை படிக்க அனுப்ப விரும்பவில்லை. நானும், 'இனி எனக்கு படிப்பு மண்டையில் ஏறாது...' என்று கூறி அழுதேன். ஆனால், என்னை அருகில் உட்கார வைத்து உபதேசித்தார் மாமா.
'திருமணம் செய்து, குழந்தைகள் பெற்று, வீட்டில் முடங்கி கிடக்க பிறக்கவில்லை. நன்றாக படித்து, ஆணுக்கு சமமாக முன்னுக்கு வரவேண்டும். நீ புத்திசாலி. நிச்சயமாக படித்து, முன்னுக்கு வருவாய்...' என்று, பல விதத்தில் எனக்கு புத்திமதி கூறி, கல்லூரியில் சேர்த்தார். நான் படித்து முடித்து, திருமணமும் நடந்தது.
தற்போது, என் வயது, 77. கணவன் மற்றும் மகனை இழந்து, தனிமையில் வாழ்கிறேன். இந்நிலையில், நான் பெற்ற கல்வி எனக்கு உதவிக்கரம் நீட்டுகிறது. பத்திரிக்கைகளுக்கு கதை எழுதுகிறேன்; சிறிது வருமானமும் கிடைக்கிறது. முக்கியமாக, என் தனிமையை போக்கி, மனதுக்கு ஊக்கமும், உற்சாகமும் தருகிறது.
இந்த சந்தோஷத்துக்கு காரணம், தக்க சமயத்தில், உபதேசம் தந்த, மறைந்து போன என் மாமா தான்; அன்பு மாமாவிற்கு அஞ்சலியாக இதை எழுதுகிறேன்.
- சாவித்திரி, சென்னை.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X