கேட்ஜெட் கேலரி: கூகுள் 'கேட்ஜெட்' திருவிழா!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 அக்
2017
00:00

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த கேட்ஜெட் என்னவாக இருக்கும் என்று மக்கள் எதிர்ப்பார்ப்பதை போலவே, கூகுள் நிறுவனத்தின் கேட்ஜெட்களுக்கும் தற்போது எதிர்பார்ப்பும் வரவேற்பும் அதிகரித்துள்ளது. கூகுளின் தயாரிப்புகள், வாங்கக்கூடிய விலையில், புதிய அம்சங்களுடனும் நவீன தொழில்நுட்பங்களுடன், பயன்படுத்த எளிதாக இருக்கும் என்பதுதான் இதற்கு காரணம். அந்த எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், கடந்த அக்டோபர் 4-ம் தேதி, ஸ்மார்ட்போன், லேப்டாப், ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட கேட்ஜெட்களை, சான்பிரான்சிஸ்கோ நகரில் அறிமுகப்படுத்தியது, கூகுள். அந்த கேட்ஜெட்களின் அணிவகுப்பு இங்கே.

1. 'பிக்ஸல் 2' மற்றும் '2 எக்ஸ்.எல்.'ஐபோன் 10 மாடலுக்கு போட்டியாக வெளியாகி இருக்கும் ஆண்டுராய்டு ஸ்மார்ட்போன்கள் இவை. புத்தம் புதிய ஆண்டுராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்துடன், ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி/128 ஜிபி உள்ளீட்டு சேமிப்பு வசதி, 12.2 எம்.பி., பின்புற கேமரா, 8 எம்.பி., செல்பி கேமரா, வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட், மெமரியை அதிகரித்துக்கொள்ளும் வசதி, கைரேகை ஸ்கேனர் ஆகியவை இந்த இரண்டு போன்களிலும் பொதுவாக இருக்கும் முக்கிய அம்சங்கள். பிக்ஸல் 2 ஸ்மார்ட்போனில், 5 அங்குல திரையுடன் 2.5டி கொரில்லா கிளாஸ் 5 பொருத்தப்பட்டிருக்க, பிக்ஸல் 2எக்ஸ்.எல்., ஸ்மார்ட்போனிலோ, 6 அங்குல திரை மீது 3டி கொரில்லா கிளாஸ் 5 பொருத்தப்பட்டுள்ளது. பிக்ஸல் 2 போனில் 2700 எம்.ஏ.ஹெச்., ஆகவும், பிக்ஸல் 2 எக்ஸ்.எல்லில் 3520 எம்.ஏ.ஹெச்., ஆகவும் பேட்டரி திறன் உள்ளது. பிக்சல் 2 ஸ்மார்ட்போன், நவம்பர் 1 அன்றும், பிக்சல் 2 எக்ஸ்.எல்., ஸ்மார்ட்போன், நவம்பர் 15 அன்றும் விற்பனைக்கு வர இருக்கிறது. பிக்ஸல் 2 விலை: ரூ.61,000 / 70,000 (64ஜிபி/128ஜிபி), பிக்ஸல் 2 எக்ஸ்.எல்., விலை: ரூ.73,000 / 82,000 (64ஜிபி/128ஜிபி).

2. பிக்ஸல் புக்முந்தைய குரோம் புக் லேப்டாப்பை விட, மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது, பிக்ஸல் புக் லேப்டாப். இதில் 8ஜிபி ரேம், 16ஜிபி ரேம் என இரண்டுவிதமான மாடல்கள் உள்ளன. இந்த லேப்டாப், குரோம் இயங்குதளம் மூலம் இயங்குகிறது. 12.3 அங்குல குவாடு ஹெச்.டி., திரையுடன் 2400×1600 பிக்சல் துல்லிய திரையை கொண்டதாக உள்ள இந்த லேப்டாப், மொத்தம் மூன்று வகைகளில் கிடைக்கிறது. கோர் ஐ5 பிராசஸருடன் 8ஜிபி ரேம் உடன் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.65,000 விலையில் கிடைக்கிறது. கோர் ஐ5 பிராசஸருடன் 8ஜிபி ரேம் உடன், 256 ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்ட மாடல் ரூ.81,000 விலையிலும், கோர் ஐ7 பிராசஸருடன் 16ஜிபி ரேம் உடன், 512 ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்ட மாடல் ரூ.1.07,000 விலையிலும் கிடைக்கின்றன. 10 மிமீ தடிமன் கொண்ட இந்த மடிக்கணினியின் எடை 1.1 கிலோகிராம் மட்டுமே. வை-பை, புளூடூத், வெப்கேமரா (720 பிக்ஸல்) போன்ற அம்சங்களுடன், 10 மணி நேரம் தாங்கக்கூடிய இதன் பேட்டரி குறிப்பிடத்தக்க அம்சமாகும். இவற்றுடன், 'பிக்ஸல்புக் பென்' ஒன்றும், ரூ.6,500 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

3பிக்ஸல் பாட்ஸ்நாற்பது மொழிகளில் உடனடியாக மொழிபெயர்க்கும் திறன் கொண்ட அதிநவீன வயர்லெஸ் இயர்போன், பிக்ஸல் பாட்ஸ். பிரபலமான ஆப்பிள் பாட்ஸ்களுக்கு இணையாக பல்வேறு சிறப்பம்சங்கள் இதிலுள்ளன. இதில் கூகுள் அசிஸ்டென்ட் சேவை இருப்பது கூடுதல் சிறப்பு. குரல் வழியில் கேட்கும் அனைத்து விசாரணைகளுக்கும், இயர்போன் வழியாக நமக்கு குரல் வடிவிலேயே விளக்கம் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, நீங்கள் ஜப்பானிய மொழியில் பேச வேண்டுமெனில் 'Help me speak Japanese' என கூறினால் உடனடியாக நீங்கள் பேசுவதை, ஜப்பானிய மொழியில் பெயர்த்து உடனடியாக ஸ்பீக்கர் வாயிலாக வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் ஸ்மார்ட்போனில் தனியாக டைப் செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. குறைந்தபட்சம் கூகுள் அசிஸ்டென்ட் பயன்படுத்தக்கூடிய நௌகட் 7.0 இயங்குதளத்தை கொண்ட ஆண்ட்ராய்டு அல்லது பிக்ஸல் மொபைல் போன்களில் தான் இந்த பாடஸ்-ஐ பயன்படுத்த முடியும். விலை ரூ.10,400.

4.ஹோம் மினி மற்றும் மேக்ஸ்ஏற்கெனவே அறிமுகமான 'கூகுள் ஹோம் ப்ளூடூத் ஸ்பீக்கர்' தான் இப்போது புதிய வண்ணங்களில், 'கூகுள் ஹோம் மினி' 'கூகுள் ஹோம் மேக்ஸ்' என்ற புதிய பெயர்களில் அறிமுகமாகியுள்ளது. அளவில் சிறிய ஹோம் மினி, ரூ.3,200 விலையிலும், பெரிய ஸ்பீக்கரான ஹோம் மேக்ஸ் ரூ.26,000 விலையிலும் கிடைக்கும். ஹோம் ஆட்டோமேஷன் எனப்படும் தானியங்கி வசதிகளுடன் கூடிய வீட்டை உருவாக்குவதில், முதல் அடியாக இந்த ஸ்பீக்கரை கூகுள் அறிமுகம் செய்திருக்கிறது. இதே போன்று, ஆப்பிள் நிறுவனமும் 'ஸிரி' என்ற ப்ளூடூத் ஸ்பீக்கரை அறிமுகம் செய்திருப்பது கவனிக்கத்தக்கது.

5கூகுள் கிளிப்ஸ்தானாக புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்ட அதிநவீன தானியங்கி கேமரா இது. இதில் உள்ள செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (Artificial Intelligence--AI) மூலம் மனிதர்கள், விலங்குகள் உள்ளிட்டவற்றின் முகங்களை அடையாளம் காண முடியும். இதனால், இந்த ஸ்மார்ட் கேமரா, பொருத்தப்பட்ட அல்லது வைக்கப்பட்ட இடத்தில் இருந்து 130 டிகிரி கோணத்தில், எதிரில் இருக்கும் நபர்களையும் பிராணிகளையும் புகைப்படம் எடுப்பதுடன், அவற்றை சேமித்து வைத்துக்கொள்ளும். இதற்கென 8ஜிபி சேமிப்பு திறன் இதில் உள்ளது. இதைப் போன்ற கேமராவை, கூகுள் மட்டுமே தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளது என்பதே இதன் ஹைலைட். அந்நியர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க, வீட்டு பாதுகாப்புக்கு சிசி டிவி கேமரா போன்று இதுவும் சிறப்பாக பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 12எம்பி திறன் கொண்ட இதன் விலை ரூ.16,200.

Advertisement

 

மேலும் டெக் டைரி செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X