வீரச் சிறுவன் மாலோஜி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2017
00:00

ஒரு நாள் இரவு-
சத்ரபதி சிவாஜி, படுக்கையில் தூங்கி கொண்டிருந்தார்; அப்போது, 13 வயது சிறுவன், படுக்கை அருகே வந்து, அவரை கொல்வதற்காக, வாளை உருவினான்.
வாளை ஓங்கியதும், பின்னாலிருந்து ஒருவர், ஒங்கிய சிறுவன் கையை பிடித்தார். அது சிவாஜியின் ராணுவத் தளபதி தானாஜி. சிறுவன் உள்ளே நுழைந்ததை, தானாஜி பார்த்துக் கொண்டு தான் இருந்தார்.
அவன் செய்வதை, மிகவும் உன்னிப்பாக கண்காணித்தார். மன்னரை கொல்ல முயற்சித்ததை பார்த்தவுடன், தாமதிக்காமல், சிறுவனின் கையைப் பிடித்து தடுத்து விட்டார்.
சிவாஜியின் தூக்கம் கலைந்தது. அருகே வாளுடன் நின்ற சிறுவனைப் பார்த்து, “நீ யார்... எதற்காக, இங்கு வந்தாய்...” என்று கேட்டார்.
“என் பெயர் மாலோஜி; தங்களை கொல்வதற்காக வந்தேன்.”
“உனக்கு என்ன கெடுதல் செய்தேன்... நீ எதற்காக என்னை கொல்ல வந்தாய்?”
“தாங்கள் எனக்கு ஒரு கெடுதலும் செய்யவில்லை. நான் மிகவும் ஏழை; என் தாய் பல நாட்களாகப் பட்டினி கிடக்கிறாள்; நோயால் வாடுகிறாள். தங்களை கொன்றால், நிறைய பணம் கொடுப்பதாக, தங்கள் எதிரி சுபாக்ராய் கூறினார். என் தாயின் பசி கொடுமையை காணச் சகிக்காமல், கொல்ல வந்தேன்,” என்று கூறினான் சிறுவன்.
அப்போது இடைமறித்த தானாஜி, “அடே துஷ்டப்பயலே... பணத்துக்கு ஆசைப்பட்டு, மகாராஜாவை கொல்லப் பார்த்தாயா. உனக்கு மரண தண்டனை விதிக்கிறேன்; சாவதற்கு தயாராக இரு,” என்றார்.
“சாவதை பற்றி கவலைப்படவில்லை. ஆனால், சாவதற்கு முன் பட்டினியாக கிடக்கும் என் தாயாரை, ஒரு முறை பார்த்து வருகிறேன்; அதற்கு அனுமதி அளியுங்கள்,” என்றான் சிறுவன்.
“ஏன் தப்பி ஓடிவிடலாமென்று பார்க்கிறாயா...” என்று கேட்டார், தானாஜி.
“நான் ஒரு மராட்டியன்; பொய் சொல்ல மாட்டேன்...” என்று பெருமிதத்துடன் கூறினான், சிறுவன்.
சிறுவனின் தைரியத்தை மெச்சிய சிவாஜி, “சரி... வீட்டுக்குப் போய், உன் தாயாரைப் பார்த்து விட்டு திரும்பலாம்...” என்றார்.
மறுநாள் காலை-
சிவாஜி தர்பாரில் இருந்தார். அப்போது, சிறுவன் மாலோஜி, உள்ளே வந்து, சிவாஜிக்கு வணக்கம் செய்தபடி, “மகாராஜா... தங்கள் தயாள குணத்திற்கு நன்றி; அதன் காரணமாகத் தான், என் தாயைப் பார்த்து, திரும்ப முடிந்தது. தாங்கள் இனி, மரண தண்டனை கொடுக்கலாம்,” என்றான்.
உடனே, சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து, சிறுவனைக் கட்டி தழுவினார் சிவாஜி.
“உன்னைப் போன்ற சிறுவர்களுக்கு, மரண தண்டனை அளித்து விட்டால், பின் மகாராஷ்டிரத்தில், வீரர்களே இருக்க மாட்டார்கள்,” என்று சொல்லி, சேனையில் சேர்த்து கொண்டார்.
அவனுடைய தாய், பசி போக்க பணமும் கொடுத்தார். வைத்தியம் செய்ய, ராஜ வைத்தியரை அனுப்பி வைத்தார் சிவாஜி.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X