அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2017
00:00

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

உன் பிடியா... என் பிடியா...
ஒரு தந்தையும், மகளும் ஆற்றைக் கடக்க முயற்சிக்கின்றனர்.
''என் கையை கெட்டியாக பிடித்துக் கொள்ளம்மா; ஆற்றில் தண்ணீர் நிறைய ஓடுகிறது,'' என்று முன் எச்சரிக்கையுடன் கூறினார் தந்தை.
உடனே மகள், ''அப்பா... என் கையை நீங்க பிடிச்சுக்குங்க,'' என்றாள்.
''இரண்டுக்கும் என்னம்மா வித்தியாசம்?'' என்று கேட்டார் தந்தை.
''நான், உங்கள் கையை பிடித்திருந்தால், வெள்ளத்தின் வேகம் அதிகமாகும் போது, தவறி கையை விட்டுவிட வாய்ப்பு இருக்கிறது. ஆனால், நீங்கள் என் கையை பிடித்திருந்தால், எவ்வளவு வேகத்திலும், கைவிட மாட்டீர்கள்,'' என்றாள் மகள். உண்மை அன்பு, அளவு கடந்த நம்பிக்கையுடையது.

உடை கொடுத்த உன்னதம்!
சார்லி சாப்ளின் பிரபலமடையாத நேரம்! ஒரு நாள், லண்டன் சங்கீத சபை நிர்வாகி, 'எங்கள் நாடக கம்பெனியில் கோமாளி வேடம் போடுபவர் வர முடியவில்லை; அவ்வேடத்துக்கு, பொறுப்பு ஏற்று கொள்ள வேண்டும்' என்றார்.
கோமாளி வேடத்துக்கான உடை, சாப்ளின் உடை அளவை விட மிகப் பெரியது; தொப்பியோ, மிகச் சிறியதாக இருந்தது.
சாப்ளின், அதே உடையையும், தொப்பியையும் அணிந்து, மிகவும் சிரமத்துக்கு மத்தியில் நடித்தார். அந்த உடை தான், பின்னர் அவருக்கு பெரும் புகழை தேடி தந்தது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில், முதன் முறையாக கவுரவ டாக்டர் பட்டம் தரப்பட்டதும் சாப்ளினுக்குத்தான்.

4000 மொழிகளை காப்பாற்றுங்க!
பன்மொழி அறிஞர் கணேஷ் என்.டேவி. இவர் இந்தியாவில் பேசப்படும் மொழிகள் பற்றிய ஆய்வு நுாலின், 11 தொகுதிகளை வெளியிட, டில்லி வந்தார். ஆய்வு முடிவு பற்றி அப்போது அவர் கூறுகையில், 'உலகில் உள்ள, 6,000 மொழிகளில் கிட்டத்தட்ட, 4,000 மொழிகள், இன்னும், 50 ஆண்டுகளில் அழியும் சாத்தியங்கள் உள்ளன. அவற்றில், 10 சதவீத மொழிகள் இந்தியாவில் இருக்கின்றன.
'தற்போது, 780 மொழிகள் இந்தியாவில் உள்ளன. அவற்றில், 400 மொழிகள், அழியும் ஆபத்தை எதிர் நோக்கி உள்ளன. இந்தி, வங்காளம், மராத்தி, தெலுங்கு போன்ற மொழிகளுக்கு, ஆங்கிலம் அச்சுறுத்தலாக இல்லை. எனவே, இந்த மொழிகளை, ஆங்கிலம் அழித்து விடக் கூடும் என்ற கருத்து சரியானது அல்ல.
'இந்தியாவில், ஆபத்தை எதிர்நோக்கி இருப்பவை, கடலோர பிரதேசங்களில் பேசப்படும் மொழிகள் தான். மனிதர்களால் உருவாக்கப்பட்டு, மனிதர்களின் பெரும் உழைப்பால் நிலைபெறுகிறது மொழி. ஒரு மொழி உருவாவதற்கு, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன. நம் மொழிகளை இழந்து விட்டால், அது நம் முன்னோருக்கும், முன்னோடிகளுக்கும் செய்கிற மிகப்பெரிய அநீதி ஆகும்' என்றார்.

உடைச்சுக்கிட்டே இருக்கணும்!
உயர் தொழில்நுட்பத்தை உடைக்கும் அளவுக்கு திறமையிருந்தால், அவர்களுக்கு ஏற்ற வேலை இங்கிலாந்தில் காத்திருக்கிறது. பகுதி நேரமாக செய்யும் இப்பணிக்கு, 36 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானமாக வழங்கப்படும்.
கிட்டத்தட்ட மாதத்திற்கு, மூன்று லட்சம் ரூபாய் சம்பளமாக கிடைக்கிறது. 'அப்படி என்ன சார் வேலை...' என்கிறீர்களா... ஒண்ணுமில்லைங்க... உயர் தொழில்நுட்ப மொபைல் போன்களையும், கணினிகளையும் கீழே போட்டு உடைப்பது தான் வேலை.
உங்களிடம் கொடுக்கப்படும் மொபைல் போன் மற்றும் கணினி போன்றவற்றை உடைத்து, எறிந்து வேலையை முடித்து கொடுக்க வேண்டும். எப்படி போட்டால் அதிகமாக உடைகிறது, கீழே விழுந்தவுடன் முதலில் உடையும் பாகம் எது, என, விளக்கமான அறிக்கையை கொடுத்த கையோடு, வீட்டிற்கு கிளம்பி விடலாம்.
'இவ்வளவு தானா வேலை...' என்று கேட்டால், பார்க்க எளிதாக தோன்றினாலும், மிகவும் அலுப்பூட்டக்கூடிய வேலை இது. அதனால் தான், இவ்வளவு சம்பளம் என்கின்றனர்.
- என்றென்றும் அன்புடன் அங்குராசு!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X