அழகிய நகுலன்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 நவ
2017
00:00

குழந்தை பிறப்பதற்காக, துர்வாசர் சொல்லிக் கொடுத்த மந்திரத்தை பாண்டுவின், இன்னொரு மனைவியான, மாத்ரிக்கு உபதேசித்தாள் குந்தி. பாண்டுவின் வேண்டுகோளுக்கிணங்க மாத்ரி, அஸ்வினி குமாரர்களை வேண்டினாள். அஸ்வினி குமாரர்கள் இருவரும், தேவர்களுக்கு மருத்துவர்கள்; மிகுந்த அழகுள்ளவர்கள்.
அவர்கள், நகுலன்-, சகாதேவன் எனும் பிள்ளைகளை, மாத்ரிக்கு அருளினர். பாண்டு இறந்த பின், மாத்ரியும் இறந்துவிட்டாள். அவளது குழந்தைகளை, தன் பிள்ளைகளைப் போல பாவித்து, வேறுபாடியின்றி வளர்த்தாள் குந்தி.
பாண்டவர்களிலேயே, மிகவும் அழகானவன் நகுலன். ஆயுர்வேதத்திலும், வாள் வீச்சிலும், குதிரை வளர்ப்பிலும் கை தேர்ந்தவன். இளையவன் சகாதேவன், அதீத புத்திசாலி; சாஸ்திரங்களில் கை தேர்ந்தவன். நடப்பதை முன்கூட்டியே அறியும் திறன் பெற்றவன்.
நகுலனும், சகாதேவனும், யுதிஷ்டிரனின் ஆணைக்கு கட்டுப் பட்டே வாழ்ந்தனர்.
யுதிஷ்டிரன், சக்கரவர்த்தி ஆவதற்காக, இந்திரபிர்தத்தில் ராஜசூய யாகம் நடத்த திட்ட மிட்டான்; இதற்காக அவன் சகோதரர்கள் நால்வரும், பல்வேறு திசைகளில், திக் விஜயம் செய்தனர். நகுலன், மேற்கு திசையில் போர் தொடுத்து சென்றான்; சகாதேவன், தென்திசையில் சென்றான்.
அவனுக்கு சோழ மற்றும் பாண்டிய அரசர்கள் ஆதரவளித்தனர். இலங்கையை ஆட்சி செய்து வந்த விபீஷணனும், சகாதேவனுக்கு ஆதரவளித்தான். சகோதரர்கள் அனைவரும் வெற்றி கனியை பற்றி வர, ராஜசூய யாகத்தை, யதிஷ்டிரன் வெற்றிகரமாக நடத்தி சக்கரவர்த்தி ஆனான்.
மகா யுத்தத்திற்கான ஆயத்த பணிகள் நடந்த போது, பாண்டவர் தரப்பிலிருந்து, கிருஷ்ணர், கவுரவர்களிடம், சமாதான தூது செல்ல முடிவு செய்யப்பட்டது. அப்போது, 'இயன்றவரை சமாதானத்திற்கே முயலுங்கள்' என, கிருஷ்ணரை வேண்டினான் நகுலன்.
சகாதேவனோ, சமாதானத்தை வன்மையாக கண்டித்தான்.
'தப்பி தவறி, துரியோதனன் சமாதானத்திற்கு இசைந்தாலும், ஒப்பு கொள்ள கூடாது' என்றான். மேலும், மற்ற நால்வரும் தர்மத்தின் பாதையை அனுசரித்தாலும், தான் தர்மத்தை விட்டு விலகி, போரில் எதிரிகளை கொல்ல துடிப்பதாக முழக்கமிட்டான்.
மகாபாரதப் போர் ஆலோசனையின் போது, துருபதனே படைத்தளபதியாக வேண்டுமெனக் கூறினான் நகுலன்.
விராட நாட்டு மன்னன், விராடனை தளபதியாக்க வேண்டுமென எண்ணினான் சகாதேவன். யுதிஷ்டிரனோ, அருச்சுனன் அறிவுரைப்படி, திருஷ்டத்யுமனை படைத்தளபதி ஆக்கினான்.
யுத்தத்தின்போது, நகுலனையும், சகாதேவனையும், கர்ணன் தோற்கடித்தான். இருப்பினும், தாய் குந்திக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக, அவர்களை கொல்லாமல் விட்டான். போரின் இறுதியில், சகுனியை கொன்றான் சகாதேவன்.
பாண்டவர்களில் நகுலனும், சகாதேவனும் கடைக்குட்டிகள்; அவர்கள் பெருமை, பீமன், அர்ச்சுனன் பராக்கிரமத்தால் வெளியே தெரியாமல் போய்விட்டது

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X