மொட்டை தலைக்கும்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2017
00:00

பவளக்கோட்டை நாட்டை, வஞ்சிவேந்தன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருக்கு, எதை, யாரிடம் கேட்பது என்ற விவஸ்தையே கிடையாது. இடம், பொருள், ஏவல் எதுவும் தெரியாமல், கண்ணில் பட்டோரிடம், கண்டதையும் கேட்டு விடுவார். அதனால், அவரை, வெகுளி அரசர் என்றே அழைப்பர்.
ஒருசமயம், அரசருக்கு, முழங்காலில் வலி ஏற்பட்டது. உடனே, அமைச்சரை அழைத்து, “ என் முழங்காலில் வலி ஏற்பட்டுள்ளது; காலை அசைக்க முடியவில்லை. என்ன செய்யலாம்,” என்று கேட்டார்.
“எந்த விஷயமானாலும், அரண்மனை குருவிடம் கேட்டு தானே செய்கிறோம்; முழங்கால் வலி பற்றியும் அவரிடமே கேட்கலாம்,” என்றார், அமைச்சர்.
அமைச்சர் சொல்வது, சரியென்று அரசருக்கு பட்டது.
உடனே, அரண்மனை குருவை அழைத்து வர உத்தரவிட்டார்.
சிறிது நேரத்தில், அரச குரு வந்தார். அவரிடம், “குருவே... என் முழங்காலில் வலி உண்டாகியுள்ளது; அதைப் போக்க, வழி ஏதேனும் சொல்லுங்கள்...” என்றார்.
“அரசே... அரண்மனை வைத்தியரை கேட்டால் தான், நல்ல வழி தெரியும். இருந்தாலும், நான் கேள்விப்பட்ட ஒரு செய்தியை சொல்கிறேன்... பொடுதலையை வச்சுக் கட்டினா, முழங்கால் வலி நீங்கி விடும்,” என்று கூறி, சென்றார் குரு.
உடனே, அரண்மனை வைத்தியரை அழைத்து வர, உத்தரவிட்டார்.
மருத்துவர் வருவதற்கு முன், அரசருக்கு, தாங்க முடியாத அளவுக்கு, முழங்கால் வலித்தது; அவர் துடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த பண்டிதனிடம், “பொடுதலை என்பது என்ன,” என்று கேட்டார், அரசர்.
பண்டிதனுக்கு தமிழே அரைகுறை; வைத்தியம் என்றால், என்னவென்றே தெரியாது.
அவன் அகராதியை பிரித்து, பொடுதலைக்கு பொருள் கண்டறிந்து, “அரசே... பொடுதலை என்றால் முடியில்லாத தலை, என, அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது,” என்றான்.
பண்டிதன் கூறியதை கேட்டு, காவலர்களை அழைத்து, “யாராவது தலையில் முடியில்லாமல் சென்றால், உடனே பிடித்து வாருங்கள்,” என, ஆணை பிறப்பித்தார்.
அரசரின் ஆணையை சிரமேற்கொண்ட காவலர்கள், சுற்றும், முற்றும் பார்த்தனர். அப்போது, அந்த வழியாக மொட்டை தலையுடன் ஒருவன் சென்று கொண்டிருந்தான். அவனை பிடித்து சென்று, அரசர் முன் நிறுத்தினர்.
அரசர், ''சரி... சரி... உடனே, குருநாதர் சொன்னபடி செய்யுங்கள்,'' என்று கட்டளையிட்டார்.
மொட்டைத்தலையனுக்கு, எதுவுமே விளங்கவில்லை.
'குருநாதர் என்ன சொன்னார்; நம்மை ஏன் பிடித்து, அரசரிடம் கொண்டு வந்தனர்; அவர்கள் என்னை செய்யப் போகின்றனர்' என்ற கேள்விகள், மொட்டைத் தலையன் உள்ளத்தில் எழுந்து, குழப்பியது.
“உம்... சீக்கிரம் அவன் தலையை எடுத்து வாருங்கள்...” என்று, அரசர் கோபமாக கூறினார்.
அப்போது, அரண்மனை வைத்தியர் மருந்துடன் அங்கே வந்தார். அரசரின் காலுக்கு மருந்து வைத்து கட்டியபடியே, “அரசே... இந்த மொட்டை தலையன், தலையை வெட்டி வரும்படி, ஏன் கட்டளையிட்டீர்கள்,” என்று கேட்டார்.
“வைத்தியரே... உங்களை அழைத்து வர, காவலர்களை அனுப்புவதற்கு முன், அரண்மனை குருநாதரிடம் ஆலோசனை கேட்டேன். அவர், 'பொடுதலை வச்சு கட்டினா, முழங்கால் வலி சரியாகும்' என்று கூறினார்.
“எதற்கும் வைத்தியரிடம் ஒரு வார்த்தை கேட்டு விடுங்கள், என்று குருநாதர் சொல்லி சென்று விட்டார். அதன்பின் தான், உங்களுக்கு ஆள் அனுப்பினேன்; நீங்கள் வர, தாமதம் ஆனதால், என்ன செய்வதென்று யோசனை செய்தேன்; அப்புறம்...” என்று கூறி, அரசர், பேச்சை நிறுத்தினார்.
“அப்புறம் என்ன நடந்தது அரசே...'' என்று கேட்டார், வைத்தியர்.
“பண்டிதனிடம், பொடுதலை என்றால் என்ன என்று கேட்டேன்; அவன் அகராதியை பார்த்து, ' பொடுதலை என்றால் முடியில்லாத தலை' என்று கூறினான்.
“அவன் கூறியபடியே, ஒரு மொட்டை தலையனை கண்டுபிடித்து, அவன் தலையை வெட்டி, அதை என் முழங்காலில் கட்டினால், வலி போய்விடும் என்று எண்ணி, இவ்வாறு செய்தேன்...” என்று, விளக்கமாக கூறினார்.
அரசர் கூறியதை கேட்டு, வைத்தியர், 'கல கல' என சிரித்தார்.
“வைத்தியரே, ஏன் சிரிக்கிறீர்...'' என்று கேட்டார், அரசர்.
“அரசே... 'பொடு தலை' என்றால், ஒரு சக்தி வாய்ந்த மூலிகை; அதை நசுக்கி, முழங்காலில் வைத்து கட்டினால், வலி நீங்கி விடும். இதை நீங்கள் தவறாக புரிந்துள்ளீர்கள்,” என்று விளக்கமாக கூறினார், வைத்தியர்.
இதைக் கேட்டு, 'பேந்த பேந்த' விழித்தார், அரசர்.
“ஐயா... சரியான நேரத்தில் வந்து, காப்பாற்றினீர்கள்; நீங்கள் மட்டும் வரவில்லை என்றால், இந்நேரம் என் தலையை வெட்டி, அரசரின் முழங்காலில் கட்டியிருப்பர். நல்ல வேளை, என் உயிர் தப்பியது,” என்று கூறி, ஓட்டம் பிடித்தான், மொட்டை தலையன்.
இந்த நிகழ்வுக்குப்பின் தான், 'மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே' என்ற சுவை மொழி பரவியது குட்டீஸ்... சரி, எந்த விஷயத்தையும் சிந்தித்து, தகுதியானவரிடம் முறையான ஆலோசனை பெற்று செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்டீர்களா.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X