இளஸ்... மனஸ்... (86)
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 நவ
2017
00:00

அன்பு சகோதரி ஜெனிபருக்கு,
ஆறு மாதங்களாகத்தான், 'சிறுவர் மலர்' படித்து வருகிறேன். நண்பர் ஒருவர், தன் மகளின் புகைப்படம் வந்துள்ளதாக சொல்லி, கொடுத்தார். இதழை படித்த நான், நிஜமாவே வியந்து போனேன்.
'சிறுவர்களுக்கு மட்டுமல்ல, எல்லா வயதினரையும், 'கவர்' செய்து, இப்படி ஒரு இதழ் வருவது தெரியாமல் போயிற்றே' என்று வருந்தினேன். தற்போது, குடும்பமாக வாசிக்கிறோம்; நண்பர்களுக்கும் அறிமுகம் செய்கிறேன்.
சரி! விஷயத்துக்கு வருகிறேன்... என் மகன், பிளஸ் 1 படிக்கிறான். தினமும், படிக்கும் பழக்கம் கிடையாது. பரீட்சைக்கு ஒரு மாதத்துக்கு முன் இருந்து, இரவும், பகலும் தூங்காமல் படிப்பான். பரீட்சை அறையில், தூங்கிய அனுபவமும் உண்டு; சொன்னால் கேட்பதில்லை.
மறுநாள், பரீட்சை என்றால், அதிகாலை, 3:00 மணி வரை படித்து, பின் தூங்கி, காலை, 5:00 மணிக்கு மீண்டும் எழுந்து, படித்துவிட்டு, பரபரப்புடன் தேர்வுக்கு ஓடுகிறான். இவனை படிக்க வைப்பதற்குள், என் மனைவி திண்டாடிவிடுகிறார். 'நைட் ஸ்டடி' பண்ணாதே என்று சொன்னால் கேட்பதில்லை; இவனுக்கு, அறிவுரை கூறுங்கள்!

வணக்கம் சகோதரரே...
சிறுவர் மலர் குறித்து, தாங்கள் கருத்துக்களுக்கு நன்றி!
இந்த காலத்து பிள்ளைகள், அட்வைசை விரும்புவது இல்லை. அவர்கள், நினைப்பதை தான் செய்கின்றனர். நாமெல்லாம், பெற்றோருக்கு மதிப்பு கொடுத்து, அவர்கள் சொன்னதைத் தான் செய்தோம். நமக்கு, பிடிக்கிறதோ, இல்லையோ அப்பா சொல்லி விட்டால், மறு பேச்சில்லை. ஆனால், இன்றைய தலைமுறை, புத்திசாலிகளாக உள்ளனர்; நம்மை கேட்டு முடிவெடுப்பதில்லை. அவர்களுக்கு, எது பிடித்திருக்கிறதோ, அதை யாருக்காவும் மாற்றிக் கொள்ள தயாராக இல்லை.
இவர்களை திருத்த ஒரே வழி, அறிவியல் ரீதியான உண்மைகளை எடுத்துச் சொல்வதுதான். அப்படி சொன்னால், கட்டாயம் கேட்பர்.
இந்த அட்வைஸ் உங்க மகனுக்கு,
மகனே... பொதுவாக, ஆண் பிள்ளைகள் நல்ல புத்திசாலிகள்; பெண் பிள்ளைகள், தினமும் விழுந்து விழுந்து படிப்பதை, ஆண்பிள்ளைகள் ஒரு மாதத்திலேயே படித்து, மதிப்பெண் வாங்கும் திறன் உண்டு. அதற்கு முன், உன் உடலைப் பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்...
படிக்கும் மாணவர்களுக்கு, போதுமான உறக்கமும், ஓய்வும் தேவை. மாணவர்கள், இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதிக நேரம் கண் விழித்துப் படித்தால், நிறைய மதிப்பெண் வாங்கி விடலாம் என்று நினைக்கின்றனர்; அது ரொம்ப ரொம்ப தவறு.
நம் உடல், எந்த அளவிற்கு உழைக்கிறதோ, அதற்கேற்ற அளவில் ஓய்வும் தேவை. 'பல மணிநேரம் கண் விழித்து படித்தேன்' என, நீ பெருமையாக நினைக்கலாம்; ஆனால், உன் மூளை, அதை, எந்த அளவிற்கு நினைவில் வைத்துள்ளது, என்பது தான் முக்கியம்.
மகனே... மூளைக்கு, 'ரெஸ்ட்' கொடுக்காமல், தொடர்ந்து படித்தால், அது களைத்து போய் விடும். மறுநாள், நீ, படித்த பாடங்கள் எல்லாமே, தெரிந்ததாக இருக்கும்; ஆனால், நினைவுக்கு கொண்டு வர முடியாது.
காரணம், மூளைக்கு, தேவையான ஓய்வு கொடுக்காததால், அது களைத்து போய், பணியை சரியாக செய்யாது. பல மாணவர்கள், 'எல்லாமே நான் படிச்சது தான்; ஆனால், அந்த நேரத்தில், நினைவுக்கு வர வில்லை' என்று சொல்வது, இதனால் தான்.
உனக்கு ஒரு விஷயம் தெரியுமா... மூளை எப்போது, புத்துணர்ச்சியுடன் இருக்கிறதோ, அப்போது தான் படிக்கணும்; அப்போது படிக்கும் பாடங்கள், அப்படியே மனதில் பதியும். உறங்கும் நேரத்தில், நீ படித்த பாடங்களை, முளை சேர்த்து வைக்கும். தேர்வு எழுதும் போது, அவற்றை நினைவுக்கு கொண்டு வரும்.
பரீட்சைக்கு முதல் நாள், கட்டாயமாக இரவு முழுவதும் படிப்பதை நிறுத்தி, போதிய ஓய்வு கொடுத்து படித்துப் பார்... எவ்வளவு, 'மார்க்' வாங்கி இருக்கிறோம் என்று ஆச்சரியப்படுவாய்! அப்படியே, அன்றைய பாடங்களை, அன்றே படித்தால், உனக்கும், உன் மூளைக்கும், உன் மம்மிக்கும், சிரமம் இருக்காது. செய்வாய் தானே!
- அன்புடன், ஜெனிபர் பிரேம்!

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X