பீர்க்கங்காய், புடலங்காய் சாகுபடி சாதித்தது 'பந்தல் தொழில்நுட்பம்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2017
00:00

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இரும்பு கம்பி பந்தல் தொழில்நுட்பம் மூலம் திராட்சை பெருமளவு விளைவிக்கப்படுகிறது. கொடைக்கானல் மலைப்பகுதியில் இரும்பு கம்பி பந்தல் அமைத்து சவ்சவ் சாகுபடி செய்கின்றனர். வறண்ட பூமியான மதுரை மாவட்டம் கள்ளிக்குடி பகுதியில் பருத்தி, சிறுதானியங்கள் மானாவாரியாக பயிரிடப்படுகிறது.
இங்குள்ள விவசாயிகளுக்கு பந்தல் தொழில்நுட்பம் அறிந்திடாத ஒன்று. பொதுவாக மதுரையை பொறுத்தமட்டில் பந்தல் அமைத்து பயிர் வகைகள் சாகுபடி செய்யும் பழக்கம் இல்லை. மரக்குச்சிகளை வைத்து சிறிய அளவில் பந்தல் அமைத்து கொடிகளை படர விடுவர் அல்லது தரையில் படர விடுவர். தொழில் ரீதியாக திராட்சை சாகுபடி போல் இரும்பு கம்பி அமைத்து பயிர்களை விளைவிப்பது கிடையாது.

60 சென்ட் நிலம்கள்ளிக்குடி வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் மானியம் பெற்று கள்ளிக்குடி அருகே சித்துார் கிராமத்தை சேர்ந்த விவசாயி வேலுச்சாமி 60 சென்ட் நிலத்தில் முதல்முறையாக இரும்பு கம்பி பந்தல் அமைத்து பீர்க்கங்காய், புடலங்காய் பயிரிட்டு நல்ல விளைச்சல் கண்டு வருகிறார். விவசாயி வேலுச்சாமி கூறியதாவது: பந்தல் தொழில்நுட்பம் என்றதும் மற்ற விவசாயிகள் வேண்டாம் என கூறினர். ஏழை விவசாயியான என்னால் மானியம் பெற பயனாளி பங்களிப்பு தொகையை கூட செலுத்த இயலாத சூழ்நிலை. எனினும் தோட்டக்கலை துணை இயக்குனர் பூபதி, உதவி இயக்குனர் சுருளீஸ்வரன் ஊக்கமளித்தனர். அவர்களது ஆலோசனையின் பேரில் தேனியில் இருந்து திராட்சைக்கு பந்தல் அமைக்கும் தொழில்நுட்ப நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். 15 ஆண்டுகளுக்கு தாங்கும் வகையில் அற்புதமான இரும்பு கம்பி பந்தல் அமைத்து கொடுத்தனர். 150 நாட்களுக்கு ஒருமுறை பந்தலில் மாற்று பயிர் தொழில்நுட்ப முறையில் சாகுபடி செய்யலாம். 15 ஆண்டுகளுக்கு பின் துருப்பிடித்த கம்பிகளை மட்டும் அகற்றி விட்டு புதிய கம்பிகள் மூலம் பந்தல் அமைக்கலாம். கல் கால்கள் ஊன்றத் தேவையில்லை.

கம்பி வேலி பந்தல்: தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானியம் கிடைத்தது. வீரிய ஒட்டுரக பீர்க்கங்காய் பயிரிட்டேன். அடியுரமாக எரு, மக்கிய குப்பையை இட்டேன். அருகில் உள்ள கிணற்றில் இருந்து தேவையான அளவு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறேன். 40வது நாளில் இருந்து பீர்க்கங்காய் நல்ல விளைச்சல் கண்டது. நன்கு பருத்து மூன்று அடி நீளம் வரை வளர்ந்திருந்தது. நாள் ஒன்றுக்கு 100 கிலோ வரை காய்கள் கிடைத்தன. 40 வது நாளில் இருந்து 150 வது நாள் வரை பலன் கொடுக்கும். அத்துடன் காய்ப்பு முடிவுக்கு வரும். பீர்க்கங்காய் நாள் ஒன்றுக்கு 100 கிலோ வரை கிடைக்கும். காய்கறி மார்க்கெட்டில் கிலோ 40 ரூபாய் வரை விற்கிறேன். உழவர்சந்தை விவசாயிகளும் நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர்.
தற்போது 20 சென்ட்டில் பந்தல் தொழில்நுட்பத்தில் குட்டை ரக புடலங்காய் பயிரிட்டுள்ளேன். அதுவும் தற்போது பலன் கொடுக்க துவங்கியுள்ளது. வரப்புகளில் சுரைக்காய் பயிரிட்டுள்ளேன். 60 சென்ட் நிலத்தில் பீர்க்கங்காய், புடலங்காய், வரப்புகளில் சுரக்காய் விளைவித்து வருகிறேன். இப்பகுதி விவசாயிகளிடையே பந்தல் தொழில்நுட்பம் வரவேற்பை பெற்றுள்ளது.
தொடர்புக்கு: 8870414850
கா.சுப்பிரமணியன்,மதுரை.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X