ஏழு சென்ட் நிலத்தில் பழங்கள், காய்கறிகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2017
00:00

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்தவர். விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர் தனது வீட்டின் வளாகத்தில் ஏழு சென்ட் நிலத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக பழத்தோட்டம், மூலிகை தோட்டம், காய்கறி தோட்டம், நர்சரி கார்டன் அமைத்து தினமும் பராமரித்து வருகிறார்.
வீட்டிற்கான காய்கறிகள்கார்த்திகேயன் கூறியதாவது: தென்னை, மாதுளை, ராக்கெட் சப்போட்டா, எலுமிச்சை, நாட்டு கொய்யா, பன்னீர் கொய்யா, சீதாப்பழ மரம், எலுமிச்சை, அல்போன்ஸ் ரக மாமரம், வேப்ப மரம், பெரிய நெல்லிக்காய் ஆகியவற்றில் தலா ஒரு மரத்தை வளர்த்து வருகிறேன். தவிர மூலிகை செடிகள், நர்சரி கார்டன், வீட்டிற்கு தேவையான பாகற்காய், பீர்க்கங்காய், அவரை, புடலங்காய் பயிரிட்டுள்ளேன். ஊடு பயிராக பச்சை மிளகாய், நுால்கோல், தோட்டத்தின் ஓரங்களில் 20 சவுக்கு மரங்களை வளர்த்து வருகிறேன். இது தோட்டத்தின் வேலியாகவும் பயன்பட்டு வருகிறது. வீட்டு தேவைக்கான பழங்கள், காய்கறிகளை வீட்டின் தோட்டத்தில் இருந்து பயன்படுத்தி வருகிறோம். இயற்கை முறையில் விளைவிப்பதால் சுவையும், ரசாயனம் கலக்காத பழங்கள், காய்கறிகள் கிடைக்கிறது.
பூச்சி விரட்டி மருந்துகள்வெள்ளை பஞ்சுப் பூச்சிகள் ஒரு சில மரங்களில் இருக்கும். பஞ்சுப் பூச்சிகள் புற்றுநோய் கிருமி போன்றது. செடிகளில் அப்பிக்கொள்ளும். கொய்யா, செம்பருத்தி, மாதுளை போன்ற மரங்களின் இலைகளில் அதிகம் இருக்கும். இப்பூச்சிகள் செடிகளை வளர விடாமல் தடுக்கும். இவற்றை வரவிடாமல் தடுக்க வேண்டும். இதற்காக வீட்டில் உள்ள தயிரை நான்கைந்து நாட்கள் புளிக்க வைத்து, அதனுடன் தண்ணீர் சேர்த்து மோராக்கி வடிகட்டி, அதனுடன் மஞ்சள் துாள் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும். அதன் வாசனைக்கு பஞ்சுப் பூச்சிகள் பஞ்சாக பறந்து விடும்.
முருங்கையை தாக்கும் அரிமுருங்கை மரத்தில் அரிப்பூச்சி உற்பத்தியாகும். இதை தடுக்க கட்டி பெருங்காயத்தை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைத்து அடுத்த நாள் அந்த தண்ணீரை முருங்கை மரத்தின் துாரில் ஊற்ற வேண்டும். இப்படி செய்வதால் முருங்கையில் அரிப்பூச்சிகள் அண்டாது. இத்தொழில்நுட்பத்தை ஆறு மாதத்திற்கு ஒரு முறை செய்தால் போதும். எனது தோட்டத்தில் முருங்கை மரம் வளர்த்த எட்டு ஆண்டுகளில் அரிப்பூச்சியே வரவில்லை. மூன்று மாதத்திற்கு ஒரு முறை களை எடுத்து மரங்களில் கவாத்து செய்ய வேண்டும்.
மண் புழு உரம், ஆட்டுப்புழுக்கை, கடலை புண்ணாக்கு, கீழே விழும் இலைகள் போன்றவை இயற்கை உரமாகிறது. வீட்டு தோட்டத்தில் விவசாயம் செய்வது உடல் உழைப்புக்கு ஏற்றது; மன நிறைவை தரும் அற்புத ஆற்றல் கொண்டது.
பறவைகளின் இசை மழைபழ மரங்கள், தென்னை, எலுமிச்சை மரங்களை தேடி அழகிய பறவைகள் வந்த வண்ணம் உள்ளன. வீட்டு தோட்டம் மூலம் மாதம் தோறும் பழங்கள், காய்கறி செலவு மிச்சம். வீட்டின் தேவை போக மீதமாவதை விலைக்கு விற்கலாம், என்றார். தொடர்புக்கு 90032 58329.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X