லியானார்டோ டாவின்சி வரைந்த இயேசுநாதர் ஓவியம் 450 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது (இந்திய மதிப்பில் சுமார் 2,940 கோடி ரூபாய்). 'உலக ரட்சகர் இயேசு' என்று அழைக்கப்படும் இந்த ஓவியத்தில், இயேசுநாதர் ஒரு கையை மேலே உயர்த்தியும், மற்றொரு கையில் கண்ணாடிப் பந்து (உலகம்!) ஒன்றை ஏந்தியுள்ளபடியும் வரையப்பட்டுள்ளது. டாவின்சியின் படங்களிலேயே இதுதான் இதுவரை உலக அளவில் அதிக விலைக்கு ஏலம் போய் உள்ளதாம். அதே சமயம் இது டாவின்சி வரைந்த ஓவியம் அல்ல என்றொரு கருத்தும் நிலவி வருகிறது.