ஃபோர்ப்ஸ்: இளம் சாதனையாளர் பட்டியலில் சென்னை மங்கை | பட்டம் | PATTAM | tamil weekly supplements
ஃபோர்ப்ஸ்: இளம் சாதனையாளர் பட்டியலில் சென்னை மங்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 நவ
2017
00:00

உலக அளவில் பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ், 2017ம் ஆண்டு, முப்பது வயதுக்குட்பட்ட, 30 இளம் சாதனையாளர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. இதில் சென்னையைச் சேர்ந்த
அக் ஷயா ஷண்முகம் என்ற 29 வயது இளம்பெண் தேர்வு பெற்றுள்ளார். இவர் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிகல் என்ஜினியரிங் பட்டம் பெற்றவர்.
தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் அக் ஷயா, புகைப்பதை விட்டொழிக்க, ஒரு மொபைல் செயலியைக் கண்டுபிடித்துள்ளார். 'ஸ்மார்ட் வாட்ச்' வடிவில் இருக்கும் இந்தச் செயலி, புகைப்பவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்கும். பொதுவாக, புகைபிடிக்கும் பழக்கம் உடையவர்கள், புகைப்பதற்கு ஒருசில குறிப்பிட்ட நேரங்களைத் தேர்வு செய்கின்றனர். உணவு உண்டபின், தேனீர், காபி போன்ற பானங்கள் பருகியபின், பணி நெருக்கடியின்போது, டென்ஷன் ஏற்படும்போது புகைக்கின்றனர்.
அந்தக் குறிப்பிட்ட நேரங்களையும், அப்போது உடலில் ஏற்படும் மாற்றங்களையும் இச்செயலி சேமித்துக்கொள்ளும். பின்னர், அதேபோன்ற மாற்றம் உடலில் தோன்றும்போதே, சுமார் 6 நிமிடங்களுக்கு முன்னதாகவே, இச்செயலி கண்டுகொள்ளும். அந்த நபர் புகைக்கப்போகிறார் என்பதை உணர்ந்ததுமே, அதுகுறித்த எச்சரிக்கையை அவருக்கே தொடர்ந்து வழங்கத் தொடங்கிவிடும்.
இதனால், புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர் சுதாரித்துக்கொண்டு, புகைப்பதைத் தவிர்க்கும் இதர வழிமுறைகளை நாடத் தொடங்கலாம். தொடர்ந்து 6 மாதங்கள் இச்செயலியைப் பயன்படுத்தினால், புகைப் பழக்கத்தில் இருந்து விடுபடலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரும் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் சந்தைக்கு வரவிருக்கும் இந்தக் கண்டுபிடிப்புக்காகவே ஃபோர்ப்ஸ் இவரைத் தேர்வு செய்துள்ளது. அமெரிக்காவில் உள்ள மாசாசூட்ஸ் பல்கலைக் கழகத்தில் தனது ஆராய்ச்சிப் படிப்பை முடித்துள்ளார் அக் ஷயா. ஆராய்ச்சி மேற்கொண்ட காலத்திலேயே பெல்லோஷிப்பையும் பல விருதுகளையும் பெற்றுள்ளார். தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டுவரும் அக் ஷயா 'லும்மி லேப்ஸ்'(lummelabs) என்ற மென்பொருள் நிறுவனத்தின், இணை நிறுவனராகவும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பணியாற்றுகிறார்.
ஃபோர்ப்ஸ் பத்திரிகை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து வெளிவருகிறது. உலக அளவில் 11 மொழிகளில் இது வெளியாகிக்கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் சிறந்த நிறுவனங்கள், மனிதர்கள் என்று பல பிரிவுகளில் சாதனையாளர் பட்டியலை வெளியிட்டு அங்கீகரித்து வருகிறது. இப்பத்திரிகையில் இடம்பெறுவது, மிகப்பெரிய அங்கீகாரமாகவும் கௌரவமாகவும் கருதப்படுகிறது.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X