காந்தியச் சிந்தனைகளின் அடிப்படையில், தங்களுக்குள் இருக்கும் படைப்பூக்கத்திறன் மூலம் அன்றாடச் சிக்கல்களைத் தீர்த்து, அமைதியை நிலைநாட்டுவதற்கு நூற்றி ஐம்பது குட்டிக் கதைகள் கொண்ட மூன்று நூல்களைச் சென்னையில் உள்ள காந்தி அமைதி அறக்கட்டளை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவர்களின் சமீபத்திய அறிக்கையொன்றில், இந்த மூன்று நூல்களையும் சுமார் ஆயிரம் பள்ளிகளுக்கு இலவசமாக அனுப்பிவைக்க முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். வகுப்பறையில் பாடங்களுக்கு இடையே இக்கதைகளை ஆசிரியர்கள் சொல்வதன் மூலம், மாணவர்களிடையே சகோதரத்துவம், அன்பு, அமைதி ஆகிய குணங்களை எளிமையாக மீட்டெடுக்க முடியும் என்று இவர்கள் தெரிவிக்கின்றனர். தங்கள் பள்ளிக்கு இந்த மூன்று நூல்களையும் இலவசமாகப் பெற விரும்புகிறவர்கள், kulandhaisamy.gpf@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினால், நூல்களை அனுப்பிவைப்பதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் முந்திக்கொள்க!