உங்களிடம் ஒரு வரைபடத்தைக் கொடுத்து, அதில் குணக்கடல் எங்கே இருக்கிறது என்று குறிக்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்? திருதிருவென்று விழிப்பீர்கள். அதுவே வங்காள விரிகுடாவை குறி என்று சொன்னால், உடனே குறித்து விடுவீர்கள். ஆம், வங்காள விரிகுடாவின் பழைய பெயர்தான் குணக்கடல். அரபிக் கடலுக்கும் குடக் கடல் என்று பழைய பெயர் உண்டு. அது சரி, தெற்கே இருக்கும் இந்து மகா சமுத்திரத்துக்கு என்ன பெயர்?
குமரிக்கடல்!