வறட்சிக்கு ஏற்ற மரவள்ளிக்கிழங்கு சாகுபடி ஏக்கருக்கு 20 டன் அள்ளலாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2017
00:00

தென்மாவட்டங்களில் தொடர்ந்து வறட்சி நிலவுவதால் எதிர்பார்த்த விளைச்சல் இல்லை. வறட்சியை தாக்குப்பிடித்து வளரும் மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் சூசையப்பர்பட்டினம் விவசாயி எஸ்.ஜோசப் ஆரோக்கியசாமி கவனம் செலுத்தி வருகிறார்.

மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் அதிக மகசூல் குறித்து ஜோசப் ஆரோக்கியசாமி கூறியதாவது: வறட்சியான மாவட்டங்களில் சிவகங்கையும் ஒன்று. ஏற்கனவே குடிநீர் கூட கிடைக்காமல் பஞ்சம் நிலவுகிறது. சொட்டு நீர் பாசன முறையில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்கிறேன்.
நல்ல லாபம் கிடைப்பதால் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து மரவள்ளிக் கிழங்கையே பயிரிட்டு வருகிறேன். இந்த ஆண்டு 60 சென்டில் பயிரிட்டுள்ளேன்.
நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை குறைவான பகுதிகளில் மரவள்ளி கிழங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்திலும் வறட்சி நிலவுவதால் கிணறுகள் வறண்டு வருகின்றன. அதிக நீர் தேவையுள்ள நெல், வாழை போன்ற பயிர்களை சாகுபடி செய்ய முடியவில்லை.

இதனால் வறட்சியை தாங்கி வளரும் மரவள்ளிக் கிழங்கை சாகுபடி செய்கிறோம். குங்குமரோஸ், முள்ளிவாடி, வெள்ளைக்கிழங்கு போன்ற ரகங்கள் உள்ளன. இந்த கிழங்கு மூலம் ஜவ்வரிசி, பசை, சிப்ஸ், ஸ்டார்ச் போன்ற பல வகையான பொருட்கள் தயாரிக்கின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. அரை அடி நீளமுள்ள மரவள்ளி குச்சியை ஒரு இஞ்ச் ஆழத்தில் நட வேண்டும். ஏக்கருக்கு 5 ஆயிரம் குச்சிகள் நடலாம். மாதத்திற்கு இரண்டு முறை நீர் பாய்ச்சினால் போதும். பராமரிப்பு செலவும் குறைவு. கடலை, வெங்காயம், உளுந்து போன்றவற்றை ஊடு பயிராகவும் பயிரிடலாம்.
எட்டு முதல் பத்து மாதங்களில் மரவள்ளிகிழங்கை பறிக்கலாம். ஒரு செடியை பறித்தால் 4 முதல் 7 கிலோ வரை கிழங்கு கிடைக்கும். பறித்த குச்சியை மீண்டும் சாகுபடிக்கு பயன்படுத்தலாம். ஏக்கருக்கு 15 முதல் 20 டன் வரை கிடைக்கும். தற்போது வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது. நாங்கள் ஈரோடு தொழிற்சாலைக்கு அனுப்புகிறோம். கிலோ 8 முதல் 10 ரூபாய்க்கு எடுத்து கொள்கின்றனர். ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே செலவாகும், என்றார். தொடர்புக்கு, 84897 85434.

- இ.ஜெகநாதன்
சிவகங்கை.



Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X