80ம் ஆண்டு விழா காணும் சைபால்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2017
00:00

சரித்திர பின்னணியும், புராதன பெருமைகளையும் உள்ளடக்கிய நகரம், மதுரை.
இன்று, 80வது ஆண்டு விழாவை கொண்டாடும், சருமரோக நிவாரணியான, 'சைபால்' நிறுவனம், மதுரை நகரின் பெருமைகளில் ஒன்றாக திகழ்கிறது.
நாட்டில், சுதந்திர தீ, கொழுந்து விட்டு எரியத் துவங்கியிருந்த நேரம் அது... நாடெங்கும் காந்திஜியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு, உடல், பொருள், ஆவியை துறக்க பலரும் துடித்தபடி இருந்தனர். இந்நிலையில் தான், 'சொந்தமாக சிந்திக்கவோ, ஒரு பொருளை தயாரிக்கவோ தெரியாத இவர்கள் சுதந்திரம் பெற்று என்ன, செய்யப் போகின்றனர்' என்று பிரிட்டிஷார் நம்மை கேலி செய்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'அந்நிய நாட்டு பொருட்களை நாம் உபயோகிக்கக் கூடாது; அதே நேரம், நம் தேவைகளுக்கு நாமே உற்பத்தி செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் முகத்தில் கரி பூசியது போலாகும். நம்மால் இது நிச்சயம் முடியும். அதற்கான முயற்சியில் இன்றே, இப்போதே இறங்குவீர்...' என்று, 'மேக் இன் இன்டியா' கோஷத்தை முழங்கினார், காந்திஜி. இதைக் கேட்ட, 18 வயதே ஆன, எஸ்.சுப்ரமணியன் எடுத்த முடிவு தான், இன்று, நான்கு மாநில மக்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும், 'சைபால்' நிறுவனம்.
மருந்து கம்பெனியில் வேலை பார்த்த சுப்ரமணியன், 'சொந்தமாக ஒரு பொருளை உற்பத்தி செய்ய வேண்டும்... அப்பொருள் குறைந்த விலையில், நிறைந்த பலன் தருவதாக இருக்க வேண்டும்...' என்று எண்ணினார்.
அக்காலகட்டத்தில், நாடே விவசாயத்தில் செழித்திருந்தது. சோற்றில் கை வைத்த நேரம் போக, மீதி நேரம் சேற்றில்தான் கால் வைத்திருந்தனர், விவசாயிகள். இதனால், கால் விரல் இடுக்குகளில் வரக்கூடிய சேற்றுப் புண்ணால் பெரிதும் அவதிப்பட்டனர். இதற்கான மருந்து வெளிநாட்டில் இருந்துதான் வரவேண்டும்; விலையும் அதிகம். இதன் காரணமாக, விவசாயிகளின் அவதி தீர்க்கப்படாமல் தொடர்கதையாகவே இருந்தது.
'இந்த சேற்றுப் புண்ணுக்கான மருந்தை நாமே ஏன் தயாரிக்கக் கூடாது...' என்று எண்ணிய சுப்ரமணியன், தன் உறவினர் ஒருவருடன் சேர்ந்து உருவாக்கியது தான், 'தி சவுத் இன்டியன் மேனுபேக்சரிங்' கம்பெனி. இக்கம்பெனியின் தயாரிப்புதான், சைபால். ஆரம்பத்தில் இதன் பெயர், 'சிபால்!'
குடிசைத் தொழில் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இக்களிம்பை, சிவப்பு டப்பாவில் அடைத்து, தலைச்சுமையாகவே ஊர் ஊராக சென்று விற்று வந்தார், சுப்ரமணியன். 1940களில் இதன் விலை, 6 அணா; அதாவது, 36 பைசா.
இப்படி வெயில், மழை பாராது உழைத்து, நிறுவனத்தை வளர்த்த சுப்ரமணியன், திடீரென இறந்து விட்டார். இப்போது அவரது பேரன்களான, எஸ்.எஸ்.சுப்ரமணியன் மற்றும் எஸ்.பாலாஜி ஆகியோர் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.
தாத்தா உருவாக்கினார்; பேரன்கள் நடத்துகின்றனர்... சரி, நடுவில் அப்பா கேரக்டர் இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா... அமரரான எஸ்.சங்கரநாராயணன் என்ற அந்த மாமனிதரைப் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்...

மழை நேரத்து மாமருந்து...
கடந்த, 2015ல், சென்னையில், பெரு மழை பெய்த போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, இளைஞர்கள் பலர், பல்வேறு ஊடக தளங்களின் மூலம் ஒருங்கிணைந்தனர்.
அவர்களில் ஒருவரான ரேடியோ அறிவிப்பாளரான, பாலாஜி, யார் யார் எங்கே அவதிப்படுகின்றனர், அவர்களுக்கு என்ன உதவிகள் தேவை என்று சொல்லும் போது, 'மழை நீரால் பாதிக்கப்பட்டோருக்கு துணிமணிகள் தருவதை விட, நாலு சைபால் டப்பா வாங்கிக் கொடுங்க... ரொம்ப புண்ணியமாக போகும்...' என்று அறிவித்தார்.
'எவ்வளவு மழையில் நனைந்திருந்தாலும் கவலை வேண்டாம்... கொஞ்சம் போல் சைபால் மருந்தை பாதம் முழுவதும், முக்கியமாக, கால் விரல் இடுக்குகளில் தேய்த்து கொள்ளுங்கள்; பாதம் சம்பந்தமான எந்தப் பிரச்னையும் வராது...' என்று, 'டிப்'சும் கொடுத்தார்.
இதைக் கேள்விப்பட்ட மக்கள், சைபால் டப்பாவை வாங்கித் தீர்த்தனர். மேலும், தேவைக்கு மதுரை சைபால் நிறுவனத்தை அணுக, இலவசமாகவும், சலுகை விலையிலும் வேண்டிய அளவு சைபாலை சென்னைக்கு கொடுத்து உதவினர்.

— தொடரும்.
எல். முருகதாஸ்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
(விடை விரும்பி) Vidai Virumbi - யாதும் ஊரே யாவரும் கேளிர்,இந்தியா
13-டிச-201700:24:28 IST Report Abuse
(விடை விரும்பி) Vidai Virumbi Yes...the best
Rate this:
Cancel
skv - Bangalore,இந்தியா
10-டிச-201706:20:46 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ippothumkoodapalar veedukalile irukkum arumarunthu saibal
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X