அனுபவம்: ரோபோ ரெஸ்டாரன்ட் !
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 டிச
2017
00:00


இரண்டு பக்கமும் ஐ.டி., நிறுவனங்களால் சூழப்பட்ட சென்னை ஓ.எம்.ஆர்., சாலையில், செம்மஞ்சேரியில் சமீபத்தில் திறக்கப்பட்டிருக்கிறது, ரோபோ ரெஸ்டாரன்ட். இங்கு எந்த உணவு ஸ்பெஷல் என்கிறீர்களா? இங்கு உணவகமே ஸ்பெஷல்தான். மனிதருக்கு பதில் ரோபோவே உணவுகளைப் பரிமாறினால் எப்படியிருக்கும்! அதை சாதித்துக் காட்டியிருக்கிறது, ரோபோ ரெஸ்டாரன்ட்.

முதல் மாடியில் உணவகம் என்றாலும், கூட்டம் குவிவதால் தரைத்தளத்தில் பதிவு செய்துவிட்டு, காத்திருந்த பின்னரே உணவகத்திற்குள் அனுமதிக்கப் படுகிறார்கள். உணவகத்திற்குள் நுழைவதற்கு முன்னர், படிகளில் தொடங்கி, கதவுகள் வரை, ரோபோக்களின் வித்தியாசமான ஓவியங்கள் இன்னும் எதிர்பார்ப்பை எகிறச் செய்கின்றன. உணவகத்திற்குள் நுழைந்ததும் ஆச்சரியம் ஆரம்பமானது.

குறைந்த வெளிச்சத்தில், சுற்றுச்சுவர் முழுவதும் ரேடியத்தாலான ஓவியங்கள் வித்தியாசமான அனுபவத்தை அளிக்கின்றன. சுவரில் தொடங்கி இருக்கைகள் வரை, கருப்பும் சிவப்பும் மட்டுமே. ஒவ்வொரு மேஜையிலும் ஒரு டேப்லட் இருக்கும். அந்த டேப்லட்டில், நாமே ஆர்டரை பதிவு செய்ய வேண்டும். அடுத்த அரை மணிநேரத்திற்குள், ஒரு ரோபோ உணவுடன் நம்முடைய இருக்கைக்கு அருகில் வந்து ஆச்சரியமூட்டும். 'Please Take your Food' என்று ரோபோ சொன்னதும், உணவுகளை பெற்றுக்கொள்ள வேண்டும். பின்னர், 'Please Touch my hand, i am going back to my work' என்று ரோபோ சொல்லும். ரோபோவின் கையைத் தொட்டதும் நன்றி கூறிவிட்டு, அடுத்த சேவைக்குச் செல்லும். பொதுவான உணவகம் தான் என்றாலும், இங்கு சீன மற்றும் தாய் உணவுகள் ஸ்பெஷல்.

இந்த உணவகத்தில் மொத்தம் நான்கு ரோபோக்கள் உள்ளன. ரோபோ செல்லும் வழியில் வாடிக்கையாளர்கள் யாராவது நின்று கொண்டிருந்தால், 'Please Make my way' என்று சொல்லும். அதுமட்டுமின்றி, பிறந்த நாளுக்கு ரோபோக்களே, பாட்டிப்பாடி வாழ்த்து கூறும். இப்படி பல விந்தைகளை அங்கு காணலாம். ரோபோ ரெஸ்டாரன்டின் நிறுவனர்களான வெங்கடஷ் மற்றும் கார்த்திக்கிடம் பேசினோம்.

“வழக்கமான சைனீஸ் உணவகம் என்று சொல்வதை விட, வித்தியாசமாக ஏதாவது ஒன்றை செய்யவேண்டும் என்று நினைத்தோம். அதனால் ஜப்பான் சென்று இந்த ரோபோக்களை வாங்கினோம். ரோபோவிற்கு ஏற்றமாதிரி உணவகத்தை வடிவமைத்தோம். அடுத்த கட்டமாக அண்ணாநகரில் ஒரு கிளையை தொடங்கவும் முடிவு செய்துள்ளோம்” என்றார் கார்த்திக்.இந்த ரெஸ்டாரன்ட், காலை 12:00 மணி முதல் 3:00 மணி வரையிலும், மாலை 7:00 மணி முதல், 11:00 மணி வரையிலும் செயல்படுகிறது. குழந்தைகளுக்காகவே பலர் இந்த உணவகத்திற்கு வருகிறார்கள். இங்கு உணவுகளின் விலை சராசரி தான். ஆனாலும் இந்த ரோபோக்களை கண்டு ரசிக்கவும், புது சூழ்நிலையில் உணவருந்தவும், நிச்சயம் விசிட் செய்யலாம்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X