கேள்வி-பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2011
00:00

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் உருவாக்கப்படும் டேபிள்களை ஏன் இடது ஓரமாக வைக்க வேண்டும். பக்கத்தின் நடுவே வைத்திட வேண்டும் என்றால், டேபிளைத் தயார் செய்யும் முன் ஏதேனும் செட் அப் செய்திட வேண்டுமா? -ஞா. ஜோசப் சின்னராஜ், தாம்பரம்.
பதில்: உங்கள் டேபிளில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கிளிக் செய்திடவும். Table மெனு சென்று Select என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் இதிலிருந்து கிடைக்கும் மெனுவில் Table என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் இப்போது டேபிளை செலக்ட் செய்திருக்கும். அடுத்து Ctrl+E கீகளை அழுத்தவும். டேபிள் உங்கள் டாகுமெண்ட்டில் நடுவில் சென்று அமர்ந்துவிடும்.

கேள்வி: கம்ப்யூட்டர் திடீரென மிக மெதுவாக இயங்குவதற்குக் காரணமாகப் பல விஷயங்களை கட்டுரையாகச் சொல்லி இருக்கிறீர்கள். சுருக்கமாக அவற்றைப் பட்டியலிடவும். -மா. ராமநாதன், திண்டிவனம்.
பதில்: பட்டியலிட்டாலும் பல காரணங்கள் உண்டு. மிக முக்கியமான காரணங்கள் சிலவற்றைப் பட்டியலிடுகிறேன்.
1. கம்ப்யூட்டரை வைரஸ் பாதித்திருக்கலாம்.
2. கம்ப்யூட்டர் தொடங்கும்போதே, இயங்கி, கம்ப்யூட்டர் இயக்கத்தின் பின் நிலையில் இயங்கும் ஸ்டார்ட் அப் புரோகிராம்கள், கம்ப்யூட்டரின் திறனைப் பெரும்பாலும் எடுத்துக் கொள்வதால், கம்ப்யூட்டர் மிக மெதுவாக இயங்கலாம்.
3. கம்ப்யூட்டரில் நிறுவப்பட்ட ராம் மெமரி எனப்படும் தற்காலிக நினைவ கத்தின் கொள்ளளவு, நீங்கள் இயக்கும் புரோகிராம்களுக்குப் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம்.
4. குக்கி பைல்கள், தற்காலிக இன்டர்நெட் பைல்கள் ஆகியவை கேஷ் மெமரியில் இருந்து இடத்தைப் பிடித்துக் கொண்டு, இயங்கும் பைல்களுக்கு இடம் இல்லாமல் இருப்பது.
5. ஹார்ட் டிஸ்க்கில் குறைபாடு இருக்கலாம்.
6. ஹார்ட் டிஸ்க்கில் உள்ள பைல்கள் சிதறலாகப் பதிக்கப்பட்டிருக்கலாம்.
7. ஒரே மாதிரியான அப்ளிகேஷன் புரோகிராம்கள் ஒரே நேரத்தில் இயங்கி, குழப்பத்தினை விளைவிக்கலாம்.

கேள்வி: வேர்டில் ரூலர் அங்குலத்தில் காட்டப்படுகிறது. என் டிடிபி பணிக்கு அதனை சென்டிமீட்டரில் மாற்ற விரும்புகிறேன். அதற்கான வழி என்ன? -கே. உதயபாஸ்கர், பொள்ளாச்சி.
பதில்: அங்குலத்தில் உள்ள ரூலரை எப்படி சென்டிமீட்டருக்குக் கொண்டு வருவது? முதலில் ரூலரை எப்படி பெறுவது? முதலில் View menu மெனு சென்று Ruler என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது ரூலர் கோடு கிடைக்கும். இனி Tools மெனு சென்று Options என்னும் பிரிவில் கிளிக் செய்தால் டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும். இதில் General என்னும் டேபைத் தேர்ந்தெடுக்கவும். இதில் கீழாக “measurement units” என்னும் பீல்ட் தரப்பட்டிருக்கும். அதைக் கிளிக் செய்தால் கீழாக விரியும் மெனு ஒன்று கிடைக்கும். இதில் நீங்கள் விரும்பும் அளவைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியே வரவும். இனி ரூலர் நீங்கள் விரும்பிய அளவு அலகுகளில் கிடைப்பதால் அதனை எளிதாக நீங்கள் பயன்படுத்தலாம்.

கேள்வி: நான் பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தி வருகிறேன். இதில் உள்ள டேப்களின் நீளம் அகலம் மாற்றி அமைக்க ஏதேனும் எக்ஸ்டன்ஸன் புரோகிராம் உள்ளதா? ஆம் என்றால், அதனை எப்படி அமைப்பது? தளம் ஒன்றின் பெவிகான் மட்டும் அமைக்கும் வகையில் செட் செய்திடலாமா? -பெ.பாஸ்கரன், மதுரை.
பதில்: உங்கள் யூகம் சரியானது. இந்த எக்ஸ்டன்ஷனைத் தேடிப் பார்த்து தெரிந்து கொண்டிருக்கலாமே.
Custom Tab Width என்று ஒரு எக்ஸ்டன்ஸன் புரோகிராம் கிடைக்கிறது. இதன் மூலம் பயர்பாக்ஸ் பிரவுசரில் தரப்பட்டுள்ள டேப்களின் நீள, அகலத்தினை மாற்றி அமைக்கலாம்.
மாறா நிலையில், பயர்பாக்ஸ் பிரவுசரின் குறைந்த பட்ச அகலம் 100 பிக்ஸெல், அதிக பட்சம் 250 பிக்ஸெல். மேலே குறிக்கப்பட்டுள்ள எக்ஸ்டன்ஷன் புரோகிராம், இந்த அளவினைச் சற்று மாற்றிக் கொள்ள நமக்கு வழி காட்டுகிறது. ஆனால், பிரவுசரிலேயே, இந்த வசதி தரப்பட்டுள்ளது. இதனைப் பெற, முதலில் பயர்பாக்ஸ் பிரவுசரில் about:config என டைப் செய்திடவும். உடன், advanced configuration என்ற பிரிவு விண்டோ காட்டப்படும். இதற்கு முன் இதனைப் பயன்படுத்தவில்லை என்றால், முதலில் ஒரு எச்சரிக்கை விண்டோ காட்டப்படும். இதில் பயர்பாக்ஸ் வடிவமைப்பில் உள்ள பல அளவுகளை மாற்றும் வசதி தரப்பட்டுள்ளது. இருப்பினும் நமக்கு எது தேவையோ அதனை மட்டும் கையாள்வது நல்லது.
பில்டர் பார்மில் browser.tabs.tab என டைப் செய்திடவும். உடனே கீழ்க்காணும் அளவுகள் குறிக்கும் வரிகள் காட்டப்படும். browser.tabs.tabMaxWidth என்ற டேப் டேப் ஒன்றின் அதிக பட்ச அளவு எந்த மதிப்பில் உள்ளது என்று காட்டும். ஆனால், பயர்பாக்ஸ் நாம் அதனைப் பயன் படுத்துகையில், டேப்களின் அகலத்தினைத் தானாக மாற்றி அமைக்கும். இதே போல குறைந்த பட்ச அளவினை செட் செய்திட browser.tabs. tabMinWidth என்ற வரியில் வசதி உண்டு.
நீஙகள் கேட்டிருப்பது போல இணைய தளத்தின் பெவிகான் மட்டும் காட்டும்படி அமைக்க, குறைந்த பட்ச அளவாக 25 அமைத்தால் போதும். அல்லது இன்னும் குறைக்கலாம்.

கேள்வி: ஷேர்டு பைல்கள் என்று சொல்லப் படுபவை எவை? டி.எல்.எல். பைல்கள் இந்த வகையைச் சார்ந்தவையா? அவற்றை நாம் நேரடியாக இயக்கலாமா? -கா. சுகுமாரன், திருமுல்லைவாயில்.
பதில்: டி.எல்.எல். பைல் என்பது Dynamic Link Library பைல்களைக் குறிக்கிறது. இவை அனைத்தும் ஷேர்டு பைல்களே. ஆனால் ஷேர்டு பைல்கள் அனைத்தும் டி.எல்.எல். பைல்களாக இருக்காது. வேறு வகை பைல்களாகவும் இருக்கலாம். டி.எல்.எல். பைல்கள் என்பவை அடிப்படையில் குறிப்பிட்ட வகை சாப்ட்வேர் தொகுப்பு களுக்கான ஆதாரமாக உதவிடும் பைல்களாகும். புரோகிராம் ஒன்று ஒரு குறிப்பிட்ட பொதுவான பணியைச் செய்திட அதற்கான குறியீடுகள் அனைத்தும் அடங்கிய சிறிய புரோகிராமினை எழுதிட முடியாது. இது அனைத்து சாப்ட்வேர் தொகுப்புகளுக்கும் பொதுவான பணி என்பதால் இந்த பணியைச் செயல் படுத்தும் புரோகிராமினை ஒரு கட்டளை மூலம் அந்த சாப்ட்வேர் தொகுப்பில் அழைத்தால் போதும். எடுத்துக்காட்டாக, பைல்களைத் திறப்பது, சேவ் செய்வது போன்ற பொதுவான பணிகளைச் சொல்லலாம். இதனால் புரோகிராமிங் செய்வதற்கான நேரம், ஹார்ட் டிஸ்க் இடம் மிச்சமாகிறது. இத்தகைய பொதுவான பணிகளுக்கான பல டி.எல்.எல். பைல்கள் விண்டோஸ் இயக்கத்திலேயே உள்ளன.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் எடிட் செய்து மாற்றங்களை மேற்கொள்கையில், நாம் அன்றைய தேதியை திடீரென பேஸ்ட் செய்திட என்ன கட்டளை கொடுக்க வேண்டும்? -எஸ். கிளாடிஸ் மரியா,சென்னை.
பதில்: அது என்ன திடீரென என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். வேர்ட் ஆவணத்தில் எப்போது வேண்டு மானாலும், எங்கு வேண்டுமானாலும் அன்றைய தேதியை அமைக்கலாம். இதற்கு ALT+SHIFT+D கீகளை அழுத்தினால் போதும். அவ்வப்போது இந்த மலரில் வெளியிடப்படும் ஷார்ட் கட் கீகள் தொகுப்பினைப் பார்த்துப் பயன்படுத்தினால், இவை உங்கள் விரல் நுனியில் இருக்கும்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் டாஸ்க் பார் திடீரென மேலாகச் சென்று விட்டது. கர்சரைக் கொண்டு சென்று இழுத்தும் நகர மறுக்கிறது. என்ன செய்யலாம்? -கரு. முத்தையா, காரைக்குடி.
பதில்: கம்ப்யூட்டர் மானிட்டரில் வழக்கமாக டாஸ்க் பார் அடிப்பாகத்தில் தான் தெரியும். ஆனால் சில வேளைகளில் இது மேலாக அல்லது இடது வலது பக்கங்களில் சென்று அமர்ந்து விடும். நாம் எப்போதாவது விளைவு என்ன என்று தெரியாமல் மவுஸின் முனையைப் பிடித்தவாறு இந்த டாஸ்க் பாரில் செயல்பட்டிருப்போம். இதனை மீண்டும் அடிப்பாகத்தில் வைத்திட மீண்டும் மவுஸ் கர்சரை வைத்து கீழாக இழுத்து அமைக்கவும். நகராமல் இருந்தால் டாஸ்க் பாரில் வலது பக்கமாகக் கிளிக் செய்திடவும். அதில் வரும் மெனுவில் Lock the Taskbar என்ற இடத்தில் டிக் அடையாளம் உள்ளதா என்று பாருங்கள். இருந்தால் அதனைக் கிளிக் செய்து எடுத்து விடுங்கள். இனி டாஸ்க் பாரை நகர்த்தலாம். அடிப்பாகத்திற்கு வந்தவுடன் மீண்டும் மெனுவில் Lock the Taskbar என்ற இடத்தில் கிளிக் செய்து லாக் செய்துவிடுங்கள். இனி நகராது.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் பயர்பாக்ஸ் பிரவுசருடன், குரோம் பிரவுசரையும் இன்ஸ்டால் செய்துவிட்டார்கள். இரண்டை யும் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாமா? -ஜெயகோபால், மதுரை.
பதில்: தாராளமாக. எத்தனை பிரவுசரை யும் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். ஒன்றும் பிரச்னை ஏற்படாது.

கேள்வி: நார்மல் டெம்ப்ளேட் என எதனை அழைக்கின்றனர்? இதன் பயன் என்ன? -சி.கே.ராஜகோபால், பழநி.
பதில்: வேர்ட் தொகுப்பைத் தொடங்கும் போது புதிய டாகுமெண்ட் ஒன்று திறக்கப்பட்டு நம் பயன்பாட்டிற்கு தயாராக இருக்கிறது அல்லவா? இந்த செட் அப் தான் நார்மல் டெம்ப்ளேட் என அழைக்கப்படுகிறது. இதுதான் அனைத்து டாகுமெண்ட்களின் அடிப்படை ஸ்லேட்டாக இருக்கும். இதனை மாற்றினால் அடுத்து தயாராகும் புதிய டாகுமெண்ட்கள் அனைத்தும் மாற்றங் களுடன் கூடிய டெம்ப்ளேட்டையே புதிய நார்மல் டெம்ப்ளேட்டாக வைத்துக் கொள்ளும். இந்த நார்மல் டெம்ப்ளேட் பைல் நீங்கள் வேர்ட் தொகுப்பை இன்ஸ்டால் செய்த டைரக்டரியில் இருக்கும். இதனை நீங்கள் தெரியாமல் அழித்துவிட்டால் வேர்ட் தொகுப்பு புதிய நார்மல் டெம்ப்ளேட் பைல் ஒன்றை உருவாக்கிக் கொள்ளும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saranya - cbe,இந்தியா
21-பிப்-201111:52:01 IST Report Abuse
saranya நான் ஒரு கம்ப்யூட்டர் மலரில் இன்ஜினியரிங் ஸ்டுடென்ட் எங்கேனும் அச்சிடேன்ட் நடந்தா அது மொபிளில் பர்டிகுலர் பெர்சொனுக்கு இன்போர்ம் பனுமம் அதை படித்தேன் அந்த கட்டுரை patri detail தெரிந்து கொள்ள i am interest .சோ கிண்ட்லி சென்ட் தட்
Rate this:
Share this comment
Cancel
சிவா - திருப்பூர்,இந்தியா
18-பிப்-201122:21:51 IST Report Abuse
சிவா எனது வேர்ட் டாகுமெண்டில் லதா பான்ட் வேலை செய்ய மறுக்கிறது
Rate this:
Share this comment
Cancel
ARUL - chennai,இந்தியா
17-பிப்-201110:07:53 IST Report Abuse
ARUL போட்டோஷாப் பற்றி கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அதை பற்றி கூறுங்களேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X