இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2017
00:00

உறவுகள் மேம்பட, மொபைல் போன் வேண்டாமே!
தன் இல்லத் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க வந்திருந்தார், என் உறவினர். அழைப்பிதழில், 'தயவுசெய்து, அன்று ஒருநாள் மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள்...' என்று எழுதியிருக்கவே, 'என்ன இது... புதுசா இருக்கு...' என்றேன்.
அதற்கு அவர், 'கல்யாணத்திற்கு வர்றவங்க, சீட்டில் உட்கார்ந்து, மொபைல் போனை பாக்க ஆரம்பிச்சா, கல்யாணத்தைக் கூட பாக்காமல் அதிலேயே மூழ்கிப் போயிடுறாங்க. உறவுகள சந்திக்க கிடைக்கும் அந்த ஒரு நாள்ல கூட, இந்த போன் தேவையா... அதோட, கல்யாணத்தன்னைக்கு, குழந்தை களுக்கென்று விளையாட்டு போட்டி நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். பிள்ளைங்க, மொபைல் போனை துாக்கி எறிஞ்சுட்டு விளையாடணும்ன்னா, நாமும், மொபைல் போனை அளவா பயன்படுத்தணும்; முக்கியமான நிகழ்ச்சிகளின் போது கூட, மொபைல் போன் ஸ்கிரீனை முறைச்சுப் பாத்துட்டு இருக்கக் கூடாது...' என்றார்.
அவரின் யோசனை, மிகவும் சரியெனப் பட்டது.
திருமணத்தன்று, பெரும்பாலானோர், மொபைல் போன் எடுக்காமல் சென்றிருந்தோம். அதனால், ஒருவரை ஒருவர் கேலி கிண்டல் செய்து, சிரித்துப் பேசி மகிழ்ந்தோம். குழந்தைகள் ஓடியாடி விளையாடியது பார்ப்பதற்கே சந்தோஷமாக இருந்தது. அவசியம் என்று, மொபைல் போனை கொண்டு வந்த ஒரு சிலர் கூட, 'சுவிட்ச் ஆப்' செய்து, பேச்சில் கலந்து கொண்டனர்.
தனித் தனிக் குடும்பமாக வாழ்வதால், நெருங்கிய உறவுகள் தவிர, மற்ற துாரத்து உறவு முறைகள் எவருக்கும் தெரிவதில்லை. எல்லாரும் கூடும் இத்தகைய திருமண விழாக்களில், உறவுகளை அறிமுகப்படுத்தி, சொந்த பந்தங்களுடன் பேசி, மகிழலாமே... எங்களுக்கு அன்று கிடைத்த இன்பம், உங்களுக்கும் கிடைக்கும்!
— எம்.கவிதா, மதுரை.

சுவாமி படங்களை தவிர்க்கலாமே!
புத்தாண்டு காலண்டரில் சுவாமி படம் இருந்தால் சந்தோஷம் தான். ஆனால், அந்த ஆண்டு முடிந்ததும், சுவாமி படத்தை, குப்பை தொட்டியிலும், தெருவிலும் வீசி விடுகின்றனர். இது, மிகவும் தர்மசங்கடமாக உள்ளது. பூஜை அறையில் சுவாமி படத்தை வைத்து கும்பிட்டால் போதுமே... காலண்டரில் அச்சிட வேண்டுமா... அதற்கு பதில், இயற்கை காட்சிகள், பூக்கள் மற்றும் பறவைகள் படத்தை அச்சிட்டு விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கை வாசகங்களை இடம்பெற செய்யலாமே...
காலண்டர் தயாரிப்பாளர்கள், இயற்கை எழில் கொஞ்சும் படத்தை அச்சிட்டு, பார்ப்போர் கண்ணுக்கு விருந்தளிக்க முன்வருவரா?
— ஏ.ராஜகோபால், சென்னை.

ஆன்மா சாந்தியடைய, மதுவை தானமாக கொடுக்கலாமா?
கடந்த வாரத்தில் ஒருநாள், காய்கறி வாங்க கடை வீதிக்கு சென்றிருந்தேன். அப்போது, ஆட்டோவில் வந்த ஒருவர், அங்கிருந்த டாஸ்மாக் கடைக்கு வருவோரிடம், ஆட்டோவில் இருந்த மூட்டையிலிருந்து பாட்டில்களை எடுத்து வினியோகித்தார். பாட்டில்கள் தீர்ந்ததும், ஆட்டோவில் ஏறப் போனார்.
நான் அவரிடம், 'தம்பி... அவங்களுக்கு எல்லாம் ஏதோ ஜூஸ் பாட்டில் கொடுத்தீங்களே... அது என்ன?' என்று கேட்டேன். 'அது, ஜூஸ் இல்ல மேடம்... இது வேறே...' என்றார். புரிந்து கொண்ட நான், அவரிடம், 'எதற்கு இம்மாதிரி இலவசமாக மதுபானம் வழங்குறீங்க... ஏதாவது பிரார்த்தனையா...' என, வேடிக்கையாக கேட்டேன்.
அதற்கு அவர், 'என் தகப்பனார் மதுப் பிரியர்; அவர் இறந்துட்டார். வாழ்நாளில், அவர் அதிகம் விரும்பியது, மதுவைத் தான். மதுவிலக்கு அமலில் இருந்தபோது கூட, பர்மிட் வாங்கி குடிப்பார். இன்னைக்கு அவரது ஆண்டு திதி; இறந்து போனவருக்கு எது அதிக விருப்பமான பொருளோ, அதை, தானமாக கொடுத்தால், அவரது ஆன்மா சாந்தியடைந்து, அவரது ஆசி, அவரது சந்ததியினருக்கு கிடைக்கும்ன்னு பெரியவங்க சொன்னாங்க; அதுதான் அவர் மிகவும் விரும்பிய மதுவை தானமாக கொடுத்தேன்...' என்றார்.
'ஏன் சார் இப்படி அப்பாவியா இருக்கிறீங்க... யாரோ உங்களுக்கு தவறான அறிவுரை கொடுத்திருக்காங்க.. மது அருந்துவது, பஞ்சமா பாதகம்ன்னு சாஸ்திரம் சொல்லுது. சாஸ்திர விரோதமான காரியத்தை செய்தால், உங்க தந்தையோட ஆன்மா மட்டுமல்ல, மூதாதையரின் ஆன்மாவும் சாந்தி அடையாது. மாறாக, பித்ருக்களின் சாபம் தான் கிடைக்கும். திதி அன்னைக்கு, உங்களால் முடிஞ்ச அளவுக்கு ஏழைகளுக்கு சாப்பாடு போடுங்க; துணிமணிக எடுத்துக் கொடுங்க. ஏழை மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வாங்கிக் கொடுங்க. அந்த புண்ணியத்தால், உங்க தந்தையின் ஆத்மா சாந்தி அடைவதோடு, உங்க குடும்பமும் நல்லா இருக்கும்...' என்று அறிவுரை கூறினேன்.
அவர் நெகிழ்ந்து போய், 'தெரியாமல் செய்துட்டேன் அம்மா... நீங்க சொன்ன மாதிரியே செய்றேன்... ரொம்ப நன்றி...' என்று சொல்லி, போனார்.
என் வயது, 75; எனக்கும் ஒரு நல்ல காரியம் செய்த திருப்தி கிடைத்தது!
ஆர்.ராஜலட்சுமி, கோவிலம்பாக்கம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
07-ஜன-201800:23:09 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> மதுவிரும்பிக்கு ப்ரீத்தி படிச்சு மனம் வருந்தினேன், உடனே தெனாலிராமன் கதி நியாபகம் வந்துது, சிரிச்சுட்டேன் மன்னரின் வீட்டுலே நடந்த திதிக்கு செய்துவைக்க வந்த வைதீகர்கள் பேராசையுடன் தங்கத்துலே செய்த மாங்கனிகளை பெற்று சென்றனராம், அதுகண்ட தெனாலிராமன் தான் தந்தையின் திதி என்று அந்த பிராமணர்களை அளித்துள்ளான், அவாளும் நெறைய தக்ஷிணை கிட்டும் என்று பேராசையா வர திதி முடிச்சு சாப்பாடும் போட்டான் பிறகு ஒரு அறையின் வழியாக வெளியே செல்லவேண்டும் என்றான் அவாளுக்கு முதுகிலே பழுக்க காய்ச்சிய கம்பியால் சூடுபோட்டு கத்தாமல் போகணும் தன் தந்தையின் ஆன்மா சாந்திக்கு என்றும் சொல்லிட்டான் எல்லாரும் போயிட்டு மன்னரிடம் கூற மன்னர் ராமனைக் கூப்பிட்டு அனுப்பினார். வந்ததும் அவனிடம் எண்ணெய் காய்த்து என்றுகேட்க ராமனோ மாமன்னா உமக்கென்ன நீர் அரசர் வசதிகள் உண்டு நான் அப்படியா மரணப்படுக்கைலே என் அப்பாக்கு வலிப்புவந்துட்டுது வைத்தியன் சூடுபோடனும் என்கிறார் அதற்குள்ள என் அப்பா இறந்துட்டார் அதனால் தான் இப்படி செய்தென் என்றான், உங்கம்மா மாங்கனி கேட்டார் ஆனால் என் அப்பாவோ??? என்றதக்கேட்க மன்னர் சிரிச்சுட்டார் பிராமனா தன்னை ஏமாற்றியதும் தெரிஞ்சுண்டார்
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
07-ஜன-201800:14:06 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> mobile onnam nambar avadhi, calenderkalile koodiyavarai swaamipadangkal vendaam thoolkki eriya manam varaleengka kashtamaairukku kumbitum kadavulai avamadhikkuraapola thonuthu
Rate this:
Share this comment
Cancel
anbu - CARY,யூ.எஸ்.ஏ
05-ஜன-201800:53:25 IST Report Abuse
anbu முதல் கடிதம் :அதை மணமக்களிடமும் சொல்லி வையுங்கள். அவர்கள் தான் செலிபி எடுத்து பாடாய் படுத்துவர். இரண்டாம் கடிதம்: சுவாமி படம் காலண்டர் தான் அழகு. அவற்றை கீழே போடாமல் வீட்டில் அடுக்கி வைக்கலாமே. மூன்றாம் கடிதம்: அவர் டாஸ்மாக் கடையில் நின்றவருக்கு தானே கொடுக்கிறார். உங்களுக்கு என்ன பிரச்சனை? அவருக்கு பட்டதை செய்கிறார். அசைவம் படைப்பதும் தவறு என்று சொல்வீரோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X