சுற்றிப்பார்க்கும் வசதிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2017
00:00

பாரம்பரியத்தை பறைசாற்றும் பாரிஸ் நகரை, நாள் முழுவதும் சுற்றித்தீர்த்தாலும் அலுக்காது; அதற்கு, நேரமும் போதாது. இதனால் தான், அங்குள்ள நிறுவனங்கள் பல்வேறு வகையான, சுற்றிப்பார்க்கும் வாகனங்களை அளிக்கின்றன.
சர்வதேச ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால், கார்களையோ அல்லது மோட்டார் சைக்கிள்களையோ வாடகைக்கு எடுத்துச் செல்லலாம். (அங்கு ஹாரன் அடிப்பது தடை செய்யப்பட்டுள்ள என்பதை அறிக. இத்தகைய சாலை விதிமுறைகளை வெப்சைட்கள் மூலம் அறிந்து கொண்டு, அதற்கேற்ப பயணத்தை முடிவு செய்யலாம்) 6 - 7 பேர் வரை குழுவாக செல்வோர், அதற்கேற்ப கேப்களை, ஆங்கில மொழியில் விளக்கும் வழிகாட்டிகளுடன் வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம்.
இதைத் தவிர, ஒரு வழிகாட்டியே, உங்களை மோட்டார் சைக்கிளில் அமர்த்திச் சென்று சுற்றிக்காட்டுகிறார். இரண்டு அடுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலடுக்கு மூடப்படாத பஸ்களும், மூடப்பட்ட பஸ்களும் குறிப்பிட்ட இடங்கள் வழியாக 20 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை சுற்றுலா பயணிகளை அழைத்துச்செல்கின்றன. சற்றே வசதி படைத்தவர்கள், கதகதப்பான மாடி பஸ்களில் முன்பதிவு செய்து, மதிய உணவை ருசித்தபடியோ அல்லது இரவு உணவை சுவைத்தபடியோ நகரை வலம் வரலாம்.
பாரிஸ் நகரம், நதிக்கரையில் அழகுற அமைக்கப்பட்டுள்ள நகரம் என்பதால், படகுகளிலும் சுற்றுலா செல்லலாம். வசதி படைத்தவர்கள், இத்தகைய படகு வீடுகளிலும், நதியின் ஓட்டத்தில் வளையவந்து, நகரை ரசிக்கலாம்.
இவை தவிர, நகர் முழுவதும் பஸ்கள் இயக்கப்படுகின்றன; 14 தடங்களில் மெட்ரோ ரயில்களும் செல்கின்றன. பஸ்கள் இரவு 10:00 மணி - அதிகாலை 6:00 மணிக்கு இடையிலும், மெட்ரோ ரயில்கள் நள்ளிரவு 1:00 மணி - அதிகாலை 5:00 மணி வரை நிறுத்தப்படுகின்றன.
பாரிஸ் நகரின் வரைபடங்கள், பஸ் மற்றும் மெட்ரோ ரயில்களின் வழித்தடங்களுடன் கிடைக்கின்றன. இவற்றின் துணையுடன், யார் வழிகாட்டுதலும் இல்லாமல், நகரின் இக்கரை முதல் அக்கரை வரை சென்று வரலாம்; விரும்பும் இடத்தில் இறங்கி, ஏறி, திகட்ட திகட்ட பாரிஸ் நகரின் அழகையும், உணவு வகைகளையும் ருசிக்கலாம்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X