பார்க்க வேண்டிய இடங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2017
00:00

பாரிஸ் நகரின் ஒவ்வொரு அங்குலமும், அந்நாட்டின் சரித்திரம் கூறுகிறது. 1889ல் கட்டி முடிக்கப்பட்டு, இன்றும் உலகப்புகழுடன் திகழும் ஈபிள் டவர், லியானார்டோ டா வின்சியின்.
'மோனலிசா' உள்ளிட்ட விலைமதிக்க முடியாத பண்டைய ஓவியங்கள் இடம் பெற்றுள்ள, லுாவர் அரண்மனை மியூசியம், பிரெஞ்சு புரட்சி மற்றும் நெப்போலியனின் போர்களில் பங்கெடுத்து மரணமடைந்த வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்ட டிரயம்பல் ஆர்ச்...
'நாட்ர டேம்' கத்தோலிக்க மாதா பேராலயம், 21.3 ஏக்கரில் விரிந்துள்ள கண்கார்டு சதுக்கம், அதன் இன்னொரு பகுதியில் தனித்துவம் மிக்க ஓவியங்கள் நிறைந்த லொரன்ஸரி மியூசியம், மற்றொரு புறத்தில் உள்ள டைலரி தோட்டம், 1612ம் ஆண்டு, நான்காம் ஹென்ரியின் விதவை மனைவி, மேரி டி மெடிஸி கட்டிய லக்ஸம்பர்க் அரண்மனை, புனித -ஜீன்வீயெவ் நினைவாக அமைக்கப்பட்ட பாந்தியன் தேவாலயம்.
கிராண்ட் பேலஸ் என்றழைக்கப்படும், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மிகப்பெரிய அரண்மனை, அதில் உள்ளடங்கிய படக் காட்சியகம், அருங்காட்சியக வளாகம், புகழ்பெற்ற சிற்ப கலைஞர் அகஸ்டி ரோடின் கைவண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில், 1919ம் ஆண்டு துவக்கப்பட்ட ரோடின் மியூசியம்.
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிகாசோவின் ஓவியங்கள் இடம் பெற்றுள்ள பிகாசோ மியூசியம், 1670ம் ஆண்டு போரின் போது உடல் ஊனமுற்ற, முதிய வீரர்களுக்காக, 14ம் லுாயி மன்னரால் கட்டப்பட்ட 'இன்வேலிட்ஸ்' அருங்காட்சியகத்தையும், ஈபிள் டவரையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்ட மிக அழகிய பிரஞ்சு வரலாற்றுச் சின்னமான, பான்ட் அலெக்சாண்டிரி பாலம்.
பிரான்ஸ் மக்களுக்கு, 1889ம் ஆண்டில் பாரிஸில் வசிக்கும் அமெரிக்கர்களால் வழங்கப்பட்ட சுதந்திரதேவி சிலையின் பிரதி, பிரான்ஸ் நாட்டின் தேசிய சபை, கண்கவர் தங்க நிற சிற்ப, ஓவிய வேலைப்பாடுகள் கொண்ட பாரிஸ் ஒபரா, அதனுள் அமைந்துள்ள பிரமாண்டமான பாலே நடனக்கூடம், நெப்போலியன் போனபர்ட்டின் நினைவிடம், ராணுவ அருங்காட்சியகம், உச்சநீதிமன்றம் என, பாரிஸ் நகர் முழுவதும் விரிந்து, பரந்திருக்கிறது, பிரான்சின் வரலாறும், பாரம்பரியமும்!
ஒவ்வொரு அங்குலமும் வரலாறு கூறும் மண்ணாக இருப்பதுடன், பிரத்யேக கட்டிடக்கலையை நகர் முழுவதும் ஒரே பாணியில் கடைப்பிடித்திருப்பது, பாரிஸ் நகரின் சிறப்பு.
பாரிஸ் செல்லும் முன், எந்த இடங்களுக்கு செல்லலாம் என்பதை, முன்கூட்டியே திட்டமிட உதவுகிறது, https://en.parisinfo.com இணையதளம்.

தேவையான பயண ஆவணங்கள்
* பாஸ்போர்ட்
* விசா - சென்னை, புதுச்சேரி உள்பட, 13 நகரங்களில் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். அதிகபட்சம் ஆறு வேலை நாட்களில் விசா கிடைக்கும். விசா மூலம் 90 நாட்கள் பிரான்ஸ் மற்றும் ஷெங்கென் விசா செல்லுபடியாகும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வர முடியும்; பிரிட்டனுக்கு மட்டும் இந்த விசா செல்லுபடியாகாது.
* பயண காப்பீடு - குறைந்தபட்சம் 30 ஆயிரம் யூரோவுக்கு குறையாத பயணக்காப்பீடு அவசியம்.

விமான வசதி
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், சமீபத்தில் சென்னை - பாரிஸ் இடையே நேரடி விமான சேவையை துவக்கியுள்ளது. சென்னையில் இருந்து பாரிஸ் சென்றடைய பயண நேரம்: 11 மணி; பாரிஸ் நகரில் இருந்து சென்னைக்கு பயண நேரம்: 9:30 மணி இந்தியாவுக்கும், பிரான்ஸ் நாட்டுக்கும் நேர வித்தியாசம்: 4:30 மணி

எத்தனை நாட்கள்
செங்கன் விசா மூலம், பிரிட்டன் நீங்கலாக, ஐரோப்பிய யூனியனில் உள்ள ௨௬ நாடுகளில், 90 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம்.
பாரிஸ் நகரை பொருத்தவரை, குறைந்த பட்சம் மூன்று நாட்களில், அவசரமாக சுற்றிப்பார்த்து திரும்பலாம். அவரவர் வசதியை பொறுத்து, 5, 7 நாட்கள் என, எப்படி வேண்டுமானாலும் சுற்றுப்பயணத்தை திட்டமிடலாம்.
எங்கு செல்ல போகிறோம் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து, மியூசியம், ஓபரா ஹால், சிட்டி ரைடு போன்றவற்றுக்கு முன்பதிவு செய்து கொள்வது உத்தமம். இப்போது, ஆன் - லைன் முன்பதிவு வசதி இருப்பதால், துல்லியமாக திட்டமிட்டு பயணம் செல்வது சுலபம்.

எச்சரிக்கை!
பாரிஸ் நகரம் பாதுகாப்பான சுற்றுலா தலம். குற்றங்கள் மிகக்குறைவு. 24 மணி நேரமும், போலீசார் ரோந்து வருகின்றனர். பகல் நேரங்களில், சில அடி துாரங்களுக்கு ஒரு முறை, போலீசாரை பார்க்கலாம். ஆனாலும், இங்கு மலிவான குற்றங்களில் ஒன்று, பிக் - பாக்கெட். அத்தியாவசியமான அனைத்து ஆவணங்களையும் ஹோட்டல்களில் பாதுகாப்பாக வைத்துவிட்டு, வெளியில் செல்வதே நல்லது. நகரை சுற்றிப்பார்க்கும் போதும், ஷாப்பிங் செய்யும் போதும், கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள், தேவைப்படும் யூரோ கரன்சியுடன் மட்டுமே செல்வது உகந்தது; திருடப்பட்டாலும், பெரிய இழப்பின்றி தப்பலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X