இந்தியா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2018
00:00

ஜனவரி
ஜன. 3: திருப்பதியில் நடந்த 105வது அறிவியல் காங்கிரஸ் மாநாட்டை பிரதமர் மோடி துவக்கினார்.
ஜன. 4: டி.எஸ்.தாக்கூர் ஓய்வைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜகதீஷ் சிங் கெஹர் பதவியேற்பு.
* உ.பி., உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஜன. 5: ஆந்திராவில் நோபல் பரிசு பெறுபவர்களுக்கு 100 கோடி ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு.
ஜன. 6: இந்தியா வந்த போர்ச்சுகல் பிரதமர் அந்தோனியோ கோஸ்டா பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஜன. 11: பிரதமர் மோடி - கென்ய அதிபர் உருக்கென்யாட்டா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. கென்யாவுக்கு ரூ.683 கோடி நிதியுதவி.
ஜன. 12: மும்பையில் ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பல் 'காந்தேரி' அறிமுகம்.
* டாடா சன்ஸ் குழும தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் தேர்வு.
ஜன. 13: முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜ., முன்னாள் எம்.பி.,யுமான சித்து, காங். கட்சியில் இணைந்தார்.
ஜன. 18: மான்கள் வேட்டையாட துப்பாக்கி வைத்திருந்தாக தொடரப் பட்ட வழக்கில் நடிகர் சல்மான் விடுதலை.
ஜன. 19: இமாச்சலின் 2வது தலைநகராக தர்மசாலா அறிவிப்பு.
* சி.பி.ஐ., புதிய இயக்குநராக அலோக் வர்மா பொறுப்பேற்பு.
ஜன. 21: குஜராத்தில் ஒரே நேரத்தில் 5 லட்சம் பேர் தேசிய கீதம் பாடி கின்னஸ் சாதனை.
ஜன. 27: பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக மேகாலயா கவர்னர் சண்முநாதன் ராஜினாமா.
ஜன. 28: கர்நாடக முன்னாள் முதல்வர், மத்திய அமைச்சராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரசிலிருந்து விலகல்.
தபால் வங்கி ஜன. 30: நுாற்றாண்டு பாரம்பரியம் மிக்க இந்திய தபால் துறை, வங்கித்துறையில் நுழைந்தது. மத்திய நிதியமைச்சர் ஜெட்லி துவக்கினார். முதல்கட்டமாக சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூர் மற்றும் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பேமென்ட் வங்கிக் கிளைகள் தொடக்கம்.

பிப்ரவரி
பிப். 1 : 2017 - 18 பட்ஜெட்டை அருண் ஜெட்லி தாக்கல். ரயில்வே பட்ஜெட்டும் சேர்ப்பு.
பிப். 8: 100க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற உலக அணுஆயுத பாதுகாப்பு மாநாடு டில்லியில் நடந்தது.
பிப். 10: செபி அமைப்பின் தலைவராக அஜய் தியாகி பொறுப்பேற்பு.
* நாட்டின் முதல் பெண்கள் பார்லிமென்ட் தொடர்பான கருத்தரங்கம், ஆந்திராவின் அமராவதியில் நடந்தது.
பிப். 11: ஏவுகணைகளை வழிமறித்து தாக்கும் பிரித்வி ஏவுகணை ஒடிசாவில் வெற்றிகரமாக சோதனை.
பிப். 13: புனேயின் பிரசாத் எராண்டே, நாடு முழுவதும் 14,576 கி.மீ., துாரம் சைக்கிள் பயணம் செய்து கின்னஸ் சாதனை.
* இந்தியாவின் முதல் மிதக்கும் பள்ளி மணிப்பூரில் உள்ள லோக்டாக் ஏரியில் அமைக்கப்பட்டது
பிப். 15: ஒரே ராக்கெட்டில் அதிக செயற்கைக்கோள்களை அனுப்பி இஸ்ரோ உலக சாதனை. பி.எஸ்.எல்.வி., - சி37 ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டன.
பிப். 16: உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக 5 நீதிபதிகள் நியமனம்.
பிப். 20: வாரத்துக்கு ரூ. 50 ஆயிரம் வரை பணம் எடுத்துக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி.
பிப். 28: விமானங்களைப் போல, ஹெலிகாப்டர்களை இயக்கும் வகையில் இந்தியாவின் முதல் ஹெலிபோர்ட் டில்லியில் திறக்கப்பட்டது.

மார்ச்
மார்ச் 3: தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் போராட்டம்.
மார்ச் 5: நாட்டின் உயரமான தேசியக்கொடி கம்பம் (360 அடி), அட்டாரி - வாகா எல்லையில் நிறுவப்பட்டது.
மார்ச் 6: இந்தியாவின் பழமையான விமானம் தாங்கி கப்பலான 'ஐ.என்.எஸ்.விராட்' கப்பல்படையில் இருந்து விடுவிப்பு.
மார்ச் 10: நாட்டின் முதல் 'ஏசி' ரயில் ஆம்புலன்ஸ் மும்பையில் துவக்கம்.
யோகிக்கு யோகம் மார்ச் 11: உ.பி., சட்டசபை தேர்தலில் 325ல் வென்று பா.ஜ., கூட்டணி சாதனை. சமாஜ்வாடி 47, பகுஜன் சமாஜ் 19, காங்., 7 தொகுதிகளில் வென்றன. முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றார். துணை முதல்வர்களாக கேசவ் பிரசாத் மயூரா, தினேஷ் சர்மா பதவியேற்றனர்.
மார்ச் 13: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மனோகர் பரீக்கர் ராஜினமா.
மார்ச் 16: கோவாவில் மனோகர் பரீக்கர் அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி.
சிங் தான் 'கிங்' மார்ச் 16: பஞ்சாப் தேர்தலில் 117ல் 77ல் வென்று காங்., ஆட்சியை பிடித்தது. அமரிந்தர் சிங் முதல்வரானார். 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அகாலிதளம் - பா.ஜ., கூட்டணி படுதோல்வி.
மார்ச் 18: முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ரயில் 'மேதா', மும்பையில் துவக்கம்.
மலர்ந்தது 'தாமரை' மார்ச் 18: உத்தரகண்ட்டில் 70 தொகுதிகளில் 57ல் பா.ஜ., வென்றது. திரிவேந்திர சிங் முதல்வரானார். கோவா, மணிப்பூரில் கூட்டணி அமைத்து பா.ஜ., ஆட்சியைப் பிடித்தது. கோவா முதல்வராக மனோகர் பரீக்கர், மணிப்பூர் முதல்வராக பைரன் சிங் பதவியேற்பு.
மார்ச் 19: அரசு வேலையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, பஞ்சாப் சட்டசபையில் நிறைவேற்றம்.
மார்ச் 22: யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் ஆமதாபாத், டில்லி, ஜெய்ப்பூர், புவனேஸ்வர், மும்பை இடம் பெற்றன.
'பை-பை' பி.எஸ்.,3 மார்ச் 31: நாடு முழுவதும் பி.எஸ்., 3 இன்ஜின்கள் கொண்ட இரு சக்கர வாகனங்கள் விற்பனையை நிறுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு. இதையடுத்து தள்ளுபடியில் விற்கப்பட்ட இந்த வாகனங்களை வாங்க, கடைசி நாளில் மக்கள் கூட்டம் ஷோரூம்களில் அலைமோதின.

ஏப்ரல்
ஏப். 1: ஐந்து துணை வங்கிகள், பாரதிய மகிளா வங்கி, ஆகியவை ஸ்டேட் வங்கியுடன் இணைப்பு.
* மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் இந்தியா வருகை.
ஏப். 2: காஷ்மீரில் நாட்டின் நீளமான சுரங்கப்பாதையை (9.2 கி.மீ.,), பிரதமர் மோடி துவக்கினார்.
ஏப். 3: கறுப்பு பண மோசடி வழக்கில் இமாச்சல் முதல்வர் வீரபத்ரசிங்கின் 27 கோடி ரூபாய் சொத்தை அமலாக்கத்துறை முடக்கியது.
ஏப். 7: தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த நடிகர் விருது அக் ஷய் குமாரும், சிறந்த நடிகை விருது சுரபி லட்சுமியும் பெற்றனர்.
* காஷ்மீரின் காக்ரிபால் பகுதியில் நிலச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் பலி.
ஏப். 8: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வருகை. இரு நாடுகள் இடையே 22 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஏப். 9: ஆஸி., பிரதமர் மால்கால்ம் டர்ன்புல் இந்தியா வருகை.
தெய்வீக குரல் ஏப். 13: பத்ம விருதுகள் 89 பேருக்கு வழங்கப்பட்டன. இதில் கேரளாவைச் சேர்ந்த பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாசுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.
ஏப். 15: ஸ்ரீநகர் லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் பரூக் அப்துல்லா வெற்றி
ஏப். 17: நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி இந்தியா வருகை.
தீராத தலைவலி ஏப். 19: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோரை 2001ல் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. 2010ல் அலகாபாத் ஐகோர்ட் உறுதி செய்தது. இதை எதிர்த்து சி.பி.ஐ., தாக்கல் செய்த வழக்கில், மீண்டும் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு.
நக்சல் அட்டூழியம் ஏப். 24: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் ரோந்து சென்ற சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது, நக்சல் இயக்கத்தினர் கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் சிக்கி 26 வீரர்கள் பலியாகினர். இதில் மூன்று பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
ஏப். 26: டில்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி.
ஏப். 27: அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது.
* சிறு நகரங்களை பெரிய நகரங்களுடன் இணைக்கும் 'உடான்' திட்டத்தை பிரதமர் துவக்கினார்.

மே
மே 1: நாட்டில் ஜனாதிபதி, பிரதமர், தலைமை நீதிபதி என அனைத்து வி.ஐ.பி.களின் கார்களில் இருந்து சிவப்பு விளக்கு அகற்றம்.
* ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா அஞ்சல் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.
மே 4 : 2017ல் துாய்மையான நகரங்களில் ம.பி.,யின் இந்துார் முதலிடம். திருச்சி 6வது இடம்.
இந்தியாவின் கொடை மே 5: 'ஜிசாட் - 9' தெற்காசிய செயற்கைக்கோளை, இஸ்ரோ விண்ணில் ஏவியது. பாக்., தவிர்த்து, இலங்கை, நேபாளம், பூடான், வங்கதேசம், ஆப்கன், மாலத்தீவு ஆகிய தெற்காசிய நாடுகள் பயன்பெறும்.
துாக்கு உறுதி மே 5: டில்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் 2014ல் டில்லி உயர்நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது. மேல்முறையீடு வழக்கில் 4 பேருக்கும் மரண தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
மே 8: கால்நடை தீவன ஊழல் வழக்கில், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீது விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
மே 11: பிரதமர் மோடி இலங்கை பயணம்.
மே 13: பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் இந்தியா வருகை.
மே 18 : இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷண் ஜாதவை, துாக்கிலிட பாகிஸ்தானுக்கு, சர்வதேச கோர்ட் தடை.
மே 21: இரண்டாம் உலகப்போரில் பலியான ஜப்பான் வீரர்களுக்கு, மணிப்பூரில் நினைவுச்சின்னம் அமைப்பு.
மே 22 : விரைவு ரயில் 'தேஜஸ் எக்ஸ்பிரஸ்' மும்பை - கோவா இடையே துவக்கம்.
மே 25: மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்தப்பினார்.
மே 26: பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே நாட்டின் நீளமான (9.15 கி.மீ.,) பாலத்தை, பிரதமர் மோடி துவக்கினார். இது அசாமின் தோலா - அருணாச்சலின் சாதியா பகுதிகளை இணைக்கிறது.
மே 27: மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு.
மே 29: பிரதமர் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், ரஷ்யாவுக்கு பயணம்.

ஜூன்
ஜூன் 4 : முதன்முறையாக அதிக எடையை தாங்கி செல்லும் ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3 ராக்கெட் மூலம், ஜிசாட் - 19, செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
ஜூன் 11: நாட்டின் முதல், நீருக்கு அடியில் 502 மீட்டர் துார, சுரங்க ரயில் கோல்கட்டாவில் திறப்பு.
ஜூன் 9: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா உறுப்பினரானது.
ஜூன் 15: மும்பையில் 1993ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், அபு சலேம் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என தடா நீதிமன்றம் தீர்ப்பு.
ஜூன் 17: கொச்சியில் 13 கி.மீ., நீளமுள்ள மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
ஜூன் 19: மத்திய பிரதேசத்தின் இந்துாரில் நாட்டின் முதல் ரோபோ டிராபிக் கன்ட்ரோல் நிறுவப்பட்டது.
* இஸ்ரோ செவ்வாய்க்கு 2014 செப்., 24ல் அனுப்பிய மங்கள்யான் விண்கலம், ஆயிரமாவது நாள் நிறைவு.
ஜூன் 23: பி.எஸ்.எல்.வி. சி38 ராக்கெட்டில் 31 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.
ஜூன் 24: பிரதமர் மோடி போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர் லாந்துக்கு நான்கு நாள் பயணம்.
ஜூன் 29: இஸ்ரோவின் ஜிசாட்-17 செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவின் ஏரியன் ராக்கெட் மூலம் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

ஜூலை
ஜூலை 1: இந்தியாவின் முதல் வாக்காளர் சியாம் சரண் நெகி, நுாறு வயதை கடந்தார்.
ஜூலை 3 : மத்திய அரசின் புதிய அட்டர்னி ஜெனரலாக வேணுகோபால் நியமனம்.
ஜூலை 4: இஸ்ரேல் சென்ற முதல் இந்திய பிரதமர் மோடிக்கு வரவேற்பு.
* மகாராஷ்டிரா, நர்மதா நதிக் கரையில் 12 மணி நேரத்தில் 6.63 கோடி மரக்கன்றுகளை நட்டு கின்னஸ் சாதனை.
ஜூலை 5: தலைமை தேர்தல் ஆணை யராக ஏ.கே.ஜோதி பொறுப்பேற்பு.
ஜூலை 10: காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை பக்தர்கள் மீது லக்சர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிசூட்டில் 7 பேர் பலி.
ஜூலை 19: நாகாலாந்து முதல்வராக ஜிலியாங் பொறுப்பேற்பு.
ஜூலை 23: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பார்லிமென்ட்டில் பிரிவு உபசார விழா.
ஜூலை 25: பா.ஜ., சார்பில் வெற்றி பெற்று 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு. 13வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு ஆக.,11ல் பதவியேற்பு.
'சபாஷ்' நிதிஷ் ஜூலை 26: ஊழல் குற்றச்சாட்டில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், பதவி விலக மறுப்பு. முதல்வர் நிதிஷ் ராஜினாமா செய்தார். மறுநாளே பா.ஜ., ஆதரவுடன் மீண்டும் முதல்வரானார். துணை முதல்வராக பா.ஜ.,வின் சுஷில்குமார் மோடி பதவியேற்பு.
ஜூலை 29: உலகின் சிறிய (3.5 செ.மீ x 3.5 செ.மீ அளவு), 'ஸ்பிரிட்ஸ்' என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவியது. இதன் எடை வெறும் 4 கிராம்.
ஜூலை 30: டி.ஆர்.டி.ஓ., நாட்டின் முதல் ஆளில்லா பீரங்கியை அறிமுகப்படுத்தியது.

ஆகஸ்ட்
ஆக. 4: இந்தியாவில் முதல்முறையாக ஹெலிகாப்டர் டாக்சி சேவை பெங்களூருவில் தொடக்கம்.
ஆக. 9: 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் 75 ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
ஆக. 11: சென்சார் போர்டு புதிய தலைவராக பிரசுன் ஜோஷி நியமனம்.
ஆக. 14: இமாச்சலில் மாண்டி மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி 46 பேர் பலி.
ஆக. 16: இந்தியாவில் 27,312 யானைகள் உள்ளன. முதலிடத்தை கர்நாடகா (6,049) பெற்றது.
ஆக. 17: பஞ்சாபின் அமிர்தசரசில் 'இந்தியா - பாக்., பிரிவினை மியூசியம்' திறக்கப்பட்டது.
ஆக. 19: ஒடிசா - உ.பி., சென்ற உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 23 பேர் பலி.
இந்திய தயாரிப்பு ஆக. 21: முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட 'ஐ.என்.எஸ்., - கல்வரி' நீர்மூழ்கி போர்க்கப்பல் கப்பல்படையில் சேர்ப்பு. நீளம் 202 அடி. மணிக்கு 37 கி.மீ., வேகத்தில் செல்லும். 1,150 அடி ஆழத்தில் செல்லும்.
ஆக. 22: முஸ்லிம்களின் 'முத்தலாக்' முறை அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு.
ஆக. 24: 'தனிநபர் சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை' என ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
ஆக. 25: குஜராத்தில் இருந்து பா.ஜ., தலைவர் அமித்ஷா, ஸ்மிருதி இரானி, காங்கிரசின் அகமது படேல் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு.
* புதிதாக 200 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகம்.
ஆக. 28: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா
'டோக்லாம்' பதற்றம் ஆக. 28: இந்தியா, பூடான், சீனா எல்லைகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில், சீனாவின் சாலை அமைக்கும் பணியை, இந்திய ராணுவம் தடுத்தது. இதனால் இரு நாடுகளும் படைகளை குவித்தன. போர் பதற்றம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தைக்குப் பின், படைகள் வாபஸ்.
'மாமியார் வீட்டில்' சாமியார் ஆக. 28: ஹரியானாவின் சிர்சாவை தலைமையகமாகக் கொண்ட 'டேரா சச்சா சவுதா' அமைப்பின் தலைவர் ராம் ரகித் சிங். 2002ல் பெண் பக்தர்கள் தொடர்ந்த வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையில் 37 பேர் பலி. பொதுச்சொத்துக்கள் சேதம்.
பதவியேற்பு. ஆக. 31: சி.பி.எஸ்.இ., புதிய தலைவராக அனிதா கர்வால் நியமனம்.
* தெற்கு மும்பையில் 117 ஆண்டு பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் 22 பேர் பலி.
* பி.எஸ்.எல்.வி., சி39 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்திய ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எச் செயற்கைக்கோள் தோல்வி. 24 ஆண்டுகளுக்குப்பின், பி.எஸ்.எல்,.வி., ராக்கெட் தோல்வி.

செப்டம்பர்
செப். 1: 'நிதி ஆயோக்' துணை தலைவராக ராஜிவ் குமார் நியமனம்.
* இந்திய தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பொறுப்பேற்பு.
செப். 3: மத்திய அமைச்சரவை 3வது முறையாக மாற்றம். 9 பேர் புதிதாக சேர்ப்பு.
* பிரதமர் மோடி சீனா மற்றும் மியான்மருக்கு பயணம்.
நிகரில்லா நிர்மலா செப். 3: இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத்துறை அமைச்சராக தமிழகத்தின் நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்பு. இதற்கு முன் வர்த்தக இணையமைச்சராக இருந்தார்.
செப். 5: பெங்களூருவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை.
செப். 8: ஆந்திராவின் விஜயவாடா - அமராவதி இடையே 'ஹைபர்லுாப்' ரயில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
செப். 10: கடற்படை வீராங்கனைகள் 6 பேர், 'ஐ.என்.எஸ்.வி., தாரிணி' கப்பலில் 165 நாள் உலகம் சுற்றும் பயணத்தை கோவாவில் துவக்கம்.
செப். 25: குஜராத்தில் உள்ள கன்ட்லா துறைமுகம், தீன்தயாள் துறைமுகம் என பெயர் மாற்றம்.
செப். 28: பெங்களூரு மாநகராட்சி மேயராக சம்பத் ராஜ் பதவியேற்பு. இப்பொறுப்பை ஏற்கும் நான்காவது தமிழர்.
செப். 29: மும்பை புறநகர் ரயில்நிலைய மேம்பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலி.

அக்டோபர்
அக். 3: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முதல் வெளிநாட்டு பயணமாக, ஆப்ரிக்கா நாடான ஜிபூட்டி பயணம்.
அக். 4: ஸ்டேட் வங்கியின் புதிய தலைவராக ரஜ்னிஷ் குமார் பொறுப்பேற்பு.
அக். 11: இந்திய திரைப்பட, தொலைக்காட்சி கல்லுாரி தலைவராக, நடிகர் அனுபம் கெர் நியமனம்.
தொடரும் மர்மம் அக். 12: மாணவி ஆருஷி மற்றும் பணியாளர் ஹேம்ராஜ் கொலை வழக்கில் அவரது பெற்றோர் ராஜேஸ் தல்வர் - நுபுர் தம்பதியினருக்கு 2013ல் காசியாபாத் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில், அவர்களை அலகாபாத் உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.
அக். 16: நீர்மூழ்கி கப்பலை தாக்கும் திறன் கொண்ட ஐ.என்.எஸ். கில்டான் போர்க்கப்பல், விசாகப்பட்டினத்தில் நாட்டுக்கு அர்ப்பணிப்பு.
குறையும் நேரம் அக். 22: குஜராத்தில் கோகா - தஹேஜ் பகுதியை இணைக்கும் படகு சேவையை பிரதமர் மோடி துவக்கினார். இதனால் பயண துாரம் 360கி.மீ.,ல் இருந்து 31 ஆகவும், நேரம் 8ல் இருந்து 1 மணி நேரமாக குறையும்.
அக். 24: இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியின் சி.இ.ஓ., வாக சுரேஷ் சேதி நியமனம்.
அக். 24: ஆப்கன் அதிபர் அஷ்ரம் கானி இந்தியா வருகை.
அக். 29: இத்தாலி பிரதமர் பாவலோ ஜென்டிலோனி இந்தியா வருகை
அக். 31: தொழில் துவங்குவதற்கு எளிதான சூழல் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 30 இடங்கள் முன்னேறி, 100வது இடத்தை பெற்றது.
* பூடான் மன்னர் ஜிக்மே கேசர் இந்தியா வருகை.

நவம்பர்
நவ. 1: உ.பி., யில் தேசிய அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்ததில் 43 பேர் பலி.
நவ. 2: காஷ்மீரின் லடாக் பகுதியில் 19,300 அடி உயரத்தில் சாலை அமைத்து சாதனை.
நவ. 4: 'உலக உணவு இந்தியா' நிகழ்ச்சியில், 918 கிலோ கிச்சடி செய்து கின்னஸ் சாதனை.
நவ. 6: முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீண்ட துார இலக்கை தாக்கும் 'நிர்பயா ஏவுகணை' வெற்றிகரமாக சோதனை.
நவ. 8: பணமதிப்பிழப்பு அறிவிப்பின் ஓராண்டு நிறைவை, மத்திய அரசு கறுப்பு பண ஒழிப்பு தினமாக அனுசரித்தது.
நவ. 10: ஜி.எஸ்.டி.,யில் 178 விதமான பொருட்கள், 28 சதவீதத்தில் இருந்து, 18 சதவீத வரியாக குறைப்பு. 50 விதமான பொருட்கள் மட்டுமே 28 சதவீத வரியில் உள்ளது.
நவ. 12: ஆந்திராவில் விஜயவாடா அருகில் கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்ததில் 21 பேர் பலி.
நவ. 15: நிகர்நிலை பல்கலைகள் இனி, பல்கலை என்ற பெயரை, கட்டாயமாக பயன்படுத்தக் கூடாது' என, யு.ஜி.சி., உத்தரவு.
நவ. 21: 'பத்மாவதி' திரைப் படத்துக்கு எதிர்ப்பு காரணமாக ம.பி., குஜராத், பீகாரில் தடை.
இந்தியாவுக்கு பெருமை நவ., 22: சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்தியாவின் தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்வு. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான இவர், 2027 வரை இப்பதவியில் இருப்பார்.
நவ. 23: 'சுகோய் -30' ரக விமானத்தில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை ஏவும் சோதனை வெற்றி.
* மத்திய மாநில அரசுகளின் 162 சேவைகளை பெறுவதற்கு 'உமாங்' செயலியை பிரதமர் மோடி துவக்கம்.
நவ. 24: கடற்படையின் முதல் பெண் பைலட்டாக, உ.பி.,யின் சுபாங்கி ஸ்வரூப் நியமனம்.
நவ. 28: ஐதராபாத்தில் மெட்ரோ ரயிலை பிரதமர் மோடி துவக்கினார்.
இவங்க இவாங்கா நவ. 28: ஐதராபாத்தில் தொழில் முனைவோர் மாநாட்டை, பிரதமர் மோடி துவக்கினார். சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் டிரம்ப் மகளும், ஆலோசகருமான இவாங்கா கலந்து கொண்டார். 'தொழிலில் பெண்களின் பங்களிப்பு' குறித்து பேசினார்.

டிசம்பர்
டிச. 1: லோக்சபாவின் பொதுச் செயலராக ம.பி.யின் சினேகலதா ஸ்ரீவாஸ்தவா பொறுப்பேற்பு.
டிச. 4: இந்தியாவின் முதல் மிதக்கும் சோலார் மின்சார நிலையம் கேரளாவின் வயநாட்டில் துவக்கம்.
டிச. 12: குஜராத்தின் சபர்மதி ஆற்றில், 'கடல் விமானத்தில்' பிரதமர் மோடி பயணம்.
டிச. 15: முத்தலாக் முறையை ஒழிக்க வகை செய்யும் மசோதாவுக்கு, அமைச்சரவை ஒப்புதல்.
ராகுல் ராஜ்யம் டிச. 16: நுாற்றாண்டுகளை கடந்த காங்., கட்சியின் புதிய தலைவராக ராகுல்,47, பொறுப்பேற்றார். நேரு குடும்பத்தில் (மோதிலால் நேரு, நேரு, இந்திரா, ராஜிவ், சோனியா) இருந்து தேர்வான 6வது தலைவர். சுதந்திரம் பெற்ற 71 ஆண்டுகளில் 39 ஆண்டுகள் நேரு குடும்பமே தலைவர் பதவியில் இருந்துள்ளது.
டிச. 19: காஷ்மீரில் ராணுவத்தின் 'ஆப்பரேஷன் ஆல் அவுட்டில்', 207 பயங்கரவாதிகள் கொல்லப் பட்டனர்.
டிச. 23: ராஜஸ்தானில் ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில் 32 பேர் பலி.
* மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பீஹார் முன்னாள் முதல்வர் லாலு குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு.
17,60,00,00,00,000 = 0 டிச. 21: நாட்டை உலுக்கிய, 1.76 லட்சம் கோடி ரூபாய், '2ஜி' ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் ராஜா, ராஜ்யசபா எம்.பி., கனிமொழி உள்ளிட்ட அனைவரையும், டில்லி சி.பி.ஐ., நீதிமன்றம் விடுதலை செய்தது.
டிச. 25: பாக்., சிறையில் உள்ள இந்திய வீரர் குல்பூஷண் ஜாதவை, குடும்பத்தினர் சந்தித்தனர்.
டிச. 26: குஜராத்தில் 99 இடங்களில் வென்ற பா.ஜ., ஆறாவது முறை ஆட்சியை தக்க வைத்தது. விஜய் ருபானி மீண்டும் முதல்வரானார்.
* மும்பையில் புறநகர் ஏ.சி., ரயில் சேவை தொடக்கம்.
டிச. 27: ஹிமாச்சலில் 44ல் வென்று பா.ஜ., ஆட்சியை பிடித்தது. ஜெய்ராம் தாக்கூர் முதல்வரானார். பா.ஜ., ஆளும் மாநிலங்கள் 19 ஆக உயர்வு.
டிச., 27: மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 34,000 புள்ளிகளைக் கடந்தது.
டிச. 29: மும்பை கமலா மில்ஸ் கட்டட தீவிபத்தில் 14 பேர் பலி.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X