ஸ்பெஷல் கட்டுரை | வருடமலர் | Varudamalar | tamil weekly supplements
ஸ்பெஷல் கட்டுரை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

01 ஜன
2018
00:00

வம்பு வளர்க்கும் வடகொரியா
இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து இறுதி வரை உலக செய்திகளில் இடம்பெற்ற ஒன்று வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள். உலகின் வல்லரசான அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி, ஏவுகணை சோதனையை வடகொரியா தொடர்ந்தது.
கிம் ஜான் உன் - டிரம்ப் இடையே வார்த்தை போரும் ஏற்பட்டது. 'வடகொரியா ஏவுகணை சோதனையை தொடர்ந்தால் அந்நாடு மீது போர் தொடுக்கப்படும்' என்றார் டிரம்ப். இதற்கு 'அமெரிக்காவை திருப்பி தாக்குவோம்' என பதிலடி தந்தார் கிம் ஜான் உன்.
கடந்த ஆகஸ்டில் வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு, பதிலடியாக தென்கொரிய ராணுவத்துடன் இணைந்து அமெரிக்கா கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டன. இதனால் கொரிய தீபகற்பத்தில் எந்தநேரத்திலும் போர் மேகங்கள் சூழலாம் என்ற நிலை ஏற்பட்டது.
ஏவுகணை சோதனை
2017 ஏப். 4ல் குறுகிய துாரம் சென்று தாக்கும் ஏவுகணை ஜப்பான் கடலில் விழுந்தது.
மே 14: 2000 கி.மீ., துாரம் வரை சென்று தாக்கும் ஹாசாங் - 12 ஏவுகணையை ஏவியது. 700 கி.மீ., துாரம் வரை பாய்ந்தது.
ஜூலை 28: 3000 கி.மீ., துாரம் வரை சென்று தாக்கும் ஏவுகணையை சோதித்தது.
செப்.15: 3700 கி.மீ., துாரம் வரை செல்லும் ஏவுகணையை சோதித்தது.
அணுகுண்டு செப். 4: 'ஹைட்ரஜன் அணுகுண்டு' சோதனையை நடத்தியது. இதனால் ஹம்யாங் மாகாணத்தில் 6.1 என்ற ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டது.

ஜெருசலேம் யாருக்கு தலைநகர்
மத்திய தரைக்கடலின் தென்கிழக்கில் உள்ள நாடு இஸ்ரேல். இது வடக்கில் லெபனான், கிழக்கில் ஜோர்டான், மேற்கு கரை, தென் மேற்கில் எகிப்து, தெற்கில் செங்கடல் ஆகியவற்றை எல்லையாகக் கொண்டுள்ளது. யூதர்களின் ஒரே தாய்நாடு.
1948ல் உருவான இந்நாட்டில் பார்லிமென்ட் மூலம் மக்களாட்சி நடக்கிறது. ராணுவம், தொழில்நுட்பம், விவசாயம், பொருளாதாரத்தில் உலக நாடுகள் வியக்கத்தக்க வகையில் முன்னேறியுள்ளது. ஆனால் அந்நாடு தலைநகராக கருதும் ஜெருசலேம் மட்டும் இன்றும் பிரச்னையாகவே உள்ளது.
இஸ்ரேலை நாடாக அங்கீகரித்துள்ள 160 நாடுகள், ஜெருசலேமுக்குப் பதிலாக டெல்-அவிவ் நகரில்தான் துாதரகங்களை அமைத்துள்ளன. பிரதமர், அதிபர் இல்லங்கள், பார்லிமென்ட், உச்சநீதிமன்றம், அரசு அலுவலகங்கள் என அனைத்தையும் ஜெருசலேமில் தான் இஸ்ரேல் அமைத்துள்ளது. இருப்பினும் எந்த நாடும் துாதரகத்தை டெல்-அவிவை விட்டு மாற்றவில்லை.
டிச., 6ல் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். துாதரகத்தை அங்கு மாற்றவும் உத்தரவிட்டார்.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாகவும் தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு சவுதி, துருக்கி உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளும், சீனா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட வல்லரசு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
என்ன பிரச்னை
ஜெருசலேம் என்பது வெறும் நிலப்பரப்போ, கட்டடங்கள் நிறைந்த நகரமோ கிடையாது. பண்டைய வரலாற்றில் யூதர்களின் தலைநகரான ஜெருசலேமே தனது தலைநகரம் என இஸ்ரேல் கருதுகிறது. இரு நாடுகளுக்கும் இது புனித நகர் என்பதால் பாலஸ்தீனமும் சொந்தம் கொண்டாடுகிறது. இதனால் பிரச்னை தொடர்கிறது.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X